Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Nov 2012



அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மை பத்திரிக்கை நந்தன கார்த்திகை (நவம்பர் - 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்
1.   சித்தர்கள் போற்றித் தொகுப்பு ….
2. மகான் கோரக்கமகரிஷி ஆசி நூல் –
3. சிவஞானபோதம் 12ம் சூத்திரம் விளக்கம் - குருநாதர் அருளுரை
4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் ….

மகான் கொங்கணர் ஆசிநூல்

சூட்சுமங்கள் யாவும் மக்களுக்கு
சுப்பிரமணியரே ஆசான் வழி பேசிட
சூட்சும தேகம் கொண்டு உலகை
சுத்தி செய்ய வந்த ஆசான் மொழி

மொழி தாங்கிவரும் நல் நூலாம்
மொழிகுவேன் ஞானத்திருவடியை
தெளிவு ஞானம் கருதியே
தெரிவிப்பேன் வணங்கி ஏற்று

ஏற்றுமே பூசை அறை வைத்து
இனிதே ஞானிகள் நாமசெபம்
பற்றுடன் போற்றிகள் வாசித்து
பாருலகில் பிறபக்கம் தொடர வேணும்
- மகான் கொங்கணர் ஆசிநூல்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,
ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.
ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள் செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 37 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய் அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.

திருவிளக்கு பூஜை உங்கள் பகுதியில் செய்ய தொடர்புக்கு R.சுரேஷ் - 94434 21935

துவக்கப்பாடல்

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
ஓங்காரக்குடிலில் 12.01.1997 அன்று அருளிய

அருளுரை
சிவஞானபோதம் 12வது சூத்திரம் - விளக்கம்

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்,

இன்றைய தேதி 12.01.1997. இடம் ஓங்காரக்குடில். கிழமை ஞாயிற்றுக்கிழமை.

செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானு மரனெனத் தொழுமே.
- சிவஞானபோதம் - பன்னிரெண்டாம் நூற்பா.

செம்மலர் நோன்றாள் - மகான் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்தில் கடைசி பாடலான 12வது பாடலாகும். இறைவன் திருவடி, ரோஜா இதழ் போன்று மென்மையாக இருக்கும். செம்மலர் என்றால் செவ்விய மலர். சில மலர்கள் உதாரணமாக சம்பங்கி மலரெல்லாம் வெள்ளையாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதே சமயத்தில் அனிச்ச மலர் ரொம்ப மென்மையாக இருக்கும். அதை முகர்ந்த உடனேயே வாடிப்போய்விடும். மோப்பக் குழையும் அனிச்சம் என்று சொல்வார். ஆக ஞானிகளின் திருவடி ரோஜா இதழ் போன்று மென்மையாக இருக்கும். ஏனென்றால் ஞானிகளுக்கு பாரமான (எடை) உடம்பில்லை, நுண்ணுடம்புதான்.

நுண்ணுடம்பு என்பது பார்ப்பதற்கு பாதம் தெரியும். ஆயிரத்தெட்டு மாற்றுள்ள இளஞ்சூரியன் போன்றிருப்பார்கள். ஆனால் தன்னை மறைத்துக் கொள்வார்கள். அதுதான் ஒரு பெரிய ஆற்றல். கடுகைக் கூட நம்மால் மறைக்க முடியாது. கடுகு கண்டால் மறைக்க முடியாது. அதை அழிக்கணும். ஆனால் மறைக்க முடியாது. ஒரு கடுகை கூட நம்மால் மறைக்க முடியாது. ஆனால் அறுபது, அறுபத்தைந்து கிலோ எடையுள்ள ஒரு உடம்பை மறைத்துக் கொள்கிறார்கள். அது ஜோதி உடம்பு, பாதம் தெரியும், பிடித்தால் பிடிபடாது, பார்த்தால் நன்றாக சிரிப்பார்கள், பேச முடியாது.

அவர்கள் முடியெல்லாம் பார்த்தால் எல்லாமே பொன்வடிவாக இருக்கும். ஆனால் எல்லாமே நிர்வாணமாகத்தான் நிற்பார்கள். யாரும் உடை தரிக்க மாட்டார்கள். ஆனால் உடை தரிக்கவில்லை என்ற குறைபாடே இருக்காது. எல்லாம் நிர்வாணம்தான். பார்த்தால் அப்படியே ஒளி உடம்பு, தகதகவென்று இருக்கும். ஆனால் பாதங்கள் மென்மையானதுதான், பிடியேபடாது, அரூபமாக இருக்கும். ஆனால் ஜோதியாக இருக்கும். இப்ப ஜோதியை பிடிக்க முடியுமா? பிடிக்க முடியாது.

இதுபோன்று உள்ளவர்களுடைய திருவடி, செம்மலர் நோன்தாள். நோன்மை என்றால், வலிமை பொருந்தியது என்று அர்த்தம். அதே சமயத்தில் ரோஜா இதழ் போன்று மென்மையாக இருக்கும் பாதம், ஆனால் இமய மலையை உதைத்தால், தட்டி விட்டால் இமயமலை தூளாய்போகும். அவ்வளவு பெரிய வல்லமை உள்ளவர்கள். என்னய்யா? இவ்வளவு வல்லமை எப்படி வந்ததென்றால், அருந்தவம் செய்ததினால் வந்தது. அவர்கள்தான் அருந்தவம் செய்த மக்கள்.

பெரியவர்கள் எல்லாம் பெருமைக்குரிய தவம் செய்த மக்கள். எப்படிப்பட்ட தவம் செய்த மக்கள்? முதலில் ஆசி பெற்றார்கள். ஞானிகள் ஆசியால்தான் நாம் முன்னேற முடியுமென்ற உறுதியுடன் வந்தவர்கள். ஒரு மனிதன் தன் அறிவைக் கொண்டு போக முடியாது. ஞானிகள் அத்தனை பேரும் நோன்மை, வலிமை பொருந்திய திருவடியை பெற்றவர்கள். அவர்கள் மீது இப்படி ஒரு உயரிய நம்பிக்கை வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் நாம் கற்ற கல்வி பயன்படாது. நமது முயற்சியும் பயன்படாது. திருவடியே துணையென்று பூரண சரணாகதி அடைய வேண்டும்.
நீதானப்பா! சகலத்திற்கும் நீதானய்யா! என்னுடைய அறிவு, கல்வி எல்லாம் பயன்படாதப்பா! நீதான் என்னைக் காப்பாற்றணும் என்று பேச்சளவில் இல்லாமல், இயல்பாகவே, தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.
ஆக மனித வர்க்கம் எப்படி இருக்கிறது? தான் கற்றதே போதுமென்று நினைக்கிறார்கள், தான் அறிந்தது மட்டும் போதும், எல்லாமே தெரிந்ததாக நினைக்கிறார்கள். இது பாவத்தின் சின்னம்.

எல்லா வகையான முயற்சியும் செய்வான். கடைசியில் தோல்வி வந்த பின்னும் ஒப்புக் கொள்ள மாட்டான். நான் அப்படி செய்திருந்தால் சரியாக வந்திருக்கும், இப்படி செய்திருந்தால் சரியாக வந்திருக்கும் என்று சொல்வானே தவிர, நம்மிடம் அறிவில்லை . இதை சாதிக்கக் கூடிய அறிவு நமக்கில்லையென்று நினைக்க மாட்டான். தோல்விக்கு மேல் தோல்வி வந்தாலும் அந்த எண்ணம் வராது. யாரேனும் ஞானிகள் வந்து உபதேசிக்க வேண்டும். உன் அறிவு பயன்படாதய்யா! நீ கற்ற கல்வி, பெற்ற அனுபவம், இந்த உடம்பை நம்பியிருக்கிறாய், இப்படி எல்லாவற்றையும் நம்பியிருக்கிறாய். இது பயன்படாது. சில காரியங்கள் நடந்திருக்கும். அது முன் செய்த நல்வினை காரணமாக நடந்திருக்குமே தவிர உன்னுடைய திறமையினால் இல்லை.

எல்லாம் சிவன் செயலென்று நம்ப வேண்டும். சிவன் என்பதும் ஞானிகள் என்பதும் எல்லாம் ஒன்றுதான். ஞானிகளும் சிவபெருமானும் ஒன்றுதான்.

குருவே சிவமென கூறினன் நந்தி.

ஆக இப்படி பூரணமாக நம்புதல், எல்லாமே உன் திருவடிதான் என்று நம்பி, பூஜை செய்தால் அவர்களுடைய அந்த நம்பிக்கைதான் அந்த வாய்ப்பை தரும். சொல்லி சொல்லி தேற்றிக் கொண்டு வர வேண்டும்.
கடைசி வரையிலும் நமது மனம் நம்மை முன்னேற விடாது. நமக்கு திறமை இருக்கிறது. நாம் அப்படி செய்யணும், இப்படி செய்யணும் என்று சொல்லும். தினம் பயிற்சி கொடுத்துக் கொண்டே வந்தால்தான் ஆசான் மேல் நம்பிக்கை வரும்.
திருவடிதானப்பா துணை. நம் அறிவு போதாது. திருவடிதான் நமக்கு துணையென்று நினைக்க வேண்டும்.

அப்போ எந்த செயலும் நாம் செய்கிறோம் என்ற நினைப்பு எது வரை இருக்கிறதோ? அதுவரை நாம் தேர்ச்சியடையவில்லை என்று அர்த்தம். நடத்துவது, எல்லாம்வல்ல பெரும் சக்தி, சிவம் அல்லது பிரம்மம் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

குடும்பம் நடத்துகிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள் அல்லது வேறு எது செய்தாலும் சரி! அவன் சிவத்தையும் பார்க்க மாட்டான், ஒன்றையும் பார்க்க மாட்டான். முடிந்தவரைக்கும் பாடுபடுவான். எங்கேயாவது விபத்தில் அடிபட்டால் தவளை மாதிரி கிடப்பான். அதுவரையிலும், சாகிற வரையிலும் அவனுடைய கொள்கை கோட்பாடு அப்படி.

ஆன்மீகவாதிகள், சுத்த ஆன்மீகவாதிகள் பூரண சரணாகதி அடைவார்கள். பூரண சரணாகதி என்பது ஞானிகளிடம், நான் உனக்கு அடிமை ஆகணும். நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டும்.

என்னடா! அடிமையாக வேண்டுமென்று கேட்டான். உன் திருவடியை பூரணமாக நம்பி பூஜை செய்ய வேண்டுமென்று கேட்டான். உன்னுடைய அடிமையாக நீ எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டான். நீ எனக்கு அருள் செய்ய வேண்டுமென்றும் கேட்டான்.

இது இன்னும் பெரிய வார்த்தை. நான் உனக்கு கொத்தடிமையாக வேண்டுமய்யா. கொத்தடிமை என்றால் என் உடல், பொருள், ஆவி அனைத்தும், என் குடும்பத்தார்கள், என் பிள்ளைகள், என் சொத்து, என் அறிவு அனைத்தும் உன் திருவடிக்கே அர்ப்பணம். இப்படியெல்லாம் சொல்லி பூரண சரணாகதியென்று சொல்லி அப்படியே ஆசானை வீழ்ந்து வணங்க வேண்டும்.

இப்படி தினந்தோறும் கேட்டு சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும். வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வெளியில் இருக்கும் பேச்சு, அந்த துடிப்பு, அந்த கம்பீரம் அத்தனையும் ஞானிகளை வணங்க உள்ளே போகும்போது S மாதிரி வளைய வேண்டும். அப்படியிருந்தால் அது வலிமை பொருந்திய பாதமாக இருக்கும். இப்படி தினந்தினம் கேட்க வேண்டும். ஒரு நாளை கூட வீணாக போக்கக் கூடாது.

அப்படி வீணாக நாள் போனால், நீ என்னை கவனிக்கவில்லை, இன்றைய பொழுதை வீணாக்கி விட்டேன். என்பால் கருணை கொண்டிருந்தால் நான் அப்படி செய்திருக்க மாட்டேன். நான் பூஜை செய்ய வேண்டுமென நினைக்கிறேன். ஆனால் மறந்து போகிறேன்.

காலை ஏழு மணிக்கு பூஜை செய்ய வேண்டும். எனக்கு அந்த நினைவு வரவில்லை. நான் எப்போதும் உன் நினைவாக இருக்க வேண்டும். ஆனால் உன் நினைவை விட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். நீதான் காப்பாற்ற வேண்டுமென்று ஆசானிடம் கேட்க வேண்டும்.

பூஜை செய்வதற்கும் ஆசி வேண்டும். தடைபட்டாலும் அதற்கு நீதான் காரணம். நீதான் எனக்கு கருணை காட்டாமல் விட்டு விட்டாய். இல்லாவிட்டால் நான் பூஜை செய்திருப்பேன் என்கிறான். அடே! இது ஒரு குறை. இப்படி குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

நீர் ஏன் என்னை கவனிக்கவில்லை? எனக்கு பூஜை செய்கின்ற உணர்வை நீர் தர வேண்டுமல்லவா? நடுஜாமம் எழுந்திருந்து பத்து நிமிடம் பூஜை செய்ய நினைக்கிறேன். ஆனால் நான் தூங்குகிறேன். என்னை தூங்க விட்டு விட்டாய். அப்படி தூங்குவதற்கு காரணம் என்ன? நான் என்ன அவ்வளவு பாவம் செய்தேனா? நான் பாவம் செய்திருக்கிறேன், ஆனாலும் நீ என்னை தட்டி எழுப்பி இரவு பன்னிரெண்டு மணிக்கு என்னை நாமஜெபம் செய்ய வைக்க வேண்டும்.

அது மாதிரி செய்யாமல் நீ என்னை கை விட்டு விட்டாய். இது நியாயமில்லை. நான் உன் அடிமை. என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படியே ஞானிகளிடம் கேட்டு வர வேண்டும்.

நான் பூஜை செய்யாமல் இருப்பதற்கு காரணம் உன் குறைதான். நான் உன் அடிமை. நீ என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படியே கேட்டு வர வேண்டும். என்னை நீங்கள் அடிமையாக ஏற்றுக் கொண்டால் நிச்சயம் என்னை நீ இரவு பன்னிரெண்டு மணிக்கு எழுப்பியிருப்பாய். ஆனால் இரவு பன்னிரெண்டு மணிக்கு என்னை எழுப்பாமல் விட்டது, என்னை நீ ஏற்றுக்கொள்ளவில்லை அதனால்தான் என்பான்.

என்ன! எப்ப பார்த்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறான். இதைதான் பூரண சரணாகதி என்று சொல்வது. குறை சொல்லிக் கொண்டே இருப்பது. பூஜை செய்வதற்கு காரணம் தேடுவது, பூஜை செய்வதற்கு வாய்ப்பு தந்தாய். ஏன் மறுநாள் அந்த உணர்வு வரவில்லை ?

நான் பூஜை செய்யும்போது ஏன் இன்னும் மனம் உருகவில்லை? அவனவன் உருகி பூஜை செய்கிறான். எல்லாம் முன்னேறுகிறான். ஆனால் எனக்கு ஏன் இன்னும் மனம் உருகவில்லை? உருகாமல் இருப்பதற்கு காரணம் நீதான். என்னை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்பான்.
என்னடா! முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாய், ஏற்றுக் கொண்டோம். உருகி தியானம் செய்வதற்கு நீ எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டான், பூஜை செய்து மனம் உருகவும் அருள் செய்ய வேண்டும்.

இப்படி பூஜை செய்யவும் அருள் செய்ய வேண்டும். என்ன அப்படி ஒரு நிலைமை? இப்படி கேட்டுக் கொண்டே வரணும். அது பெரிய ஒரு வேண்டுகோள். ஆக பூஜை செய்வதற்கு நீ அருள் செய்ய வேண்டுமென்று கேட்பதும் வேண்டுகோள்.

பூஜை செய்வதற்கு உற்சாகம் தரவும் வேண்டுகோள். பூஜைக்குரிய அறிவும் ஆற்றலும் தர வேண்டுமென வேண்டுகோள். இப்படி தினந்தினம் ஆசானைக் கேட்டு வரணும்.

இவர்களின் சிந்தை எப்படி இருக்கென்றால், இருபத்தி நான்கு மணி நேரத்தில், மனைவி, மக்கள், செல்வம் இது குற்றமில்லை. இதற்கிடையில் உள்ளே புக வேண்டும். உள்ளே புகுந்து தினந்தினம் இப்படி கேட்டு வரணும். இப்படி இருந்தால் அவன் நம்மை ஏற்றுக் கொள்வான். இப்படி செய்தவன் தான் தவசியாக முடியும்.

நாட்கள் வீணாகப் போவதற்கு காரணம் எனது தவறில்லை. நான் தவறு செய்ய மாட்டேன். நாள் வீணடிப்பதற்கு நீதான் காரணமென்று சொல்லுகின்ற வல்லமை ஒருவனுக்கு இருக்க வேண்டும். அதுதான் சிறப்பறிவு. அப்ப அவன் பூரண கொத்தடிமை ஆகி விட்டானென்று அர்த்தம்.

ஆக அவர்கள் மனம் மகிழும்படியாக, பூஜை செய்ய வேண்டும். மனம் எப்ப மகிழும்? கேட்கணும் நீ என்னை ஏற்றுக் கொள்ளணும். என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாய், தெரியும் எனக்கு. என்ன காரணம்? நான் எடுத்த ஜென்மங்கள் கணக்கில் அடங்கவில்லை. செய்த பாவமும் கணக்கில் அடங்கவில்லை .

நான் உன் ஆசி பெற நினைக்கிறேன். அது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல் ஆகும். நீங்களெல்லாம் அளவில்லா தவம் செய்த மக்கள் பெருமைக்குரியவர்கள். நான் அந்த இடத்திற்கு வரவில்லை. ஆனால் நான் பேராசை உள்ளவன். உன் ஆசியை எப்படியும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியை ஒழிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், என்னுடைய தகுதி எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி நீ அணுவணுவாக அறிந்திருக்கிறாய். ஆனாலும் எத்தனையோ பஞ்சமாபாவிகளை நீ இரட்சித்திருக்கிறாய். அவர்களுக்கு நீ அருள் செய்திருக்கிறாய். இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை இரட்சிக்கணும். இப்படியெல்லாம் கேட்கணும்.

அப்படி கேட்டு கேட்டுப் பெறணும். யாரொருவன் தொடர்ந்து நாமத்தைச் சொல்கிறானோ, ஞானிகள் தொடர்பு அதிகமாக ஆக, உருகும் தன்மை வரும். தொடர்பு அற்றுப் போனால், உருகும் தன்மை வராது. தொடர்பு எப்படி வருமென்றான். தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் ஆசான் திருமூலர் சொல்வார், வாசித்தல் பூசித்தல் போற்றல் செபித்திடல் என்பார். ஆக இது மாதிரியெல்லாம் செய்தால்தான், அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த செம்மலர் தொடமுடியும். அவன் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது சின்ன விஷயமல்ல.

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்றார் ஆசான் அருணகிரிநாதர். அப்பேர்ப்பட்ட ஆசான் என்ன செய்கிறான், தினம் பூஜை செய்ய பூஜை செய்ய ஞானிகளுக்கும் ஆசைதான்.

உலகமெல்லாம், பிள்ளைகளெல்லாம் நாம் அறிந்த உண்மையை அறியவேண்டும். அப்படியென்று நல்ல மனதுள்ளவர்கள்தான். ஆனாலும் நாம் அவனைப் போய் தொட முடியாது. காரணம் அவன் நேராக வந்து சொல்ல முடியாது.

நம் சொற்குரு என்ன செய்வார்? தூண்டுவான், விடாதே பிடி, விடாதே பிடி என்று தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஞானிகளும் சொற்குருவிடம் சொல்வார்கள். நீ சொல்லப்பா! நாங்கள் நல்ல மனதோடு இருக்கிறோம். எல்லோரும் முன்னேற வேண்டும். அவரவர்கள் கடவுளை அடைய வேண்டும். அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். அவரவர் மரணமில்லா பெருவாழ்வு அடைய வேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம்.

ஆனால் நாங்கள் இறங்கி சொல்ல முடியாது. நீ சொல்லு என்று சொல்வார்கள். நாங்கள் விடாமல் சொல்லித்தான் ஆக வேண்டும். இதையே பேசுவோம், பேசிப் பேசி அவர்களுடைய திருவடியைப் பற்றச் செய்வோம்.

இப்படியெல்லாம் சொல்லி ஞானிகள் மனம் உருகும்படி சொல்லணும். நெருங்க நெருங்க மனம் உருகுவார்கள். நாமஜெபம் செய்யச் செய்ய நெருக்கம் வருகிறது. நெருக்கம் வர வர மனம் உருகுகிறான். உருக உருக உருக உண்மை தெரிகிறது. உண்மை தெரிய தெரிய அதிலிருக்கும் பலகீனம் தெரிகிறது. பலகீனத்தைப் புரிந்து கொண்டால் பிறவியை உடைத்தெறிகிறான். ஆக இதுதான் அமைப்பு.

என்ன சொல்கிறார்? செம்மலர் நோன் தாள் - அவன் திருவடி ரொம்ப மென்மையானதுதான். அதே சமயத்தில் வலிமையுள்ளதுதான். சேர ஒட்டாது - நெருங்க முடியாது. அவன் நல்ல மனதுள்ளவன்தான்.

தலைவன் அத்தனை பேரும் நல்ல மனதுள்ளவர்கள் தான். நம்மை எல்லாம் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார்கள்.

அய்யோ பாவி! பல ஜென்மங்களில் செய்த பாவம் பிள்ளை தடுமாறுகின்றான் என்று நினைக்கிறான். அவனாலே சொல்ல முடியவில்லை. நாம் சொன்னாலும் இவனுடைய வினைப்பயன் நெருங்க விடமாட்டேன் என்கிறது. இப்படி இருந்தால் அது சேரலொட்டாது.

சேருவதற்கு நாங்கள் குருநாதர் முயற்சித்தாக வேண்டும். நாங்கள் சொல்ல வேண்டும். அவனை, தலைவனை அறிமுகப்படுத்த வேண்டும். பூஜை செய்விக்க வேண்டும். இவன் இல்லறத்தில் போட்டு உழட்டிக் கொண்டு இருப்பான். அப்போது சொல்வோம், இந்த இல்லறம் வேண்டும் தானய்யா! அதற்காக அதிலேயே என்ன தேனில் விழுந்த ஈயாட்டம் கிடந்து கொண்டுள்ளாய்! “விடுபட்டு வா” என்று சொல்லணும்.

இப்படி சொல்லி சொல்லி சொல்லி, அவனுக்கு நிழல் போலிருக்க வேண்டும். சொற்குரு என்பவன் யார்? சற்குருவின் பூரண ஆசி பெற்றவன். சற்குருவின் பூரண ஆசி பெறாமல் ஒருவன் சொற்குரு ஆக முடியாது. இல்லையென்றால் என்ன செய்வான்? ஒன்று கிடக்க ஒன்று பேசுவான்.

சொற்குருதான் வாசி வசப்பட்ட மக்கள். ஆசி பெற்ற மக்கள் உந்தி கமலத்தில் தலைவன் தங்கி இருப்பதனாலே, இவர்கள்தான் சொற்குருவாக இருக்க முடியும். சொல்லுகின்ற குரு, சற்குருவின் பெருமையை சொற்குரு சொல்ல வேண்டும். இப்படி சொல்லி சொல்லி மக்களை திரட்டணும்.

அவன் மூலம் அறிந்து திருவடியைப் பற்றணும். திருவடியைப் பற்றச் செய்து ஆசான் ஞானபண்டிதன் என்ன செய்வாரென்றால், குகையை அடைத்து வைப்பார். புருவ மத்தி என்ற குகையில் வாசியை செலுத்தி வைத்து, அவரும் ஆசானும் தங்குவார். குகையை அடைத்து வைக்க வேண்டும். குகையை அடைத்து வைப்பதுதான் மோன நிலை என்பதும், அதுவே பூரணநிலை என்றும், மௌன நிலை என்றும் சொல்வார்கள்.

அப்படி நாங்கள் சொல்லவில்லை என்று சொன்னால், எங்களுக்கு சாபம் வந்து விடும். ஆனால் நாங்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்போம். தெளிவான இடத்தை சொல்வோம். திருவடியைப் பற்றச் செய்வோம். தினந்தினம் தூண்டுவோம். ஆசானை வாசி நடத்த சொல்வதற்கு ஏற்பாடு செய்வோம்.

அவன் வாசி நடத்தித் தருவதற்கு முதலில் இவர்களிடம் என்ன சொல்வோம். தானதர்மம் செய்யுங்கள். பொருள் சேர்க்கும்போது நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்க்க வேண்டும். ஆன்மீகவாதிகள் சொற்குருவிடம் பாவி என்ற பேர் எடுத்துவிடக்கூடாது.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை என்று சொல்லியிருக்கிறார் ஆசான் திருவள்ளுவ பெருமான். பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சி சேர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட பொருளை பகுத்துண்டு வாழ வேண்டும். தினம் தியானம் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் சொல்வார். இப்படி சொல்லி சொல்லி திருவடியை பற்ற வைப்பான்.

அவங்க ஆன்மாக்களை பக்குவப்படுத்துவதுதான் எங்கள் வேலை. இந்த ஆன்மாக்களை முறைப்படுத்தி, பக்குவப்படுத்தி அவன் திருவடியில் கொண்டுபோய் தள்ள வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள். நேராக வர முடியாததனால், வாசி நடத்திக் கொடுத்து புருவமத்தி என்று சொல்லப்பட்ட குகையை அடைத்திடுவார்கள். அதுதான் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்று சொன்னார் ஆசான் திருவள்ளுவபெருமான். மறைமுக பாஷை அது.

வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
- திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - குறள் எண் 38.

தினந்தினம் தியானம் செய்தல், தானம், தியானம், பண்புகள், அடக்கம், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், பாவியாகாதிருத்தல், இனிமையாகப் பேசுதல், நல்ல நூல்களைப் படித்தல், சான்றோர்களின் நட்பு வைத்தல் இப்படி இருக்க வேண்டும்.

வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே போகாதிருத்தல். அதிகமாக டி.வி, டெக் இதில் போட்டு ஒலட்டிக் கொள்ளாதிருத்தல், வீண் வார்த்தை பேசுபவர்களோடு தொடர்பு அற்றிருத்தல் இதெல்லாம் இந்த துறைக்கு அவசியம்.
அப்படியெல்லாம் அவனைப் பக்குவப்படுத்தி, திருவடியைப் பற்றச் செய்து, அவனும் நல்ல நெறியை அடைய வேண்டும். அதை நாங்கள் விரும்புவோம்.

அப்படி நாங்கள் விரும்பவில்லையென்றால், வேறு வழியே இல்லை, விரும்பிதான் ஆக வேண்டும், செய்துதான் ஆக வேண்டும். ஞானிகள் ஏன் இந்த வாய்ப்பைத் தந்தார்கள்.

உண்மைப் பொருளை அறியக்கூடிய வாய்ப்பை எனக்குத் தந்தும், இதுமாதிரி வாசி வசப்பட செய்தும், அவர்கள் மூலமாக தொண்டர்களுக்கு

வாய்ப்பைத் தந்து, எல்லோரையும் அவர்கள் திருவடியைப் பற்றச் செய்து, எங்கு பார்த்தாலும் ஞானிகள் உருவாவதைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சி உள்ள மக்கள். அளவில்லா பற்றுள்ள மக்கள் ஞானிகளெல்லாம், எங்கு பார்த்தாலும், ஞானிகள் உருவாக வேண்டுமென்று நினைப்பார்கள்.

அவர்கள் தான் முறைப்படுத்த வேண்டும். பாவச்சுமை அதிகமாக இருந்தால் அறிவு வேலை செய்யாது, உயிர்வதை செய்வான். உயிர்வதை செய்கின்ற மக்களுக்கு குணக்கேடு இருக்கும். உயிர்வதை செய்ய செய்ய குணக்கேடு வரும்.

உயிர்வதை என்றால் என்ன? ஒரு ஆட்டை அறுப்பதாகும். அதைவிட கொடுமை என்னவென்றால், நம் மேல் அளவில்லாத அன்பு உள்ளவனை மனம் நோகப் பேசினால் அதுதான் உயிர்க்கொலை செய்வதாகும்.

என்னய்யா ஆடு அறுப்பதுதான் உயிர்க்கொலை என்கிறாயா? இல்லை. அது அப்போதே செத்துப் போகிறது, பிரச்சனையில்லை. தாயைக் கொடுமைப்படுத்துவான், தாயை கன்னாபின்னாவென்று பேசுவான். அவள் வெளியே தெரியாமல் சாவாள். அவள் ஒரே நாளில் சாவதை இவன் பேசிபேசி நித்தம்நித்தம் அவள் மனதை நோகடித்து நித்தம் நித்தம் தாயைக் கொல்வான். சொல்லாலே கொல்வான். வினை சூழ்கிறது, தந்தையைக் கொல்வான், சொல்லாலே கொல்வான். வினை சூழ்கிறது. மனைவி தவறு செய்வாள். ஏதோ அறியாமையில் தவறு செய்வாள். அவளைப் போட்டு தினந்தினம் கொடுமைப்படுத்துவான். அவள் வெளியே தெரியாமல் மனம் நொந்து சாவாள்.

ஆகா நம்மிடம் வேலை செய்பவன், அவனுக்கு சரியான கூலி கொடுக்காமல் கசக்கி பிழிந்தால், அவன் மனம் நொந்து போவான். இந்த மனம் நோவு தாங்காமல் சாகிறான். வேலை செய்பவன் உழைப்பு தாங்க முடியாமல் சாகிறான். வேலை செய்பவனும் சாகிறான். தாய் சாவாள், நித்தம் நித்தம் சாவாள். தந்தை சாவான். உடன் பிறந்தவன் சாவான். பேசுகிற அத்தனை இடத்திலும் வன்சொற்கள் பேசுகின்ற அத்தனை இடத்திலும், அத்தனை பேரும் கேட்டுக் கொண்டு சாகிறார்கள். இதனுடைய விளைவுகள், ஆன்மாவை மாசுபடுத்தும். ஆன்மா மாசுபடும்போது குணக்கேடு வரும். இதை ஆசானிடம் கேட்க வேண்டும்.

எனக்கு முன் கோபம் வருதப்பா. இப்படி எனக்கு ஆசி தந்திருக்கிறாய், பொருளுதவி செய்திருக்கிறாய், சிந்திக்கக் கூடிய அறிவும் தந்திருக்கிறாய், படித்தால் புரியக் கூடிய சிறப்பறிவும் இருக்கிறது, நல்ல சுற்றுப்புற சூழ்நிலை தந்திருக்கிறாய், நல்ல மனைவி வாய்த்திருக்கிறாள், நல்ல உடல் அமைந்திருக்கிறது, நல்ல உத்தியோகம் அமைந்திருக்கிறது, பெருமையெல்லாம் இருக்கிறது, ஆனாலும் எனக்கு முன் கோபம் வருகிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமென்று கேட்கச் சொல்ல வேண்டும். அப்பப்பா இதையெல்லாம் கேட்கச் சொல்ல வேண்டும். இது சொற்குருவின் வேலை. இப்படி செய்துதான், இனிமையாக பேச கற்றுக் கொள்ளணும்.

நித்தம் நித்தம் செத்தால் என்ன ஆகும்? இதற்கு ஒரேடியாக கொன்று விடலாம். ஆனால் நித்தம் நித்தம் சாகடிக்கின்றானே? என்னால் முடியவில்லை. அப்பா இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்திருக்கிறான். என்னுடைய பேச்சில் பிறர் வாழ வேண்டும். பிறர் மகிழ்ச்சியடைய வேண்டும்.

பிறர் மகிழ்ச்சியடைந்தால் என்னால் அவன் வாழ்கிறான். என்னால் சாகிறான் என்றால், நித்தம் நித்தம் சாகின்றான். காரணம் வறுமைப் பட்டதன் காரணமாக, ஏழ்மையின் காரணமாக சில பேர் நம்மிடம் வேலை செய்யலாம் வேறு வழியில்லாமல், அறியாமை உள்ள தாயாகவும், தந்தையாகவும் இருக்கலாம். ஆக ஆசி இருந்தால் முறைப்படுத்தி விடுவார்கள் ஞானிகள். நம் இஷ்டத்திற்கு வருவார்கள்.

ஆக பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. தாங்க முடியாத அளவிற்கு துன்பத்தை தரக்கூடாது. ஆசானிடம் கேட்க வேண்டும். என்ன கேட்க வேண்டும்? என்னுடைய தாய் தந்தை மூடர்களாக இருக்கிறார்கள். ஒன்று அவர்களை முறைப்படுத்து. இல்லையென்றால் என்னை ஒதுங்கச் செய்யப்பா. நான் ஏன் அவர்களை துன்பப்படுத்திப் பேச வேண்டும்? ஏன் மனைவியை பேச வேண்டும்?

இந்த மாதிரி செயல்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்ற தடைப்படுத்தும் என்பது எனக்குத் தெரியவில்லை. நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும். என்னை முறைப்படுத்து, என்னை முறைப்படுத்து என்றான்.

நீங்களெல்லாம் முறைப்படாமல் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நீங்கள் முறைப்படுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட நெறிக்குட்பட்டு வாழ்ந்திருக்கிறீர்கள். எனவே என்னை முறைப்படுத்து என்றான். என்னை முறைப்படுத்து முறைப்படுத்து என்றான்.

வரையறைக்கு உட்பட்டு என்னை முறைப்படுத்து. என்னை அடிமையாக்கிக் கொள். என்னை அடிமையாக்கிக் கொள். என்னுடைய செயலுக்கு என்னை விட்டு விடாதே. என்னுடைய செயலுக்கு விட்டு விட்டால் நான் கெட்டு விடுவேன். என்னை அடிமைப்படுத்திக் கொள். என்னை அடிமைப்படுத்திக் கொள். இது பெரிய வேண்டுகோள். இப்படிப்பட்ட பெரிய வேண்டுகோளை ஞானிகளிடம் கேட்க வேண்டும்.

தகுதியுள்ள நட்பு இருக்க வேண்டும், தேவையில்லாமல் வீட்டுக்கு வருவான். ரொம்ப நேரம் பேசுகிறான் என்று சொன்னால், சரி இவன் வீண் வார்த்தை பேசுகிறான், நம் நேரத்தை இவன் கெடுக்கிறான்.

இந்த நேரம் ரொம்ப முக்கியமான நேரம். பத்து நிமிடம் தியானம் செய்வது தடைபடுகிறது. சிலருக்கு தியானம் செய்யவே சோம்பேறித்தனம் வரும். தியானம் செய்ய வாய்ப்பில்லை என்பான். உட்கார்ந்து தியானம் செய்வதற்கு மனது வராது. இதற்கு ஆசானைக் கேட்க வேண்டும்.

ஆர்வமாக தியானம் செய்ய வேண்டுமப்பா. திருவடியைப் பற்றுவதற்கு எனக்கு ஆர்வம் தர வேண்டும். பூஜை செய்வதற்கு சோம்பேறித்தனப்படக் கூடாது. அப்படி சோம்பேறித்தனப்பட்டால் மறுபடி ஜென்மம் எடுக்க வேண்டி வரும். பூஜை செய்து ஆசானை கேட்டுக் கொள்ள வேண்டும். இப்படி விடாமல் பூஜை செய்ய செய்யதான் சேரல் ஒட்டும் என்றார்.
செம்மலர் நோன் தாள் சேரல் ஒட்டா - அவனுடைய திருவடி மிருதுவானது, அதே சமயத்தில் வலிமை பொருந்தியது. என்ன காரணம்? அவன் எமனை வெல்கின்ற வல்லமை உள்ளவன். எமனை வெல்கின்ற வல்லமை உள்ள திருவடி அது. ஆகவே வலிமை பொருந்தியது, மிருதுவானது, பஞ்சினும் ரொம்ப மிருதுவானது, மலரை விட மிருதுவானது, ரோஜா இதழினும் மிருதுவானது. ஆக சேரலொட்டாது என்றார். என்ன காரணம்? திருவடியை சேர ஒட்டாது வேறு வழியில்லை. அதற்கென்ன உபாயம்? மெய்கண்டதேவர் உண்மை கண்ட தேவர்.

மெய்கண்டன் என்றால் தெய்வம். உண்மையை கண்டவன் உயர்ந்தவன் என்று அர்த்தம். மெய்கண்டதேவன் என்றால் உண்மையை அறிந்த தலைவன் என்று அர்த்தம். உண்மையை அறிந்த தலைவன் உனக்கு சேர ஒட்டாது, சேர முடியாது, திருவடியை நீ சேர முடியாது என்றார். நான் சுட்டிக்காட்டக் கூடிய திருவடி ரொம்ப மிருதுவானதும், வலிமை பொருந்தியதும் ஆகும். இருப்பினும் அத்திருவடியை உன்னால் சேர முடியாது.

அம்மலங் கழீ இ அன்பரொடு மரீஇ என்றார். ஒவ்வொரு உயிரும் தலைவனை அணுக முடியாமல் இருப்பதற்கு இந்த உடம்புதான் காரணம். சரி இந்த உடம்பை விட்டு விடலாமா? இந்த உடம்பு இல்லாவிட்டால் கடவுளை அடைய முடியாது. கடவுளை அடைவதற்கு இந்த உடம்புதான் ஏணி. உடம்புதான் நமக்கு ஒரு தெப்பம், படகு போன்றது. இந்த உடம்பில்லாமல் கரையைக் கடக்க முடியாது.

இதன் இரகசியம் இப்ப உனக்குத் தெரியாது. இந்த தேகம் மும்மலத்தால் ஆனது. இந்த உடம்பே ஒரு மலச்சேறு. நான் சாப்பிட்ட உணவின் சாரம் இது. கழிவை வெளியே தள்ளும். மல உடம்பு என்று இதை சொல்வார்கள். ஞானிகளின் திருவருள் துணை கொண்டு நம்மை வஞ்சிக்கக் கூடிய மும்மலத்தை, மல உடம்பை தவ முயற்சியால் உடைத்தெறிகிறார்கள், அமிழ்தபானம் சிந்தும். அவனுக்கு எதிரியாக இருக்கக் கூடிய கபத்தையும் அறுத்துவிடுவார்கள். நாளுக்கு நாள் நாளுக்கு நாள் இந்த உடம்பு போய்விடும். அற்றது பற்றெனின் உற்றது வீடு என்று சொல்வார்கள்.

யோக நெறியில் ஈடுபட்டு பிராணாயாமம் செய்துகொண்டே வருவான். இப்படி ஈடுபட ஈடுபட அனல் ஏற ஏற ஏற உடல்மாசு தீரும். இப்படி உடல் மாசு தீருமென்று சொன்னாலும், இந்த உடம்புக்குள்ளேயே லட்சோப லட்சக் கணக்கான மர்மங்கள் உள்ளது. அதை சொன்னாலும் புரியாது. சொன்னால் என்ன ஆகும்? அவனும் கெடுவான், இவனும் கெடுவான், பக்குவம் வந்தால் ஞானிகளே சொல்வார்கள். தலைவனும் சொல்வார்கள்.
ஞானிகளின் மென்மையான, வலிமையான திருவடியை சேர்வதற்கு, மும்மலத்தை வென்றவன் யாரோ, அவன் திருவடியைப் பற்ற வேண்டும்.

அம்மலம் கழீ இ - அவனை வஞ்சிக்கக் கூடிய மும்மலம் என்று சொல்லப்பட்ட கழீ இ என்றால் நீக்கினவன். பசியில்லை, காமமில்லை, பசி இருக்க இருக்க சாப்பிடுகிறான். உடம்பு, சாப்பிட்ட உணவில் சத்து அசத்தை பிரிக்கிறது. அசத்தை வெளியே தள்ளிவிட்டு, சத்தை உடம்புக்கு ஏற்றி விடும். ஆக இதிலிருந்து பசியற்ற வாழ்க்கை வர வேண்டும். அது அமிழ்தபானம் சிந்தாமல் வராது. அமிழ்தபானம் சிந்துவதற்கு ஆசி வேண்டும். ஆசி பெற வேண்டுமென்றால் அவன் ஞானிகளின் திருவடியை உறுதியாக பற்ற வேண்டும்.

திருவடியை உருகி பற்ற பற்ற பற்ற ஆசி வரும். ஆசி பெறப்பெற உடம்பைப் பற்றி அறிவான். உடம்பைப் பற்றி அறிய அறிய அறிய மும்மலச்சேறு கழிய வழி தெரியும். மும்மலச்சேறு கழியக் கழியக் கழிய அறிவு வேலை செய்யும். வல்லமை வந்தது அவனுக்கு, மலம் அற்றுப்போகும்.

மலம் அற்றாலே அங்கே குழப்பமிருக்காது. மனமாசு இருக்காது. மலம் ஒரே நாளில் அற்றுப் போகாது. பல ஆண்டுகள் ஆகும். ரொம்ப கடுமையாக உழைக்க வேண்டும். மலம் அற்றுப்போவதற்கு மலமற்றவனின் ஆசி இருக்க வேண்டும். இதையே மகான் திருவள்ளுவர் சொல்வார்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
- திருக்குறள் - துறவு - குறள் எண் 347.

பற்றி விடாஅ இடும்பைகள் - இந்த உடம்பைப் பற்றிக் கொள்ள வேண்டும். நோய் வரும், கபம் கட்டும், மயக்கம் தயக்கம் வரும், வாந்தி பேதி வரும். இதையெல்லாம் கண்டு பயந்து விட்டானென்று சொன்னால், அந்த இடத்திற்குப் போக முடியாது. அற்றது பற்றெனின் உற்றது வீடு என்றார். அந்த மாதிரி அவன் கஷ்டப்பட்டு, உண்மைப் பொருளை தேடி வைத்திருப்பான்.

நாம் அவனை விடக் கூடாது. யாரை விடக்கூடாது? சுருக்கமாக சொல்கிறேன் என்னை நீங்கள் விட முடியாது. வீட்டீர்களென்றால் போச்சு! என்ன காரணம்? இதுநாள் வரையிலும் என்னை சார்ந்திருந்ததனால் என்ன நட்டம்? நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

என்னை விடக் கூடாது. என்ன காரணம்? சோதனை வரத்தான் செய்யும். சோதனை என்பது சாதாரண சோதனை அல்ல. நாங்கள் பட்ட துன்பம் எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் இப்போது மும்மலச் சேறை உடைத்தெறிந்து பத்தாம் வாசல் என்ற புருவ மத்திக்கு வருவதற்கு காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு வந்து விட்டோம். இப்போது,

அம்பலத்தை யம்புகொண்ட சங்கென்றால் சங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ
செம்பொ னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே.
- மகான் சிவவாக்கியர் - கவி எண் 44.

இன்பமற்ற யோகி என்றார். உடம்புள்ளே காமம் இருந்தால்தானே நாட்டம் இருக்கும்? இருக்காது. கனல் ஏறஏற வீழ்ச்சியடைந்து விட்டது. நான் மும்மலத்தை உடைத்தெறிந்து பூட்டு திறக்கும் காலத்திற்கு வந்து விட்டேன். அந்த இடத்திற்கு வந்து விட்டேன். பூட்டு திறந்தவுடன் பார்வை வரும். நரை திரை மாறும். பெரிய வாய்ப்பு சமுதாயத்திற்கு வரப்போகிறது. நான் என் தாய்தந்தையால் எடுத்த உடம்பு நீங்கி, பத்தாம் வாசல் நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆக இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ? காமதேகம் இருந்தால்தானே இருள் வந்து சூழும்? காமம் அற்றுப்போச்சு! காமம் அற்றால் அங்கே வஞ்சனை அற்றுப் போச்சு! பொருளாசை இல்லை. பொருளாசை இல்லையென்றால் பொய் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. தலைவன் ஆசி பெற்றதால், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மகான் மெய்கண்ட தேவர் பன்னிரெண்டு பாடல்களை பாடியிருக்கிறார். பன்னிரெண்டு சூத்திரம் ஆனாலும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேன். இது மாதிரி, தலைவன் திருவடிக்கு நீ போக முடியாது. செம்மலர் நோன்தாள் - வலிமை பொருந்திய திருவடி. சேர ஒட்டாது என்று சொல்லி விட்டேன். அதற்கென்ன உபாயம் என்று கேட்டிருக்கிறாய். அதற்கு உபாயமும் சொல்லியிருக்கிறேன். அம்மலம் கழீ இ அன்ரொடு மரீஇ என்று சொல்லியிருக்கிறேன். யார் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறானோ அவனைப் பிடித்துக்கொள் என்று சொல்லியிருக்கிறேன்.

நாங்கள் பாடி வைத்துவிட்டுப் போய்விட்டோம். பிற்காலத்தில் யாரோ ஒருவன் வருவான். நீ தலைவனாகிய என்னைக் கேட்கிறாய். மெய்கண்ட தேவனாகிய என்னையே கேட்கிறாய். உண்மை குருவறிந்து உண்மை அறிந்து கொள்ள வேண்டும். உண்மைப் பொருள் அறிந்தவனை நான் அறிந்துகொள்ள வேண்டும். அவன் ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அம்மலங்கழீ இ என்று சொல்லியிருக்கிறீர்கள். எவன் ஒருவன் மும்மலத்தை வென்றானோ அவன் ஆசை அற்றவனாக இருப்பான். அவன் மோசம் அற்றவனாக இருப்பான். அவன் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவனாக இருப்பான்.

இந்த மும்மலம்தான் ஒருவனுக்கு நரை திரையை உண்டாக்கும். அதுதான் காமத்தை உண்டாக்கும். பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். அந்த வாய்ப்பு பெற்றவன் யாரென்று தெரியவில்லை. உலக நடையை நான் அறிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்தைக் கண்டு ஒரு முடிவெடுக்க முடியாது. நீ எனக்கு உணர்த்த வேண்டுமெனச் சொல்லி, பல ஜென்மத்தில் கேட்டிருந்தால் ஓங்காரக்குடிலுக்கு வர முடியும். இல்லையென்றால் ஓங்காரக்குடிலை அவ்வளவு இலகு என்று நினைக்க முடியாது.

அம்மலங்கழீ இ யார் ஆசி பெற்றவன்? மலமற்றவன் நிர்குணமானவன், நிராமயன். அவனுடைய ஆசி பெற்றதனாலே எனக்கு இந்த வாய்ப்பு உணர்த்தப்பட்டிருக்கிறது. உணர்த்தப்பட்டதனாலே நீங்கப்பட்டிருக்கிறது. அதைத்தான், இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ என்றார். இன்பமற்றவன் என்றார். இன்பத்திற்கு காரணமான உடம்பு போய்விட்டது.

அற்றது பற்றெனின் உற்றது வீடு என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஆசியைப் பெற்றதனால் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகான் மெய்கண்டதேவர் சொன்னதுபோல, என்னைப் போன்றவர்களை விடக்கூடாது.

யாரொருவன் ஆசானுடைய திருவடியை உருகி தியானம் செய்து, ஆசான் ஆசி பெற்று, அதன் மூலமாக நல்ல சிறப்பறிவு பெற்று, அந்த உள்ளுணர்வு தட்டி எழுப்பப்பட்டு, புற உடம்பின் தன்மையும், அக உடம்பின் தன்மையும் அறிந்து, நெல்லுக்கு உமியும், தவிடும் இருப்பது இயல்பென்று அறிந்து, நெல்லையும் உமியையும் நீக்குவதற்கு ஆசான் ஆசி பெற்று, ஆக இனி பிறவாமைக்குரிய வாய்ப்பைப் பெற்றவன், யாரோ அவன் திருவடியை பிடித்துக்கொள் என்று மகான் மெய்கண்டதேவர் சொல்லிவிட்டார்.

எங்களால் முடியாதப்பா! நாங்கள் நிற்க முடியாது. ஏனென்றால் நிற்குமிடமற்ற நிர்மலமாம் ஜோதி என்றார். எங்களால் நிற்க முடியாது, யாரேனும் ஒருவன் பேசினால் அவனை சார்ந்திருந்து உனக்கு அறிவுரை சொல்கிறேன் கேட்டுக்கொள். ஒன்று என்னை நீ பற்றிக்கொள். மெய்கண்ட தேவன் உண்மைப்பொருள் உணர்ந்தவன். என்னை நீ வணங்கு. இல்லையென்றால் எங்கள் சித்தர் வம்சத்தில் வந்த அத்தனை பேரும் ஒரே தன்மை உள்ளவர்கள். யாரை வணங்கினாலும் எங்களுக்கு ஒன்றுதான்.

நாங்கள் எல்லோரும் ஒரே தன்மையில் இருக்கிறோம். ஆகவே எங்களை வணங்கு. நாங்கள் மும்மலம் அற்றவர்கள். எங்களை வணங்க உன்னால் முடியாது. காரணம் நான் நேரடியாக பேச முடியாது. தினந்தினம் பார்க்கிறவனிடம் பேசும்போதே சந்தேகம் வந்துவிடும். இவன் செல்லும் பாதை சரியா? தவறா? என்பாய். இரண்டாவது உன்னிடம் அப்படியே சிறிது அறிவு இருந்தாலும், உன் கல்வியே பெரிது என்று நினைப்பாய். ஞானிகளெல்லாம் பெரியவர்கள். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

நீ தினந்தினம் பார்க்கக்கூடிய சொற்குருவையே பார்த்தாலும் உனக்கு நம்பிக்கை வராது. அவன் பூஜை செய்வானா? அவனுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா? இப்படி சந்தேகம் வரும். நாங்கள் நேராகப் பேச முடியாது. இருப்பவனையும் நீ நம்ப மாட்டாய். அது உன் வினைப்பயன்.

ஆகவே உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். மலத்தை நீக்கியவனும், தாய் போன்ற அன்புள்ளவனிடத்தில் அன்பு பொருந்தி வாழ். அன்பரொடு மருவுதல் என்றால் சேர்தல். மருவி, மாலற நேயம் அவர்கள் என்ன செய்வார்கள். மயக்கம் அற்றவர்களாகவும், மிக்க அன்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். மாலற நேயம் - மால் என்றால் மயக்கம். நேயம் என்றால் அன்பு. மிகுதியான நட்பு. இதுபோன்றவனை, இப்படி உள்ளவனை, நீ இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். மயக்கம் அற்றவனாகவும், மிகுந்தவனாகவும், மாலற நேயம் மலிந்தவர் வேடமும், நேயம் மலிந்தவர் என்றால் மிக்க அன்புள்ளவர் என்று அர்த்தம்.

மலிந்த என்றால் மிக்க, மலிவாகிவிட்டது என்று சொல்வார்கள். தக்காளி விலை மலிந்து விட்டதென்பார்கள். ஆக அளவில்லாத அன்புள்ளவர்களாகவும், மும்மலம் அற்றவர்களாகவும், மயக்கம் அற்றவர்களாகவும் அதிகமான பற்றுள்ளவர்களாகவும் இருப்பார்கள். வேடம் என்பது ஆடை. வேடம் என்பது உடம்பு என்றும் ஒரு பொருள் உண்டு. ஒரு வேடம் தரித்தல் என்று சொல்வார்கள்.

உடம்பே ஒரு வேடமாக இருக்கிறது. அந்த உடம்பையே ஒரு ஆலயமாகவும், அவனையே சிவலிங்கமாகப் பார் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஏன் சொல்கிறார் என்றால், ஞானிகளெல்லாம் பாடி வைத்துவிட்டு போய்விட்டார்கள். பிற்காலத்தில் வருபவர்கள் அதை உணர்ந்து, மக்களிடம் சொல்லி என்னை வணங்கு என்று சொல்லக்கூடாது. அது நியாயம் கிடையாது. ஆனால் அகத்தீசர் சொல்வார்.

என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்து நன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போ நாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
- திருமூலர் ஞானம் 84-ல் கவி எண்: 82.

கூறுவது அகத்தீசா என்று கூறு
கும்பமுனி தஞ்சமெனக் குறித்து நில்லே.
- அகத்தியர் அமுதகலை ஞானம்.

கண்டனென்ற வல்லபங்கள் இருந்தாலப்பா
காசினியில் இருந்து தவம் செய்குவாயே
வாவென்றேன் தவத்தை நிறைவேற்றிக் கொள்ளு
வாராவிட்டால் பொதிகைதனில் வந்து சேரு.
என்றார். அகத்தியரே என்னைக் கூப்பிடு என்பார். அவர்களுக்கெல்லாம் ஏன் அந்தக் கருணை என்று சொன்னால், அதுதான் மாலற நேயம் மலிந்தவர் வேடமும் என்றார். மலிந்தவர் என்றால் மிகுதியான அன்புடையவர் என்று அர்த்தம். ஆக மகான் மெய்கண்ட தேவர் சொன்ன கருத்துக்கள்,

செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.
- சிவஞானபோதம் 12ம் சூத்திரம்.

இது எப்ப வரும்? யாரை கேட்கணும்? நாம் வணங்கக் கூடிய சிறு தெய்வத்திற்கெல்லாம் அந்த யோக்கிதை இருக்கிறதா?

போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தவர்களையோ, அம்மை கண்டு இறந்தவர்களையோ, ஒரு படைக்கு தலைமை தாங்கி போருக்கு போனவர்களையோ, ஒரு இனத்துக்காக ஐநூறு, அறுநூறு தலைக்கட்டுக்கு தலைமை தாங்கி போரில் வீர மரணம் அடைந்தவனையோ பதிவு செய்வார்கள். இதை பட்டவன் என்பார்கள். அம்மை கண்டு இறந்தவர்கள், உடன் கட்டை ஏறியவர்கள் இது போன்றவர்களைப் பதிவு செய்து கும்பிட்டு கொண்டிருப்பார்கள். இதை பல முறை சொல்லியிருக்கிறேன்.

இப்படிப்பட்ட இந்த சிறு தெய்வங்களா நமக்கு அருள் செய்ய முடியும். ஏனய்யா, பலமுறை மறுபடி மறுபடி என்றால் முதலில் நாம் வணங்கக் கூடிய தலைவனைப் பற்றி உண்மை தெரிந்தால்தானே, இவனைப் புரியும். ஞானிகளை மட்டுமே வணங்கணும்.

செத்தவனை அறிமுகப்படுத்த மாட்டோம். ஈ எறும்பு மொய்ப்பவனா நமக்கு அருள் செய்ய முடியும்? ஈ எறும்பு மொய்க்கக் கூடிய ஒரு தேகத்தைப் பெற்றவனுடைய ஆசியை நாம் பெற முடியாது.

நாம் மும்மலம் அற்ற ஞானிகளைத்தான் சுட்டிக்காட்டுவோம், அவர்களை மட்டுமே அறிமுகப்படுத்துவோம். இதை சொற்குருவாகிய நாங்கள் செய்யவேண்டும்.
ஆக மகான் மெய்கண்டதேவர், மகான் அருணகிரிநாதர், மகான் பட்டினத்தார், மகான் திருமூலர், மகான் காலாங்கி, மகான் போகர், மகான் நந்தீசர் இவர்களெல்லாம் பெரிய பெரிய ஞானிகள். இவர்களுக்குத் தலைவன் ஆசான் சுப்ரமணியர்தான்.

இவ்வளவு பேரும், உலகத்தில் இருக்கின்ற அத்தனை ஞானிகளும், ஆசான் சுப்ரமணியர் ஆசி பெற்ற மக்கள்தான். எல்லா ஞானிகளுடைய ஆசி பெறுவதும், ஆசான் சுப்ரமணியர் ஆசி பெறுவதும் ஒன்றுதான்.

ஒருவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. மூச்சுக்கு முன்னூறு கவி பாடியவனாக இருந்தாலும் சரி, அவன் மும்மலத்தை நீக்கவில்லை. எனவே அவன் செத்தால் நாறிப்போய்விடும். சிறு தெய்வத்தை வணங்கி கொண்டிருப்பதெல்லாம் ஆகாது. இப்படி செத்தவனுக்கெல்லாம் மும்மலம் அற்றுப்போகவில்லை.

ஆனால் ஞானிகள் அப்படி அல்ல. புனுகு ஜவ்வாது வாடை வீசும். இனிமையான புனுகு ஜவ்வாது வாடை வீசக்கூடிய உடம்பு அவர்கள் உடம்பு. ஞானிகள் ஒளி உடம்பைப் பெற்றவர்கள். அவர்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.

அப்பேர்ப்பட்ட ஞானிகளை அறிமுகப்படுத்தினால்தான் நாம் தலைவனின் ஆசி பெறலாம். இல்லையென்றால் செத்துப்போனால் நாறிப் போகின்றவனை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? சிறந்த கவிஞனாக இருப்பான். அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவனும் அந்த சாவிலிருந்து விடுபட முடியாது. நாம் என்ன செய்யணும்?

ஞானிகளிடம் சொல்லி, தினந்தினம் ஞானிகளை வணங்கச் சொல்லணும். பத்து பேர் அல்லது இரண்டு பேர் தினம் கூட வேண்டும். ஆன்மீகவாதிகள் ஆங்காங்கே இருப்பவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஞானிகள் பெருமையை ஒருவர் பேசினால் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

சைக்கிளில் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு வரக்கூடாது. முன்னும் பின்னும் வரும்போது அகத்தீஸ்வரா, அகத்தீஸ்வரா என்று வரணும். நாட்களை வீணாக்காமல் இருக்க வேண்டும். எங்காவது வீண் பேச்சு

பேசுவதுபோல் வந்ததென்றால், தலைவன் என்ன செய்வான்? சரிதான் பெரிய மனிதன் ஆகி விட்டான். பேசிக்கிட்டு இருக்கிறான் என்று அவன் பாட்டுக்கு போயிடுவான்.

அங்கே பேசும்போது கூட தலைவனைப் பற்றித்தான் பேச வேண்டும். நம் கல்வித்திறமையைக் காட்டக் கூடாது. நம் கல்வித் திறமையைக் காட்டினோம் என்றால் பெரியவர்கள் பார்ப்பார்கள். சரி பெரிய மனிதன் கற்றவன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று போயிடுவார்கள். அதனால் பிரச்சனை வந்து விடும்.

அதனால் நாம் இன்னும் அதிகமாகப் பேசக்கூடாது. பேசினால் ஞானிகள் பெருமையைத்தான் பேச வேண்டும். நூறு வார்த்தைகளில் ஓரிரு வார்த்தைகள் தான் வீண் வார்த்தை இருக்க வேண்டும். மற்றது பூராவும் பயனுள்ளதாக இருக்குமே தவிர வீண் வார்த்தை பேசக் கூடாது. அதுமாதிரி நண்பர்களோடு பேச வேண்டும்.

தியானம் செய்யணும். மக்கள் மத்தியில் இருக்கணும். மனைவி மக்களோடு இருக்கணும். அவர்களெல்லாம் நமக்குத் துணையாக இருப்பார்கள். மனைவி மக்களெல்லாம் நமக்கு துணையே தவிர வினையாக இருக்க முடியாது. அவர்கள் துணையில்லாமல் முடியாது.

ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான உணவு கிடைக்காது. பழைய சாம்பாரை சூடு பண்ணி வைத்திருப்பான். இப்படி சாப்பிடுபவன் என்ன நினைப்பான்? ஐயோ சோறு இப்படி இருக்கே என்று நினைப்பான்.

மனைவிதான் பக்குவமாக சமைத்துத் தருவாள். அவள்தான் நமக்கு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், மனைவிதான் இந்தத் துறைக்கு வழிகாட்டியாகவும், தெய்வமாகவும் இருக்கிறாள். அவளை விட்டுவிட்டால் போச்சு. ஒன்றுமே செய்ய முடியாது. அவள்தான் நம்மைக் காப்பாற்றுகிறாள்.

ஞானிகள் அத்தனைபேரும் மனைவியினுடைய துணையில்லாமல் அவன் ஞானி ஆகவில்லை. மனைவியை மதிக்கணும். தெய்வமாகப் போற்றணும். ஆக அன்பர்கள் இருக்கிறார்கள். நல்ல சுற்றுப்புற சூழ்நிலை இருக்கிறது. அன்பர்கள் தான் இந்த துறைக்கு ரொம்ப முக்கியமானவர்கள். நம்முடன் இருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே சிந்தனை. உனக்கு என்னய்யா வேண்டுமென்றால், நீங்கள் முன்னேற வேண்டுமப்பா. நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் நல்லபடி இருக்க வேண்டும். அதற்காக நான் தொண்டு செய்கிறேன் என்பான்.

என் வளர்ச்சி உனக்கு ஏன்? என்றால் அதெல்லாம் தெரியாது. நல்லாயிருக்க வேண்டுமய்யா, நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் கடவுளாக வேண்டுமய்யா. அதுதான் எனக்கு வேண்டும்.

இவ்வளவு பெரிய உயர்ந்த பண்புள்ள ஒரு கூட்டம் இது. இவர்கள் தான் ஏணியாக இருப்பார்கள். இவர்களிடம் சில தவறுகள், பிரச்சனைகள் இருந்தாலும் நாமென்ன செய்யணும்? அப்படியே அரவணைத்துப் போக வேண்டும். ஆக அங்கே மனைவி மக்கள், இங்கே தொண்டர்கள். ஒருவன் கடவுளை அடைவதற்கு நூற்றுக்கணக்கான பேர் நமக்குத் துணையாக இருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் கடவுளை அடைய முடியாது.

இவர்களும் நீடு வாழ வேண்டுமெனக் கேட்கணும். வெளியே சொல்லக் கூடாது. அவர்களைப் பொறுத்து ஆசான் அகத்தீசனிடம் கேட்கணும். இவன் உண்மையான தொண்டனப்பா. இவன் நீடு வாழ வேண்டும்.

இவனெல்லாம் நான் அடைந்த உண்மையை அறியணும். அவன் ஆயிரம் தவறு செய்தாலும் சரி. எனக்கு அது மனதில் படக்கூடாது. அவன் உழைப்பை வாங்கிக் கொண்டு இவன் பாட்டுக்கு ஜாடையாக இருந்தானென்றால் அது நன்றி கெட்டத்தனமாகப் போய்விடும். அவன் நீடு வாழ வேண்டும். நீர்தான் அருள் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற உணர்வு உள்ளவன்தான் கடவுளாக முடியும்.
ஆகவே இதுபோன்று உள்ளதுதான் இந்த துறை என்று சொல்வான்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
- திருக்குறள் - செய்ந்ந ன்றி அறிதல் - குறள் எண் 107.

தவத்திற்கு மட்டும் உதவி செய்து விட்டால் தப்பவே தப்பாது. நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மேற்கொள்கின்ற அறப்பணிகளுக்கு யார் தொண்டு செய்தாலும் சரி. அவன் எங்கு பிறந்தாலும் சரி. அவன் எந்த நாட்டில் பிறந்தாலும் சரி. நாங்கள் போய்தான் ஆக வேண்டும். அவனை காப்பாற்றி ஆகணும். அவனை வழி நடத்திதான் ஆக வேண்டும். சட்டம் இது. இந்த உழைப்பு வீண் போகாது. அதைதான் மகான் திருவள்ளுவர் சொல்வார்,

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
- திருக்குறள் - செய்ந்ந ன்றி அறிதல் - குறள் எண் 107.

தவத்திற்கு உதவி செய்பவனை மட்டும் விடவே மாட்டோம். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. ஆக நாங்கள்தான் இந்த துறைக்கு வருகிறோம். எங்களுடைய நட்பை பெருக்கிக் கொண்டு, அடிக்கடி வந்து பார்க்கணும், நிழல் போல் இருக்கணும், வந்து வந்து பேசணும், ஆசி பெறணும்.

தொண்டர்கள் கூடும் போதெல்லாம் வீண் வார்த்தை பேசாமல் தொண்டு செய்ய வேண்டும். ஆக ஓங்காரக்குடிலாசான் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்குத் தொண்டு செய்யும் மக்கள் அத்தனை பேரும் நிச்சயமாக,

சத்தியமாக, உறுதியாக ஞானியாவார்கள். இந்த வார்த்தை தப்பவே தப்பாது. அன்பர் இந்த பாடலின் சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றார். இன்னும் நான் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அம்மலங்கழீ இ அதற்கு என்ன அர்த்தமென்றால், அவரவர்கள் உணர முடியுமே அன்றி வார்த்தைகளால் இதை விளக்க முடியாது. ஏனென்றால்,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே.
- திருமந்திரம் - மோன சமாதி - கவி எண் 2944.

ஆக மலமற்ற வாழ்வு அமைய வேண்டுமென்று சொன்னால், திருவருள் துணையிருக்க வேண்டும். இதை சொல்லி முடியாது. திருவருள் பெறப்பெற உணர்த்தப்பட்டு, உணர்த்தப்பட, உணர்த்தப்பட உந்தப்படுகிறான். உந்தப்பட உந்தப்பட ஞானிகளின் திருவடி நோக்கி முந்திச் செல்கிறான்.

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரம்மாவைச்
சந்தித்துக் காணாமற் றட்டழிந்தேன் பூரணமே.
- மகான் பட்டினத்தார் - பூரண மாலை - கவி எண் 2.

இதெல்லாம் மர்மமான வார்த்தை. ஆகவே அன்பர்கள், எந்த அளவு ஓங்காரக்குடிலைச் சார்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி உண்டு.

என்னை சார்ந்தவர்கள், இந்த குடிலை சார்ந்தவர்கள் எல்லோரும் நீடிய ஆயுளும், தடையில்லா வாழ்வும், அவரவர்கள் பெறக்கூடிய ஆன்ம இலாபத்தை பெறுவதற்கு நீர் அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் அகத்தீசரிடம் கேட்டேன்.

மலேசிய மக்கள் வசூலுக்கு போறாங்க, அவர்கள் உடல் சோர்வில்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும், உற்சாகத்தை தர வேண்டும் என்று ஆசானிடம் கேட்டேன்.

ஏன் இவ்வளவு நாளாக சொல்லவில்லை என்றார். அவன் எந்த இனமோ? எந்த மதமோ? யாரோ தெரியாது. மனமுவந்து பொருள் கொடுத்திருக்கிறான். அவன் குடும்பமும் தழைக்கணும், அவனும் நன்றாக இருக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். ஆக வசூலிக்கின்ற மக்களும் நன்றாக இருக்கணும் என்று கேட்டிருக்கிறோம். பொருளுதவி செய்த மக்களும் நன்றாக இருக்கணும் என்று கேட்டிருக்கிறோம்.

இங்கே என்ன செய்கிறோம்? யார் யார் நமக்கு இந்த தவத்திற்கு, தர்ம காரியத்திற்கு தொண்டு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையான நன்மையும், உடல் ஆரோக்கியமும், உண்மைப் பொருளை அறியக்கூடிய திறமையும், நாட்டம் உள்ள மக்களுக்கு மேலும் நாட்டம் ஏற்பட வேண்டுமென்று சொல்லி கேட்டிருக்கிறோம்.

ஆக இனி வருங்காலம் இன்றைய தேதியிலிருந்து தொண்டர்கள் மிகப்பெரிய வாய்ப்பைப் பெறப்போகிறார்கள். ஆசானிடம் கேட்க வேண்டும். என்ன கேட்க வேண்டும்?

அடியேன் குற்றமில்லாதவனாகவும், ஆசான் மனம் மகிழும்படியாகவும், தவறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அப்பா! நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்போம். நாங்கள் என்ன செய்வோம்? மனமுவந்து தொண்டு செய்கிறான் பிள்ளை. வெளியில் சொல்லும்போது அவன் இவன் என்று சொல்வோம். அங்கே என்ன சொல்வோம். மனமுவந்து தொண்டு செய்கிறான் பிள்ளை, நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்போம். என்னடா! பிள்ளை என்றால் வயது என்ன என்றால், வயது ஆயிரம் இருக்கட்டும், எங்களுக்கு பிள்ளைதான் என்போம். அப்படி ஒரு வார்த்தையை அந்தரங்கத்தில் பயன்படுத்துவோம். மனமுவந்து தொண்டு செய்கிறார்களப்பா. நீர்தான் அருள் செய்யணும் என்று கேட்டுக் கொள்வோம்.
ஆக இந்த வாய்ப்பு இந்த தேதியிலிருந்து அவரவர்கள் உடும்பு மாதிரி பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும். நல்ல காலம் வந்து விட்டது. ஆகவே, இந்த பாடலுக்கு மணிக்கணக்காக நாட்கணக்காக சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய ஒரு சிக்கலான பாடல். என்னால் முடிந்த அளவுக்கு சொல்லியிருக்கிறேன்.

இன்று பேசப்பட்ட கருத்துக்களை யார் யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் ஆசான் அகத்தீசர் ஆசியிருக்க வேண்டும். ஆசான் மெய்கண்டதேவர் சுட்டிக் காட்டியது போல் தலைவன் திருவடியைப் பற்ற முடியாது, நெருங்க முடியாது. நெருங்குவதற்கு உபாயம் ஒன்று சொல்கிறேன்.

யார் யார் முற்று பெற்றானோ, யார் யார் ஞானிகளோ, யார் யார் கருணை உள்ளவனோ அவன் திருவடியை பற்றிக் கொள்ளுங்கள். ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இந்த பாடலை முடித்திருக்கிறார். எல்லாம்வல்ல ஆசான் மெய்கண்டதேவர் ஆசியும், ஆசான் அருணகிரிநாதர் ஆசியும், ஆசான் அகத்தீசர் ஆசியும் இருக்க வேண்டுமென்று சொல்லி, அவர்கள் வினை தீரும் வரையில், சிறப்பறிவு இருக்காது. வினை தீர்வதற்கு வாய்ப்பும் தந்து, வினை தீர தீர அதற்குரிய வகை தொகை சொல்லி, அவரவர்கள் அறிவின் முதிர்ச்சிதான் ஞானம் என்று சொல்வான். இந்த துறை எப்படியிருக்கிறது என்று கேட்டால், அறிவின் முதிர்ச்சியாக இருக்கும். அதற்கு ஈடே கிடையாது.

சொல்லுவது கேட்டிலியோ மகனே என்ன என்று சொல்வான். ஒருத்தன் முன்னேறுகிறான் என்று சொன்னால், அவன் கடல் போன்ற கல்வி கற்று இருப்பான். அப்பேர்ப்பட்ட அறிவு, இவன் கற்கவில்லை. ஆசான் கற்பிக்கிறான். மிகமிக நுட்பமான அறிவுள்ள மக்கள் இந்த ஞானிகள்.

அப்பேர்ப்பட்ட அறிவுள்ள மக்கள்தான் இங்கு வர முடியும். பாவம் மிகுதியானால் அறிவு வேலை செய்யாது. புண்ணியம் மிகுதி ஆக ஆக திருவருள் துணை கொள்ள சிறப்பறிவு உண்டாகும். சிறப்பறிவு என்பது சாதாரண அறிவு அல்ல. கடல் போன்ற அறிவு. நம்மிடம் இருக்கின்ற முன்செய்த வினை நீங்க நீங்க சிறப்பறிவு உண்டாகும். அந்த சிறப்பறிவு துணைகொண்டு தன்னைப்பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதுவே ஜென்மத்தை கடைத்தேற்ற வாய்ப்பாக அமையும் என்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.


இங்கு சிவஞானபோதத்தின் 12ம் சூத்திரத்தின் முதல் வரிக்கு மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சிவஞானபோதம் பன்னிரெண்டு சூத்திரங்களுக்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சிவஞானபோதம் விளக்கவுரை தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது, வாங்கி பயன்பெறவும்.

திருச்சி மாவட்டம், துறையூர்,
ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை

19. இணக்கமறிந் திணங்கு

உலகில் தோன்றியது முதல் மனிதன் எப்போதும் தனித்து வாழ்ந்ததில்லை. அவனுடைய பலமே அவனுடைய சமுதாய வாழ்வில்தான் உள்ளது. ஒரு சிறிய கிராமமாக இருந்தாலும், சிறு நகரமாக இருந்தாலும் அல்லது பெரிய மாநகரமாக இருந்தாலும் அவன் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அவனது தொழில், வியாபாரம், விவசாயம், உத்தியோகம், இல்லறம், ஏன் துறவியாய் இருந்தால் கூட அவனது வாழ்க்கை வாழ பலபேர்களுடைய துணையுடன்தான் அவனால் வாழ முடியும்.

இப்படி மனிதர்களால் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கூட்டாக வாழும் சமுதாயத்தை விட்டு தனித்து வாழ இயலாது. அப்படி வாழ நினைத்தால் அவனது வாழ்வில் அவன் வெற்றி பெற முடியாது.

ஒருவன் தொழில் செய்ய வேண்டுமெனில், தொழில் செய்வதற்கு உடன் பணியாளர்களும், பொருளை வாங்குவோர், பொருளை கொடுப்போர், நிர்வகிப்போர் என்ற வகையில் பலபேர் வேண்டும். விவசாயம் செய்தாலும், நிலம் சீர்படுத்தல், பண்படுத்துதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், வளர்த்தல், அறுவடை இப்படி பல காலக்கட்டங்களில் ஏராளமானோர் உதவி வேண்டும்.

ஒரு இல்லறத்தான் குடும்ப வாழ்க்கை வாழ வேண்டுமென்றாலும், அவனுக்கு இல்லத்துணைவி, மகன், மகள், அம்மா, அப்பா, மாமனார், மைத்துனர், உறவினர், சொந்தபந்தம் என்ற ஒரு சமுதாயக்கூட்டத்தின் துணையில்லாமல் அவன் வாழ முடியாது.

ஒருவன் இதெல்லாம் வேண்டாம், நான் துறவியாகிறேன் என்றாலும் அவனுக்கு வழிநடத்த ஒரு குருநாதரும், அவனுக்கு ஆறுதலாகவும், அவனுக்கு உணவு அளிப்பதற்கும் ஒரு சமுதாயம் வேண்டும். சரி துறவியான அந்த குருவிற்கும், தனது தவத்தை முடிப்பதற்கு தேவையான அனைத்தையும் தந்து உதவி, தவம் முடிப்பதற்கும் தொண்டர் கூட்டம் வேண்டும்.

இப்படி இல்லறவாசியாக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும், மாணாக்கனாக இருந்தாலும், துறவியாக இருந்தாலும், மற்றவர் உதவி கண்டிப்பாக தேவைப்படும். மற்றையோர் உதவியில்லாமல் ஒருவன் கண்டிப்பாக வாழ முடியாது. ஆதலால் தனித்து யாருடைய உதவியும் இல்லாமல், வாழ்வது இயலாது.

ஒருவன் ஏதுமறியா குழந்தையாக இருந்தாலும் அவனை வளர்த்து ஆளாக்க ஒரு தாய் வேண்டும். ஒரு மாணாக்கன் தனது கல்வியில் தேர்ச்சி பெற, கல்வி கற்க அவனுக்கு தக்க குரு வேண்டும். ஒரு ஆசிரியர் தனது வாழ்க்கையை நடத்த சமுதாயத்தின் உதவி வேண்டும்.

ஒரு சீடன் கடைத்தேற வேண்டுமென்றால், ஒரு சத்சங்க தொடர்பும், அதன் தலைமையான குருநாதரின் வழிகாட்டுதலும் வேண்டும். ஒரு குருநாதர் தனது தவம் மற்றும் அறப்பணிகளை செம்மையாக செய்ய, தகுதியுள்ள சீடர்கள் துணை வேண்டும்.

அப்படி பிறருடைய துணையுடன் வாழ்வதும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்வதும், உதவி பெறுவதுமான இந்த கூட்டு வாழ்வானது, ஒருவரையொருவர் சார்ந்துள்ள ஒரு சங்கிலி போன்ற பின்னப்பட்ட தொடர்புடைய அமைப்பில் வலைபோல ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமுதாய கூட்டமைப்பாக உள்ளது.

இந்த கூட்டமைப்பிலிருந்து விடுபட முடியாது. அப்படிப்பட்ட கூட்டமைப்பில் வாழும் ஒருவன் தனது நட்பை ஏற்படுத்தும் நபர்களைப் பற்றி, நன்கு ஆராய்ந்து தேர்ந்து நட்பு கொள்ள வேண்டும்.

அவ்வாறு தகுதியுள்ள இணக்கமான நட்பு அமைந்தால், அவனது வாழ்வு மகிழ்வாக இருக்கும். அவ்வாறில்லாமல் தகுதியற்ற இணக்கமில்லாத நட்பாக அமைந்தால் அது அவனது வாழ்வு முழுவதும் நரகத்தை தருவதோடு அவனது வாழ்வு இடையிலேயே முறிந்து விடும்படியான துன்பத்தை தரக்கூடும்.

இப்படி இல்லறத்தார்களும், துறவிகளும், தொழில் செய்வோரும், உத்தியோகம் பார்ப்போரும், மாணாக்கன், ஆசிரியன், விவசாயி இன்னும் பலபல தொழில்களை செய்பவர்களுமான ஒரு கூட்டமைப்பு அது சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அந்த சமுதாயத்தை நிர்வகிக்க ஒரு தலைவன் வேண்டும்.
சரி அந்த தலைவனுக்கு யாருடைய உதவியும் தேவையில்லையா என்றால், அவனும் பிறருடைய உதவியால்தான் வாழமுடியும்.

அவன் ஊர்தலைவனாக இருந்தாலும், மாநிலத்தலைவனாக இருந்தாலும், மொத்த இராஜ்ஜியத்தையே கட்டி ஆளும் மன்னனாக இருந்தாலும் சரி, அவனும் பிறருடைய உதவியில்லாமல் வாழ முடியாது.

ஒரு பெரும் சமுதாயத்தை கட்டிக்காக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தை உணர்ந்து வருவதை முன்கூட்டி உரைக்கக்கூடிய வல்லமை பெற்ற அமைச்சர்களும், நீதிநெறியினை போதித்து அருள் செய்யக்கூடிய குருமார்களும், நீதியை காப்பாற்றி மன்னன் நெறிபிறழாமல் காக்கும் சான்றோர்கள், பகைவர்களிடமிருந்து காக்கும் நல்ல படைத்தலைவனையும், விசுவாசமுள்ள வீரர்களையும் உடைய படையும், விசுவாசமுள்ள ஊழியர்களும் கொண்ட ஒரு நிர்வாக அமைப்பும் இருந்தால்தான், அந்த அமைப்பின் உதவியினால்தான் அவன் இந்த சமுதாயத்தை நிர்வகித்து காத்து நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்ய முடியும்.

ஒரு சிறிய ஊரில் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருவர் இருந்தனர். அந்த இருவரும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் வேண்டி பல ஊர்களுக்கு சென்று பலவிதமான வர்களை பார்த்தும் கேட்டும், பலப்பல முயற்சிகள் செய்தும் வந்தார்கள்.

ஆனால் இத்துறையில் முன்னேற முடியவில்லை. அதில் ஒருவருக்கு முன் செய்த தீவினைகள் காரணமாகவும், பாவத்தின் காரணமாகவும், தகுதியுள்ள வழிகாட்டுதல் அமையாமல் தீமையான போலி ஆன்மீகவாதியின் தொடர்பு ஏற்பட்டது.

அவனது நண்பனோ இவர் உண்மை கிடையாது. நன்கு ஆராய்ந்து சேர். இல்லையென்றால் இறுதியில் நீ மிகவும் வருத்தப்படுவாய் எனக்கூறினான்.

ஆனால் முன்செய்த பாவத்தின் உந்துதலால் அவன் தனது நண்பன் சொல்வதை கேட்கவில்லை. அவன் தீய ஆன்மீகவாதியின்பால் இணக்கம் கொண்டான். நண்பன் சொல் கேளாமல், அந்த ஆன்மீகவாதியைப் பற்றி ஆராயாமல் இணக்கம் கொண்டான்.

அந்த ஆன்மீகவாதியோ ஒன்றும் அறியாதவன், ஊரை ஏமாற்றுபவன், பொருளிற்காக பொய் சொல்லி சில மாயாஜாலங்களை காட்டி மக்களை பயமுறுத்தி பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடம்பரத்தையும், படாடோபத்தையும், ஆரவாரத்தையும் பார்த்த அவனோ தன்னை முழுவதுமாக இழந்துவிட்டான். இவனது அறியாமையை பயன்படுத்திய அந்த போலி ஆன்மீகவாதி இவனை, தான் செய்த பல தீய செயல்களுக்கு துணையாய் வைத்துக்கொண்டு, தானும் பாவியாகி தன்னை நாடி, தான் காப்பாற்றுவோம் என தன்னை நம்பி வந்த சீடனையும் உயிர்பலி இடச் செய்தும், தீய தேவதைகளை வணங்கச் செய்தும், சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தி பலவிதமான பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றை கற்றுக்கொடுத்தும் ஏமாற்றி இறுதியில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கி அவன் அகால மரணமடைந்தான்.

இறுதியில் இந்த சீடன் செய்த தீவினையால் அவன் இறந்ததோடு அவனது குடும்பத்தினருக்கும் தீராத பழியினை ஏற்படுத்தி விட்டான்.

மற்றொரு நண்பனோ பெரியோரை வணங்கியும், ஞானிகளை வழிபட்டும், தர்மம் செய்தும் வந்தான். அவனது நற்செயல்களினாலும், முன்செய்த நல்ல காரியங்களாலும், நல்வினை மிகுதியினாலும், ஒரு நல்ல தெளிவான உண்மை

குருநாதரை அடைந்தான். அவன் அந்த குருநாதரை அடைந்து, ஐயா நான் இத்துறையில் முன்னேற நினைக்கிறேன். எனக்கு வழிகாட்டுங்கள். உண்மை குருவை எனக்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கூறி மன்றாடினான். அவர் உண்மையான குரு. ஆதலால் அவர் உண்மை குருவின் தன்மைப்பற்றி கூறலானார்.

உண்மையான குருவானவர் ஜீவகாருண்ய சீலராக இருப்பார். அவரிடம் பொருள்பற்று இருக்காது, காமகுரோதங்கள் இருக்காது, மும்மலக் குற்றத்தைப் பற்றி தெளிவாக அறிந்திருப்பார், தெளிவாக அறிந்து அதை நீக்கிக் கொண்டவர், அதோடு தம்மை நாடி வந்தவர்களிடம் உள்ள மும்மலக்குற்றத்தையும் நீக்கும் வல்லமை உள்ளவர்.

எப்போதும் மரணமில்லா பெருவாழ்வை பெற்ற முற்றுப்பெற்ற முனிவர்களையும், ஞானிகளையும், சித்தர்களையும் வணங்குபவராக இருப்பார். ஒருபோதும் செத்து பிறக்கின்றவர்களை வணங்க மாட்டார். தானத்தையும், தவத்தையும் கடைப்பிடிப்பவராக இருப்பார். அவரது கை வணங்கினால் அது முற்றுப்பெற்ற முனிவராகத்தான் இருக்கும். உண்மைப்பொருளை உணர்ந்திருப்பார். நிலையானவற்றை நிலையென்றும், நிலையில்லாதவற்றை நிலையில்லாதவை என்றும் உணர்ந்த ஆசானாக இருப்பார்.

மோன நிலை அறிந்தவராக இருப்பார். தன்னை நாட்டிற்கு முழுதும் அர்ப்பணிப்பவராக இருப்பார். உண்மை குரு தன்னை ஒரு போதும் அனைவருக்கும் வெளிப்படையாக வெளிப்படுத்த மாட்டார், அடக்கமாக இருப்பார். அனைவரும் அவரது புறத்தோற்றம் கண்டு அடையாளம் காண இயலாது. அவரது செய்கையால்தான் அவரை உணர முடியும்.

எல்லா வல்லமைகள் இருந்தபோதும் அவர்கள் சாதாரண ஏழை போல எளிமையாக இருந்துகொண்டு எல்லா செயல்களும் இறைவனது செயலென தன்னடக்கமாக இருப்பார்கள். தான் செய்தாலும் ஆசான் செயல் என்பார்கள். எல்லாவற்றிற்கும் ஆசானை முன்னிறுத்தியே செய்வார்கள். தன்னை நாடி வந்தவர்களை தாயினும் மேலான கருணை கொண்டு காப்பார்கள். நற்குணங்கள் அனைத்தும் கைவரப்பெற்றவராக இருப்பார்கள்.

அவரது செயல்கள் எளிமையாகவும் தூய்மையாகவும் இருக்கும். பிற உயிர்களுக்கு துன்பம் தரும் எந்த செயல்களும் செய்ய மாட்டார். உயிர்வதை தவிர்த்தும், புலால் மறுத்தும், கடுமையான சைவத்தை (வீர சைவம்) மேற்கொண்டவராக இருப்பார். அவரது வாழ்வு ஞானிகளின் வழி நடத்துதலால், நடக்கும்.

அவரது வாழ்வு பெரியோர் நிழலில் இருக்கும். அவரது வாழ்வு அர்ப்பணிப்பு வாழ்வாக இருக்கும். அவரது வாழ்வு பாரபட்சமற்ற வாழ்வாக இருக்கும். அவரது வாழ்விலும் அவரை சார்ந்தவர் வாழ்விலும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றதாழ்வு இருக்காது. ஜாதி, மத, இன, மொழி பாகுபாடுகள் இருக்காது. எல்லோரையும் சமமாக பாவிப்பார்.

அவர் தன்னைப் பற்றியும் தலைவனைப் பற்றியும் அறிந்தவராக இருப்பார். தலைவனின் புகழை எந்நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பார். தலைவனை அறிமுகப்படுத்துவதே வாழ்வில் இலட்சியமாக இருப்பார்.

அவரது அமைப்பு சத்சங்கமாக, சுத்த சன்மார்க்கமாக, சன்மார்க்க வழியில் செல்வதாக இருக்கும். தூய்மையான தொண்டர்களை உடையவராக இருப்பார் என்றெல்லாம் கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் நான் கூறுவதோடு மகான் பட்டினத்தார் கூறுவதையும் கேள் என மகான் பட்டினத்தார் கவி ஒன்றையும் கூறினார்.

பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருவேகம்பமாலை - கவி எண் 15.

அதோடு மட்டுமல்லாமல் ஒருவன் யார்யாரோடு இணங்கி வாழ்தல் வேண்டுமென்றும் மகான் பட்டினத்தார் கூறுகிறார்.

நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும்பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருவேகம்பமாலை - கவி எண் 5.

என்று கூறுவதன் மூலம் ஒருவன் இணங்கி வாழ்ந்தால் அது நல்லோராக இருக்க வேண்டும். அதைப்போன்று வேறொன்று இல்லையென்றும், மற்றைய மனைவி மக்கள், சேர்த்த செல்வம், உற்றார் உறவினர், திடமான தேகம் அனைத்தும் பயன்படாது. ஆனால் பெரியோரின் நட்பே மேன்மை தரும். இறைவனை தொழுவதே கடைத்தேற்றும் என்றும் கூறினார். மேலும் மகான் ஔவையார் தனது மூதுரையில்,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.
- மகான் ஔவையார் - மூதுரை - கவி எண் 8.

நல்லவர்களை கண்ணால் பார்ப்பதுவும் நன்மை தரும். அவர்களின் அறிவுரைகளை காதால் கேட்பதுவும் நன்மை தரும். நல்லாரின் சிறப்புகளை வாயார பேசுவதும் நன்மை தரும். நல்லவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நன்மையே தருமென கூறி இணங்கினால் அது நல்லவரோடு இணங்குதல் வேண்டுமென வலியுறுத்தி கூறினார்.

அப்படி நல்லோரோடு இணங்காமல், தீய நட்பானது அல்லல்படுத்துமென்றார்.

நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் (தீயவர்களுடைய சேர்க்கை துன்பமே தரும்) என்ற அதிவீரராம பாண்டியரின் கொன்றை வேந்தன் நாற்பத்தெட்டாவது வரியினைக் கூறினார்.
அதோடு மகான் கடுவெளிச்சித்தர் கூறிய கவியையும் கூறினார்.

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு.
- மகான் கடுவெளிச்சித்தர் - கவி எண் 7.

ஒருவன் சேர்ந்தால் அது முற்றுப்பெற்ற முனிவர்கள், மகான்கள் அடங்கிய வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து தன் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி, வீணில் திரிந்து சேராத இடம் சேர்ந்து இறுதியில் வீணாய் இப்பிறவியை கழித்து நரகத்திற்கு செல்லக்கூடாதென்றும் எடுத்துரைத்தார்.

இப்படி தகுதியுள்ள சான்றோர் தொடர்பு கிடைக்கப்பெற்ற அவன், அவர் சொற்படி கேட்டு நடந்து அச்சான்றோருக்கு இசைவாக இணங்கி நடந்து, இறுதியில் பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற்றான்.

ஒருவன் இணக்கம் கொண்டால் அது தூய மனதையுடைய தகுதியுள்ள சான்றோரை பார்த்து இணக்கம் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி தீயோருடன் கொண்ட இணக்கம் இறுதியில் துன்பத்தைத்தான் தரும்.

மகான் வள்ளுவபெருமானும் ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைத்தேற வேண்டுமென்றால், அவன் யார்யாரோடு இணக்கமாயும் இருந்து கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும், யார்யாரோடு இணக்கம் கொள்ளாமல் விலகியிருக்க வேண்டுமென்றும் தெளிவாக தமது திருக்குறளில் கூறுகிறார். ஒருவன் தம் வாழ்வில் பெரியோரின் துணையிருந்தால் அவன் பெறுதற்கரிய பெரும்பேற்றை பெற்றவனாகிறான். அப்பெரியாருடன் இணங்கி வாழ்தல் அவனுக்கு என்னென்னவெல்லாம் தருமென்பதை மகான் வள்ளுவபெருமான் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் கீழ்க்கண்ட பத்து குறள்கள் மூலம் வலியுறுத்துகிறார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment