Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Feb 2012 Part 2


        உருகி தியானம் செய்வதுதான், காலத்தை வெல்லுகின்ற முறையாகும். யாரை உருகி தியானம் செய்வது? யார் மீது அன்பு செலுத்துவது? என்பதை நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். ஞானிகளை அறிமுகம் செய்கிறோம். ஞானிகள் திருவடியைப் பற்றச் சொல்லியிருக்கிறோம். தினந்தினமும் ஆசானிடம் கேட்கச் சொல்லியிருக்கிறோம். தெளிவான அறிவை பெற்றுக் கொள்ளச் சொல்லியிருக்கிறோம்.

            நாங்கள் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம். எங்களுக்கு வாசி வசப்பட்டு பதினாறு வருடமாச்சு. பொல்லாத காம தேகம் வீழ்ந்து விட்டது. அதைத்தான் ஆசான் பட்டினத்தார் சொன்னார்.


நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21.

   நாட்டமென்றே யிரு சற்குரு பாதத்தை நம்பு - நாட்டம் என்பது விரும்புதல். நாட்டம் என்றே யிரு - ஒரே சிந்தனையாக இரு.

   இனி நான் பிறக்க விரும்பவில்லை, நீரே எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று இல்லறத்தார்கள் ஒரே சிந்தனையாக ஆசானை கேட்கவேண்டும். இனி நான் பிறக்க விரும்பவில்லை ஐயா! அதற்கு நீர்தான் அருள்செய்ய வேண்டும்! என்று இல்லறத்திலிருக்கும் ஒரு ஆண்மகனோ அல்லது பெண்மகளோ கேட்கவேண்டும்.

   இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அந்த காலத்தில், கயிறு பிடித்து இழுத்து ஆட்டும் பொம்மலாட்டம் போன்றது. இப்படிப்பட்டதுதான் நமது வாழ்க்கை. இதைத்தான் ஆசான் பட்டினத்தார் தனது மற்றொரு பாடலிலும் சொல்வார்.

நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயமென் றேயெண்ணிப்
பாக்களவாம் அன்னம் பசித்தோர்க் களியாமல்
போர்க்குளெம தூதன் பிடித்திழுக்கு மப்போது
ஆர்ப்படுவா ரென்றே யறிந்திலையே நெஞ்சமே.
- மகான் பட்டினத்தார் பாடல் - நெஞ்சொடு புலம்பல் - கவி எண் 17
                                                             
நீர்க்குமிழி வாழ்வை நம்பி நிச்சயமென்றே யெண்ணி இருப்பார்கள்.

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
- மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 21.


     ஞானியர்களின் சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்மகான் பட்டினத்தார்மகான் அருணகிரிநாதர்மகான் திருமூலதேவர் அருளிய பாடல்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்ஞானிகள் பாடல்களில் உள்ளதை நிறைய சொல்லியிருக்கிறோம்காரணம் இந்த பாடல்கள் உங்கள் செவியில் விழ வேண்டும்.

  உங்களுடைய ஆன்மா தட்டி எழுப்பப்பட வேண்டும்நீங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்தெளிந்த அறிவு பெற வேண்டும்ஞானிகளின் பாடல்களுடைய இயல்பு என்னவென்றால்ஆன்மாவை குத்தி எழுப்பும்தட்டி எழுப்புவதல்லஅடித்து எழுப்பக் கூடிய வார்த்தையை நான் பேசியிருக்கிறேன்.

    அன்பர்கள்ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரிமோட்சலாபமேஅடையக்கூடிய லட்சியம்காலம் நெருங்கிவிட்டதுஇனி தாமதிக்க முடியாது.

    ஆசான் இராமலிங்க சுவாமிகளிடம்அன்பர்கள் அனைவரும், “நீங்கள் இல்லாவிட்டால்நாங்கள் எப்படி அழைப்போம்எங்களை விட்டுப் போகிறீரேநாங்கள் என்ன செய்வோம்?” என்றார்அதற்கு ஆசான் இராமலிங்க சுவாமிகள், “நீ எந்த நேரத்தில் நினைத்தாலும் நான் வருவேன்” என்றார்.

இதைத்தான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
திருஅருட்பா ஆறாம் திருமுறை - வாய்ப்பறை யார்த்தல் - கவி எண் 1530.

     சத்தியம் செய்கின்றேன்சத்தியம் செய்யும் நோக்கம் என்னவென்றால்நீங்களெல்லாம் முன்னேறுங்கள்நினைந்து நினைந்துஉணர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்என்பார்.


    தினந்தினம் திருவாசகத்தையும்திருஅருட்பாவையும் சிறிது நேரம் படிக்க வேண்டும்அதே சிந்தனையாக இருக்கணும்நாமஜெபம் செய்யணும்அன்பர்கள்ஒரு பத்து நிமிடம்ஆன்மீகவாதிகளோடு பேசணும்வீண் வார்த்தை பேசுபவர்களிடம் பேசக்கூடாது.

   சுத்த ஆன்மீகவாதிகளானஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் குழுவாக அமரவேண்டும்படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ் படிக்க வேண்டும்மலேசிய அன்பர்கள்தங்கள் பிள்ளைகளை மலேசியாவில் தமிழில் படிக்க வைக்க வேண்டும்என்ன காரணம்தமிழ் படித்தவன்தான் கடவுள் ஆக முடியும்தமிழில்தான் இந்த ரகசியம் இருக்கிறதுவேறு எங்கும் இந்த இரகசியம் கிடையாது.

ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
மகான் கணபதிதாசர் - நெஞ்சறி விளக்கம் - கவி எண் 22.

     ஒரு பதம் தன்னைத் தூக்கிஅடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்இந்த இரகசியம் தமிழில்தான் உள்ளதுஅதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் தமிழ் படிக்க வேண்டும்.

     திருவாசகத்தை படிக்கத் தெரிய வேண்டும்நாம்பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தராவிட்டால்அவர்கள் திருவாசகத்தையும்திருஅருட்பாவையும் படிக்க முடியாதுஇது நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யக்கூடிய துரோகமாக கருத வேண்டும்.

    நம் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும்அவர்கள் ஒரு காலத்தில் தன் நிலை உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும்அப்படி பெற்றால்தான்தனது இருபத்தியொரு தலைமுறையை ஞானியாக்குவார்.

      ஒருவர் ஞானியானால்தனது தாய் வழி இருபத்து ஒன்றுதந்தை வழி இருபத்து ஒன்று தலைமுறையை ஞானியாக்குவார்ஆகவே தமிழ் படிக்கநம் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்தமிழ் படித்தவன் யாரும் கெட்டுவிட மாட்டான்அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

      நீங்கள் மலேசியாவில்மலேய மொழியும்ஆங்கிலமும் படிக்கலாம்தமிழும் படிக்கலாம்இதற்கு ஒன்றும் தடையில்லைநம் பிள்ளைகள் தமிழ்மொழி படித்தால்வேலைவாய்ப்பு கிடைக்குமா என்று நினைக்காதேஆசான் ஆசியால்நிச்சயம் கிடைக்கும்.

     தமிழ் படித்தால்தான்திருக்குறள்திருஅருட்பாதிருவாசகம் போன்ற ஞானநூல்களை படிக்க முடியும்தமிழ் படித்தவனுக்குத்தான் ஞானம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டுஆகவே ஞானத்தை அறிந்து கொள்வதற்கானரகசியமெல்லாம் தமிழ் மொழியில்தான் இருக்கிறது.


     தமிழ் நமக்கு தாய் மொழிஞான மொழிதமிழ் மொழிதான்ஞானத்திற்கு வழிவகுத்து கொடுத்ததுஆகவே தமிழை படிக்க வேண்டும்.  நம் தமிழகத்தில் கூட எல்லோரும் தம் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்இதை பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்று நினைக்கிறார்கள்.

       ஒரு காலத்தில் உண்மை தெரியும்திருக்குறளை படிக்க சொன்னால் படிக்க மாட்டேன் என்கிறானேதிருஅருட்பாவை படிக்கச் சொன்னால் படிக்க தெரியவில்லைதிருவாசகத்தை படிக்கச் சொன்னால் தடுமாறுகின்றானேஅப்போது “ஐயோநம் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்க முடியாத தடுமாற்றம் வந்துவிட்டதே என்று வருந்துவார்கள்.

     பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லைஇது அவரவர்கள் செய்த வினைப்பயன்.  அதற்கு நாம் பொறுப்பல்லநாம் சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்கிறோம்அன்னவன் விதிப்பயன் அவ்வாறிருந்தால் அதற்கு யாம் என்செய்வோம்அவனவன் வினைப்பயனுக்கேற்றவாறு ஆங்கிலப்பள்ளியில்தான் படிக்க வேண்டும்ஆங்கிலப்பள்ளியில் படித்தால்தான் உயர்ந்த அறிவு வருமென்று நினைக்காதேநீ எவ்வளவு பாடுபட்டாலும்எத்தனை ஆங்கில பள்ளியில் படித்திருந்தாலும் சரிதமிழ் மொழி படிக்காதவனுக்கு ஞானமில்லை.

    தமிழ் மொழியில்தான்ஞானத்திற்கான இரகசியம் இருக்கிறதுஇந்த ரகசியத்தை ஆசான் கணபதிதாசர் சொல்வார்,
                  
ஒருபதந் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தா யானால்
குருபத மென்றுகூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
வருபத நாகைநாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
-    ஆசான் கணபதிதாசர்

இதையே ஆசான் திருமூலர் சொல்வார்,

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
திருமந்திரம் - பிராணாயாமம் - கவி எண் 575

    தமிழில்தான் இந்த ஞான இரகசியம் இருக்கிறதுஅதை தமிழில்தான் படிக்க வேண்டும்நீ எப்படிதான் மொழி பெயர்த்தாலும்முடியாதுதன்னுடைய மகனையோமகளையோ கடவுளாக்கினால்அவர்கள் தன்னுடைய தாய் தந்தை பாவத்தையும் பொடியாக்குவார்கள்அப்படி செய்யாமல்அவர்களும் நம்மைப் போன்று அல்லற்பட்டு சாக நினைக்கின்றாயாஎதை நீ நினைக்கின்றாய்இதை உங்களால் போகப்போக உணர்ந்து கொள்ள முடியும்இதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்நாங்கள் சொல்கிறோம்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்

(உள்ளே போகின்ற காற்று வெளியே வராது.) அடுத்து,

உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே

     ஆக இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்ஆசான்தான் புருவ மத்தியில் ஒடுங்கி நரைதிரையை மாற்ற வேண்டும்.

     இப்ப எனக்கு நரை திரை இருக்கிறதுஎன்னை புகைப்படம் (போட்டோபிடிக்கின்றீர்கள்இன்னும் இரண்டு வருடம் கழித்து என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்அடேயப்பாஎன்னய்யாஇது.

     உலக நடையில்காய்தான் பழுக்கும்ஆனால் பழம் காயாகின்றதுஇது எப்படிஇது எந்த மொழியில் வந்ததுஇந்த இரகசியம் எந்த மொழியில் இருக்கின்றது.

    ஒரு இளம் பெண் முதுமையடைந்து கிழவியாவாள்இதுதான் உலக இயல்புஆனால் கிழவி குமரியாக முடியாதுஇப்ப நான் முதுமையாக தெரிகிறேன்இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநரை திரை மாறி மீண்டும் இளமை வரும்இதைப்பற்றி எந்த மொழியில் இருக்கிறதுதமிழ் மொழியில் மட்டும்தான் இருக்கின்றது.

     அதற்காக நான் மற்ற மொழிகளை புறக்கணிக்க விரும்பவில்லைதமிழ் மொழி வேண்டும்ஆங்கிலம் வேண்டும்அந்தந்த நாட்டு தாய்மொழியும் வேண்டும்ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ மூன்று அல்லது நான்கு மொழி தெரிந்திருக்க வேண்டும்அவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.

 தமிழ் தலை மொழியாகஉண்மை மொழியாகஞானத்திற்கு வழிகாட்டுகின்ற மொழியாக இருக்கிறது.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்

    உரோமம் - தலை முடிஇப்ப தலைமுடி வெளுத்திருக்கும்பின்பு கறுக்கும்புறப்பட்டுப் போகான் புரிசடையோனே - இந்த ரகசியத்தை தெரிந்திருக்க வேண்டுமென்றால் உன் பிள்ளை தமிழ் கற்றிருக்க வேண்டும்மலேசியாவில் உள்ள உங்கள் பிள்ளைகள்தமிழ்மொழிமலேயமொழிஆங்கிலமொழி தெரிந்திருக்க வேண்டும்அப்ப பல மொழிகளிலும் அவனை வல்லவனாக உருவாக்க வேண்டும்.


     பிள்ளைகள் ஆண்மகனாக இருந்தாலும்பெண்மகளாக இருந்தாலும் சரிஅகத்தீசன் நாமத்தை சொல்ல வைக்க வேண்டும்பிள்ளைகளை பார்த்துஓம் அகத்தீசாஓம் அகத்தீசா என்று சொல்ல சொல்லி கேட்க வேண்டும்இப்படி பிள்ளைகள் ஓம் அகத்தீசாஓம் அகத்தீசாஎன்று சொல்லும்போது ஆசான் அகத்தீசர் அவர்களை பார்க்கிறார்.


   ஆசான் அகத்தீசரின் பார்வைஆன்மாவை தட்டி எழுப்பும்ஒருநாள் சொன்னால்பலநாள் சொன்னால்தொடர்ந்து சொன்னால் ஆன்மாவை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல்அவன் எல்லா மொழியிலும் வல்லவனாவான்.

      நாங்கள் ஞானத்தைப் பற்றி பேசுகிறோம்நாங்கள் எந்த பள்ளிக்கும் சென்றதில்லைதமிழ் மொழியை நாங்கள் படித்ததாலும்ஆசான் திருவடியை பற்றியதாலும் எங்களுக்கு இந்த உண்மை தெரிந்தது.

    ஆகநான் சொன்ன இந்த கருத்துக்களை கேட்பவருக்கெல்லாம்தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமையும்வாய்ப்பும் கிடைக்கும்தலைவனை அறிகின்றவன்தான் தன்னை அறிவான்தன்னை அறிகின்றவன் தலைவனை அறிவான்இதுதான் நமது இலட்சியம்.

     தினந்தினம் நாமஜெபம் செய்தால்சிறப்பறிவு உண்டாகும்அதன்மூலம் ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்இந்த நோக்கத்தை அறிவதற்காகத்தான்நாம் வந்திருக்கிறோம்.

பிறந்தவர்க்கு மோக்ஷகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும்
மறந்தவர்க்கு மறலிவந்தால் வாலுவாருண்டு
வருமுன்னரே வலுக்கட்டிக் கொள்ளவேணும்
அறந்தழைக்கு மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல்
துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
மகான் அகத்தியர் - துறையறி விளக்கம் - கவி எண் 89

   பிறந்தவரெல்லாம் மோட்சகதியை தேட வேண்டும் என்பார்இதை மறந்துவிட்டால்மறலி வந்துவிடும் என்பார்அப்பஅறந்தழைக்கும் அறுமுகவன் பாதம் போற்றி என்பார்ஆறுமுகப் பெருமானையோஅகத்திய பெருமானையோ நினைக்கின்ற மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

  பிறந்தவர் மோட்சகதியை தேட வேண்டும்மோட்சகதியை தேட விரும்புகின்றவன்மரணமிலா பெருவாழ்வு பெற விரும்புகிறவன்நரகத்திலிருந்து விடுபட விரும்புகின்றவன்எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சத்தை விரும்புகின்றவன்ஆசான் ஞானபண்டிதனையும்அகத்தீசனையும் பூஜை செய்து இந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம்.

     நாம் வேண்டினால்பிறவாமையை வேண்ட வேண்டும்இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமைமற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96.


      பாவம் என்பதே உடம்புதானேபுண்ணியம் பெருகணும் என்றால் உயிர் ஆக்கம் பெறணும்உயிருக்கு ஆக்கமும்உடலுக்கு ஆக்கமும் வந்தால் பாவ புண்ணியம் சமமாகிவிட்டது என்று அர்த்தம்ஆகவேஅல்லவை தேய அறம் பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் என்றார்.

      நாங்கள் உங்களுடைய பொருளாதாரத்தில் லட்சியம் கொண்டிருந்தால்உங்களை அனுசரித்து பேசியிருப்போம்உங்களை மூடத்தனத்தில் மூழ்க செய்வோம்.

    ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசுவதை நீங்கள் கவனிக்க வேண்டும்தலைவன் எங்களுக்கு பொருளாதாரத்தை அள்ளிஅள்ளி கொடுக்கிறான்ஆகநாங்கள் பொருள் சேர்க்கும்போது நியாயம் இருக்க வேண்டுமென்று சொல்வோம்நியாயம் இருந்தால்தான்அவன் வாழ முடியும்இல்லையென்றால் நாளுக்குநாள் வினை சூழ்ந்து கொள்ளும்இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

   நாங்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறோம்இதுதான் பாதைஇதுதான் உண்மையான பாதைஇது இப்படித்தான் இருக்கிறதுபிடித்து கரையேறிக் கொள்ளுங்கள்உங்களுக்கு இதை சொல்ல வேண்டுமென்பது எங்களது கடமைநீங்கள் உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    ஆண்களாக இருந்தாலும் சரிபெண்களாக இருந்தாலும் சரிஜென்மத்தை கடைத்தேற்ற வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறோம்நீங்களும் முன்னேற வேண்டும்உலக மக்களும் முன்னேற வேண்டும்உலகமெல்லாம் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்உலக மக்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுபட வேண்டும்தெளிந்த அறிவு பெற வேண்டும்.

     எப்போது பார்த்தாலும்நோயும்பிணியும்வறுமையும் வாட்டி வதைத்து அல்லற்படுகின்ற மக்களுக்கு நான் பேசிய கருத்துக்கள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

  நான் பக்தி நெறியைப்பற்றி பேசியிருக்கிறேன்யோகத்தைப்பற்றி பேசியிருக்கிறேன்அடையக்கூடிய லட்சியத்தைப்பற்றி பேசியிருக்கிறேன்நீங்களெல்லாம் இப்பொழுது பதிவு செய்யப்பட்ட நாடாவைபலமுறை கேட்டு தெளிவடைய வேண்டும்.

   மகான் பட்டினத்தார் பாடல்ஆசான் கணபதிதாசர் பாடல்மகான் தாயுமான சுவாமிகள் பாடல்ஆசான் அருணகிரிநாதர் பாடல்களைப் பற்றி பேசியுள்ளோம்திருமந்திரம்திருக்குறள் போன்ற நூல்களிலிருந்தும் பேசியிருக்கிறோம்இதெல்லாம் பதிவாகியிருக்கிறது.

     இந்த பதிவு நாடாவை கேட்பவர்களெல்லாம் புண்ணியம் பெறுவார்கள்கேட்பவர்களெல்லாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்வார்கள்இது நேரம் வரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த உங்கள் திருவடி வணங்கி முடிக்கிறேன்வணக்கம்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment