Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI April 2012

அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஞானத்திருவடி
     
ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை நந்தன சித்திரை (ஏப்ரல் - 2012)                                            விலை : ரூ.10/
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்
உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு .........
2. மகான் ஔவையார் ஆசி நூல் ..................
3. அருட்பெருஞ்ஜோதியை அடையும் முறை....
- குருநாதர் அருளுரை ...
4. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் .........

மகான் ஒளவையார் ஆசி நூல்:-
கோடியில் ஒருவன் நீ தருமத்தின் தலைவன்
கலியுகம் காக்கவந்த கருணா மூர்த்தி
தேடியே வந்து தேனெனும் தமிழால்
தன்னை வாழ்த்தி வரமருள வந்தேன்

வரம்பெற்ற அரங்கா எங்கள் காலம்பின்
வாழ்கின்றாய் உலகில் சுத்த ஞானியாய்
பரமனின் அருளடி இறுகப் பிடித்து
பூலோகம் காக்கும் புண்ணிய ஞானியே

ஞானியே கலியுகத்தில் உன்னைக் கண்டு
நான் மகிழ்ந்து ஓங்காரக்குடில் அமர்ந்திருக்கேன்
தான் செய்யும் தொண்டிற்கு பணிபுரிய வேண்டி
தானத்தையும் தவத்தையும் கண்டு மகிழ்ந்தேன்
- மகான் ஒளவையார் ஆசி நூல்.


அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும். இந்நூலை வாங்குதல், படித்தல், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும். எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும், சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும், அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள்செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்து, அவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள், ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய்
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

அன்புடன் - இரா.மாதவன்.

துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி

நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

         மேற்கண்ட 131 சித்தர்கள், மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும். சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, புத்திர பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி, மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும். மேலும், மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால், பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காக, தமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம், பத்மநாபன், சுபாஸ், ராமமூர்த்தி, ரெங்கநாதன், திருமுகம் மற்றும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கோவை, பொள்ளாச்சி, செங்கல்பட்டு,வேதாரண்யம், விருதுநகர், மண்ணச்சநல்லூர், திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள். மேலும் உடல் ஆரோக்கியமும், நீடிய ஆயுளும், எல்லா நலமும் வளமும் பெறுவார்கள். மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.


திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
08.02.1998 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை

"அருட்பெருஞ்சோதியை அடையும் முறை"

அன்புள்ள சன்மார்க்க சங்க அன்பர்களே வணக்கம்.
ஞானிகளை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பார்கள். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று மகான் இராமலிங்க சுவாமிகள் சொல்வார்கள். இந்த உடம்பை ஜோதியாக்க வேண்டும். அதே சமயத்தில் ஞானிகள் புருவமத்தியில் சதகோடி சூரியபிரகாசமான ஜோதியை காணுகிறார்கள்.

''கண்கடுக்க புகை சிறிதும் காட்டாதே" என்பார் மகான் இராமலிங்க சுவாமிகள். கண்கடுக்க என்பது கண்ணில் வலி இருக்கும். அப்ப கண்கடுக்க புகைசிறிதும் காட்டாதே ஜோதியைக் காண் என்பார்.

எல்லா ஞானிகளும் கண்ணை மூடி ஜோதியைக் கண்டு சொல்லவொண்ணா பேரானந்தத்தில் இருப்பார்கள். எல்லா ஞானிகளும் ஜோதி தரிசனத்தை காணுகின்ற மக்கள், அந்த ஜோதியைக் கண்டவர்கள், அதை அருட்பெருஞ்ஜோதி என்பார்கள்.

நாம் ஏன் அந்த ஜோதியை காணக்கூடாது? அந்த ஜோதி நம்முள் இருக்கிறது. ஆனால் நம்மால் காண முடியவில்லை. என்ன காரணம்? ஜோதியைக் கண்டவன் தான் ஜோதியை நமக்கு காட்ட வேண்டும். "உற்று நின்றாடும் அத்தகு சோதியை” என்றார். ஞானிகள் ஆசியில்லாமல் அவர்கள் காண்கின்ற ஜோதியை நம்மால் காண முடியாது. அவர்கள் தான் ஜோதி தரிசனத்தை நமக்கு காட்ட முடியும். இதை ஆசான் அகத்தியர்,
மலைவாசல் மதிரவி யையடையும்போது
வன்னி ஒளி தீக்காடு மதியோ கோடி.
- துறையறி விளக்கம் 5.
என்பார். ஞானிகள் பிரும்மாண்டமான சுடர்களைக் காண்கிறார்கள். ஏழு வகையான வண்ணங்களை சுடர்களாக பார்க்கும் போது கண்கள் கூசும். நாம் காணும் இந்த சூரியன் ஒரு பங்குதான். ஞானிகள் காண்கின்ற சூரியன் சத (நூறு) கோடி என்பார். மதி (சந்திரன்) கோடி, வன்னி (அக்னி) கோடி என்பார். கோடிக்கணக்கான சூரிய பிரகாசம் உள்ள ஒளியைக் காண்கிறார்கள்.

உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார் இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
- திருமந்திரம் - அன்பு செய்வாரை அறிவன் சிவன் - கவி எண் 284.
என்கிறார் மகான் திருமூலர்.

ஆக ஒரு கோடி சூரியனுக்கு ஒப்பான ஜோதியை புருவமத்தியில் ஞானிகள் பார்க்கிறார்கள். ஆசான் இராமலிங்க சுவாமிகளையோ, மாணிக்கவாசகரையோ, அருணகிரிநாதரையோ, பட்டினத்தாரையோ வணங்கினால்தான் அந்த ஜோதியை நாம் பார்ப்பதற்கு உதவி செய்வார்கள்.

அருட்பெருஞ்சோதியை காண விரும்புபவர்கள் ஆசான் என்ன சொல்கிறாரோ, அதை கேட்க வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுந்திரு என்பார்கள், சாப்பிடும்போது நிறுத்து என்பார்கள்.

உப்பில்லாத உணவுதான் சாப்பிட வேண்டும். அவர்கள் சிற்றின்பத்தில் முற்றிலும் ஈடுபடக்கூடாது. சிற்றின்பத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஜோதி கண்டிப்பாக தெரியாது. அப்படியே ஜோதி புகைந்து போகின்றது. உடம்பு கருகிப் போகும். உடம்பு கருகிப்போனால் ஜோதியை காணமுடியாமல் செத்துப் போவான். ஆக சிற்றின்பத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஜோதி தெரியாது.

ஆசான் திருமூலதேவர்தான் சொல்லுவார் , "அவன் காணுகின்ற ஜோதி எங்கள் ஆசி” என்பார்.
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே
என்றார். முன்பு நின்றானே - நம்மோடு இருப்பவன் என்று அர்த்தம். ஞானிகள் எப்போதும் நம்மோடு இருப்பார்கள்.

ஆசான் திருமூலதேவர், கருவூர் முனிவர் எல்லாம் ஜோதியைக் கண்டவர்கள். அந்த ஜோதியை இவர்களெல்லாம் எந்த கொள்கையை கடைப்பிடித்து கண்டார்கள்?

ஆசான் சொன்னதை செய்தார்கள். உப்பில்லாமல் சாப்பிட வேண்டும் என்றார். அப்படியே உப்பில்லாத உணவை சாப்பிட்டார்கள். தூங்காமல் இருக்க வேண்டுமென்றார். தூங்காமல் இருந்தார்கள். பெண் மாயையற்று இருக்கணும் என்றார்கள். அப்படியே இருந்தார்கள்.

என்னய்யா இதையெல்லாம் சாதிக்க முடியுமா? ஞானிகள் தான் சாதிக்கிறார்கள்.

ஆசான் திருமூலதேவர், கருவூர் முனிவர் , போகமகாரிஷி இவர்களெல்லாம் ஜோதியைக் கண்ட மக்கள். இவர்களை வீழ்ந்து வணங்கி, ''அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும்” என்று கேட்க வேண்டும்.

ஞானம் சித்திப்பதே ஜோதியைக் காண்பதற்காகத்தான். அந்த ஜோதியை காண்பது பேரானந்தத்தை தரக்கூடியது. "மோட்ச லாபம் அடையவேண்டுமென்று” பெரியவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறான்.

மோட்ச லாபம் அடைவதே ஒளியைக் காண்பதற்குதான். ஒருவன் மோட்ச லாபம் அடைகிறான் என்றால் ஒளியைக் காண்கிறான், ஜோதியைக் காண்கிறான் என்று அர்த்தம்.

இது என்ன சாதாரண விசயமா? சத (நூறு) கோடி சூரியனுக்கு ஒப்பான ஒளியைக் காண்கிறான். இதுதான் மோட்ச லாபம்.

புரை அற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
- திருமந்திரம் - உபதேசம் - கவி எண் 134.

இப்ப நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எந்த மாய்கைக்காக சுக்கிலத்தை (விந்து) செலவு செய்கிறானோ, அதுவே ஜோதியாக மாறும் என்னும் இரகசியத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இது நாள் வரையில் நீ எந்த சுக்கிலத்தை அசுத்தமானது, எது விஷமானது என்று நினைக்கின்றாயோ, அதுவே சதகோடி சூரிய ஒளியை தரக்கூடியது.
இப்ப நாங்களும் இதை அடையலாமா என்றால், நீங்களும் அடையலாம், எல்லோரும் அடையலாம். இதை ஞானிகள் தான் சொல்ல வேண்டும்.

நீ சுக்கிலத்தை சிற்றின்பத்திற்காக செலவு செய்கிறாய். நீ செலவு செய்யாமலிருந்தாலும் அது தானாக போயிடும். இல்லையென்றால் கனல் ஏறிவிடும். அதாவது உடம்பில் சூடு ஏறிவிடும்.

காணுவது பராசத்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்த ததினுடைய கனல்தான்மைந்தா
பூணுவது இதையன்றிப் புலன் வேறில்லை
பூமியுட நாதமென்று மிதற்குப்பேரு
வாணுலகிற் றிரியாதே மயங்கிடாதே
வாய்பேசாப் பூரணத்தை வணங்கிப்போற்றித்
தோணுவதெல் லாமுனக்குத் தோணும்பாரு
துரியாதீ தம்மதனைத் தொடர்ந்துபாரே.
- சுப்ரமணியர் யோக ஞானம் 500ல் கவி எண் 29.
என்று ஆசான் சுப்ரமணியர் சொல்லுவார்.

காணுவது பராசக்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்த அதனுடைய கனல்தான் மைந்தா
இப்ப இல்லறவாதிகள் தேகசம்பந்தத்தில் ஈடுபட்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால் உடம்பில் கனல் ஏறிவிடும்.
ஆச்சடா ஆதிவஸ்துவை அறியாவிட்டால்
அனலாக கொதித்திடுமே தேகந்தானும்
அந்த மர்மத்தை அறிந்த மக்கள் புரிந்து கொண்டு, இதை வஸ்து என்பார்கள்.

தினமும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்வதால், நச்சுத்தன்மையான இந்த சுக்கிலத்தை ஜோதியாக மாற்றுகிறார். இது சாதாரண விசயமல்ல. அவர்களின் ஆசியைத் தவிர வேறு எந்த முயற்சியாலும் முடியாது. அப்ப அவர்கள் அருள்தான் ஜோதியாக மாறுகிறது. அருட்பெருஞ்ஜோதி என்பார். அருளைப் பெற்றதால் ஜோதி தெரிகிறது.

சோதிநவ குளிகையப்பா சோதிசூட்சம்
சொல்லிவிட்ட குறையறிந்து குளிகை சேர்த்துப்
பாதியிரு கூரறிந்து காலைப்பாரு
பருதியொளி முதுகு புறம் பாய்ந்து வீசும்
சோதியிதை யுள்ளபடி யுனக்குச்சொன்னோம்
சோதித்துப் பார்த்தவர்க்கு அதீதந்தோணும்
ஆதிதிரு மூலர்நூ லறிந்துகொண்டால்
அவன்சித்தன் அவன்ஞானி யவனேயாமே
- திருமூலர் ஞானம் - கவி எண் 51.
என்றார்.

முதுகுப் பக்கம் அனல் கொதிக்கும். அனல் கொதிக்க கொதிக்க இவன் சொல்லொண்ணா பேரானந்தத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.

நான் இப்ப முதுகு புறம் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்ப ஜோதியை நான் காணுகிறேன். சிறிதளவு பார்க்கும் போதே கண்ணை திறக்க முடியாத பேரானந்தத்தை அடைகிறேன். இப்ப நான் காண்கின்ற சிறிய ஒளியும் ஆசான் காட்டிய கருணை.

ஆசான் என்கூடவே இருக்கிறார். ஏனய்யா உன் கூடவே இருக்கிறார். நான் காலையில் எழும்போதே ஆசான் அகத்தீசரையும், திருமூலதேவரையும் வணங்கி, "நாயினும் கடையேனாகிய என்னை ஒரு பொருட்டாக மதித்து என்னை ரட்சிக்க வேண்டும்'' என்று கேட்போம். இது நான் சொல்வது கோடியில் ஒன்றுதான். இன்னும் அவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டும்.

நீங்களெல்லாம் பெரியவங்க ஐயா! நாங்கள் எல்லாம் பாவிகள். எத்தனையோ பாவிகள் உனது திருவருட் கடாட்சத்தால் சித்திப் பெற்று, சொல்லொண்ணா பேரானந்தம் அடைகிறார்கள். அதில் யானும் ஒருவன். என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லி யாசிக்கிறோம், கைகூப்புகிறோம்.
நாங்கள் கையேந்தி கேட்டுக்கொள்ள அவர்கள் (ஞானிகள் ) கருணை காட்டுகிறார்கள். அவர்கள் காட்டும் அந்த கருணை அல்லது அருள் தான் அருட்பெருஞ்ஜோதி எனப்படும்.
ஞானிகள் மீது அன்பு செலுத்த வேண்டும். அன்பு செலுத்த அன்பு செலுத்த அவர்கள் "நல்ல பிள்ளை” என்பார்கள்.

எனக்கு நல்லது கெட்டது தெரியாதைய்யா. நீங்களெல்லாம் புரிந்தவர்கள், உணர்ந்தவர்கள். என்னை ரட்சிக்க வேண்டுமென்று, ஞானிகள் நம்மீது அன்புகாட்டும் வரை தொடர்ந்து கேட்க வேண்டும்.
ஒரு பக்கம் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்கிறோம். ஒரு பக்கம் தியானம் செய்கிறோம். புண்ணியமும் அருள் பலமும் சேருகின்றது.
அவர்களுடைய கருணையே நமக்கு அருளாக இருக்கிறது. அவர்களை மேலும் கேட்க கேட்க அளவில்லா மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மகான் திருமூலதேவரை கேட்டால் புஜண்ட மகரிஷி பார்ப்பார். புஜண்ட மகரிஷி பார்த்தால் கோரக்க மகரிஷி பார்ப்பார். கோரக்க மகரிஷி பார்த்தால் இடைக்காடர் பார்ப்பார். இடைக்காடர் பார்த்தால் கொங்கண மகரிஷி பார்ப்பார்.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் ஒருவன் வந்து கொண்டிருக்கிறான். நாமெல்லாம் மனம் இரங்கி அவனுக்கு அருள் செய்யவேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆரம்பத்தில் அருள் செய்ய மாட்டார்கள். நாம் விடாது கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பெரியவங்க நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண் திறக்காமல், நிசப்தமாக பேரானந்தத்தில் இருப்பார்கள். கண் திறக்கா லகரியென்று இதை சொல்வார்கள்.
ஆசான் அகத்தீசர் நாமத்தை எந்த மூலையிலிருந்து சொன்னாலும் ஒன்பது கோடி ஞானிகளும், “யாரது நம் ஆசானைக் கூப்பிடுகிறான்” என்று பார்ப்பார்கள்.
அடியேன் நாயினும் கடையேன், பாவி. நீங்களெல்லாம் புண்ணியவான்கள். எங்களால் உங்கள் திருவடியைப் பற்ற முடியவில்லை. அதற்கு நீங்கள் தான் அருள் செய்ய வேண்டுமென்று வணங்கி கேட்கிறோம்.

இப்படி வணங்கி கேட்கும்போதே கருணையே வடிவான ஞானிகளின் பார்வை நம்மீது படுகின்றது. இப்படியே சில ஆண்டுகள் நாம் பாடுபட்டு ஞானிகளை வணங்கி வந்திருப்போம். நம் வினை, பாவம் என்ன செய்யும்? நாம் ரொம்ப கற்றுக் கொண்டதாக சொல்லும். இதுதான் பாவத்தின் சின்னம்.

நாம் கற்றது போதாது. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நமக்கு இந்த நூல் அறிவு தேவையில்லை. பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். எப்படியாவது அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். எங்காவது தவறு வந்தால் நம்முடைய ஜென்மத்தை கடைத்தேற்ற முடியாதென்று பெரியவர்களிடம் கேட்க வேண்டும்.

மேலும் ஞானிகளிடம், "நீங்களெல்லாம் பெரியவர்கள். ஓரளவுக்குத்தான் குற்றத்தை மன்னிப்பீர்கள். நான் மேலும் மேலும் குற்றம் செய்தால் உங்கள் மனதில் கோபம் வந்துவிடும். உங்கள் கோபத்திற்கு நாங்கள் ஆட்படக் கூடாது. அதற்கும் நீங்கள் தான் எனக்கு அருள்செய்ய வேண்டும்” என்றும் கேட்க வேண்டும்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் பார்க்க விரும்புகிறவர்கள் இப்படித்தான் கேட்க வேண்டும். " அப்பா என் அறியாமை காரணமாக நான் மிகுதியாக கற்றதாக நினைத்து தற்பெருமை கொள்கிறேன். உன் திருவடியை உருகி தியானிக்க நினைக்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று” கேட்க வேண்டும்.

காலையிலும், மாலையிலும் எப்பொழுதும் அகத்தீஸ்வரா அகத்தீஸ்வரா என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி சொன்னால்தான் நம்மை பார்ப்பார்கள். இல்லையென்றால் "போடா” என்று போயிடுவார்கள்.

இப்ப நாம என்ன செய்தோம். இராமலிங்க சுவாமிகள், மாணிக்கவாசகர், தாயுமான சுவாமிகள், பட்டினத்தார், அருணகிரிநாதர், நந்தீசர், அகத்தீசர், ஆசான் ஞானபண்டிதன், திருமூலர், காலாங்கி, போகர், புலிப்பாணி, சட்டமுனி, சண்டீசர், கருவூர்முனிவர், சிவவாக்கியர், கொங்கண மகரிஷி, இடைக்காடர், கோரக்கர், உரோமரிஷி, புஜண்டமகரிஷி, குதம்பைச்சித்தர், அகப்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், அழுகண்ணர், முத்தானந்தர், கடுவெளிச்சித்தர், புலத்தீசர், சுந்தரானந்தர், மச்சமுனி, மார்க்கண்டேயர், சுகப்பிரம்மரிஷி, தேரையர் , கமலமுனி, மெய்கண்டதேவர், யூகிமுனிவர், சூதமுனிவர், சிவயோகமாமுனி, யோகி வேம்பண்ணா , கஞ்சமலைச் சித்தர், பிருகு மகரிஷி, வசிஷ்டமகரிஷி, விசுவாமித்திரர், வள்ளுவபெருமான், பிரும்மமுனி, தன்வந்திரி, பதஞ்சலி முனிவர், வியாக்கிரமர், காசிபர், கௌசிக மகரிஷி, பராசரிஷி, கவுபாலர், கலைக்கோட்டு முனிவர், ஜமதக்னி, குறும்பைச்சித்தர், கடுவெளிச்சித்தர் என்று இப்படியெல்லாம் அவர்களை கூப்பிடுவோம்.

என்னடா என்று பெரியவர்கள் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பாவியாக ஒருவன் இருந்தாலும் சரி, இப்போது சொல்லிய ஞானிகளை அவன்

மனதில் தியானித்து, "நீங்கள் தான் எனக்கு அருள் செய்யவேண்டும்” என்று கேட்டால், அவன் கையில் புற்றுநோய் இருந்தாலும் சரி, "இவனைக் கைவிடாதே” என்று புண்ணியவான்கள் முடிவெடுக்கிறார்கள்.

ஆசான் சுப்ரமணியர்தான் உலகத்திற்கே தலைவர். அவர் இவனை நல்ல பிள்ளையென்று, மனம் இரங்கி இவனுக்கு அருள் செய்வார்.
ஆக இவ்வளவு ஞானிகளை கூப்பிட்டால்தான், அருட்பெருஞ்ஜோதியைக் காணலாம். இது என்னுடைய அனுபவம், கற்பனை அல்ல.

புண்ணியவான்களின் பார்வை நம்மீது படபட முதலில் சினம் குறையும். நல்ல பண்பு வரும். பொறாமை, வஞ்சனை, சூது, ஜாதிவெறி, மதவெறி, உணர்ச்சி வசப்படுதல், பிறரை வருத்தி அதன் மூலம் மகிழ்ச்சியடைவது, இவையெல்லாம் பாவமென்றும், இவற்றையெல்லாம் செய்யக்கூடாதென்றும், இவையெல்லாம் குணக்கேடுகளென்றும் உணர்த்துவார்கள். நம்மிடமுள்ள குணக்கேடுகளை உணர்த்தினாலன்றி அருட்பெருஞ்சோதி ஆண்டவரை பார்க்க முடியாது.

நம்மிடமுள்ள குணக்கேடுகளைப் பற்றி ஞானிகளிடம் கேட்க வேண்டும். கேட்டால்தான் அருள் செய்வார்கள். இதை ஆசான் திருவள்ளுவர்,

ஏதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு.
- திருக்குறள் - புறங்கூறாமை - குறள் எண் 190.
இது சாதாரண விசயமல்ல. நம்முடைய குற்றங்கள், குணக்கேடுகள் நமக்கு தெரியாது. நம்முடைய அறிவு நம்மை கடைசிவரைக்கும் பாவியாக்கிக் கொண்டே இருக்கும்.
ஆக நம்முடைய பாவம் என்ன செய்யும்? நாம் சிறந்த மனிதன் நம்மைவிட சிறந்த மனிதன் இந்த உலகத்தில் யாருமில்லை என்று நம்முடைய பாவம் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கும். ஆக குணக்கேடுகள் தீர வேண்டும். குணக்கேடுகள் எப்படி தீரும்?

தலைவனைக் கூப்பிட வேண்டும். "ஏனய்யா! நானும் பெரிய புண்ணியவானாக வேண்டுமென நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. நீங்களெல்லாம் பெரிய ஞானிகள். எனக்கும் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும்.

அப்புறம் என்ன கேட்க வேண்டும்? ''ஐயா, நீங்களெல்லாம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர்கள், கருணையே வடிவானவர்கள். எனது குணக்கேடுகளை உணர்த்தியிருக்கிறீர்கள். குணக்கேட்டை உணர்த்தினால் மட்டும் போதாது, அதை நீக்கிக் கொள்ள நீங்கள் தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என கேட்க வேண்டும்.

''குணக்கேடு உள்ளவர்கள் பாவிகள். அவர்கள் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை காண முடியாதென்பதும், பாவிகளை இரட்சிக்க மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நான் பாவியென்று முன்னமே சொல்லிவிட்டேன். ஆகவே பாவத்திலிருந்து விடுபட நீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்றும் கேட்க வேண்டும்.

ஆக குணக்கேடுகள், காமவிகாரங்கள், சலனங்கள் எல்லாம் ஞானிகளின் திருவடியைப் பற்றினால் அவற்றை ஞானிகளே சரிப்படுத்தி நீக்கி விடுவார்கள்.

ஒரு மனிதன் ஞானியாக வேண்டுமென்றும், அருட்பெருஞ்ஜோதியைக் காணவேண்டுமென்றும் முயற்சி செய்வான். அப்படி முயற்சிக்கும் போது பல ஜென்மங்களில் ஆசிரமம் வைத்து நடத்தியிருப்பான். அப்போது அவன் நல்ல தொண்டர்களை புறக்கணித்திருப்பான். அந்த செய்கையால் பாவம் சூழும். அப்படி வந்த பாவங்களை ஆசான் தான் சரிப்படுத்துவார்.

அருட்பெருஞ்சோதியை அடைந்த மக்களுக்கும் எல்லா குணக்கேடுகளும் முன்னமே இருந்திருக்கும். அதை யாரும் மறுக்கவே முடியாது.

பல ஜென்மத்தில் செய்த பாவங்கள் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் அவனைப் போட்டு கசக்கி வைக்கும். அவன் மலைபோல உள்ள இந்த பாவச்சுமைகளை தாண்டி வந்தாக வேண்டும்.

இவ்வளவு பாவச்சுமைகளையும், அவர்களே தீர்த்து வைப்பார்கள். எப்படி? மன உளைச்சலாகவும், நோயாகவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாகவும் ஏதாவது, ஒன்றை தந்து கொண்டேயிருந்து, அவைகளை நாம் ஏற்று தாங்கிக்கொள்ள, அவர்களே அருள் செய்து உதவுவார்கள்.

மனிதனுக்கே உள்ள, அந்த அருட்பெருஞ்சோதியை அறிந்து கொள்வதற்கு, ஒரே ஒரு உபாயம் ஞானிகளின் நாமத்தை சொல்லி யாசிக்க வேண்டும். கெஞ்சி கேட்டுக் கொள்ள வேண்டும். இரகசியமாக வீழ்ந்து வணங்கி கேட்க வேண்டும். கும்பலில் வீழ்ந்து வணங்கினால் ஆடம்பரத்திற்காக கும்பிடுகிறான் என்று தலைவன் நினைத்து விடுவான். இந்த மாதிரி வேலையே வைத்துக் கொள்ளக் கூடாது.
ஒருவன் அருட்பெருஞ்சோதியை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
கதவை இழுத்து மூடிக்கொள்ள வேண்டும். வெளியே எந்த ஓசையும் கேட்க கூடாது. சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும்.

நீர்தான் என்னை இரட்சிக்க வேண்டும். அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். நீர்தான் அருள் செய்ய வேண்டுமென இரகசியமாய் ஞானிகளின் நாமத்தை சொல்பவர்கள்தான் கடைத்தேறிக் கொள்வார்கள்.

நாங்கள் ஆசானை இப்படித்தான் கேட்டு வந்துள்ளோம். வேறு ஒன்றும் வேண்டாம். பொல்லாத வறுமையில் தள்ளினாலும் சரி, செல்வத்தைக் குவித்தாலும் சரி, எவ்வளவு புகழ் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அதனுடைய முடிவு, என்னுடைய முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும்.

முன் செய்த பாவ வினையின் காரணமாக நான் எடுத்துக்கொண்ட இலட்சியங்களெல்லாம் தடைபட்டாலும் சரி, அதற்கும் நீரே காரணம், தடைபடாமல் வெற்றி பெற்றாலும் அதற்கும் நீரே காரணமென்று நான் உணர்வதற்கு நீர் எனக்கு அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். ஆக இதுவும் ஒரு வேண்டுகோள் தான். இப்படிப்பட்ட எங்களுடைய அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறோம். இப்படியெல்லாம் நாங்கள் தலைவனிடம் கேட்டு வந்திருக்கிறோம்.

ஆக அருட்பெருஞ்சோதியைக் காண முயற்சி செய்து இப்போது அந்த எல்லைக்கு வந்து விட்டோம்.

நான் கண்ணை மூடினால் அந்த ஜோதியைப் பார்க்கிறேன். அது கண் திறக்கவல்லா லகரி என்றார். கண்ணை திறக்க முடியாது. கண்ணை மூடி பார்த்தால் எத்தனை நாள், எத்தனை வருடம் இருந்தோம் என்பதே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு சுடரைக் காணுகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

இப்படியுள்ள சுடரைக் காணுகின்ற வாய்ப்பு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. நீங்களும் என்னைச் சார்ந்திருந்து அவசரப்படாமல், பொறுமையாக என் பாதையை பின்பற்றி வந்தால் நீங்களும் அந்த இலட்சியத்தை அடையலாம்.

மனிதனுக்கே உரிய மோட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்றால், ஞானிகள் தயவு இருக்க வேண்டும். நமக்கு எப்போது பார்த்தாலும் மனப்போராட்டமாகவே இருக்கும். ஒரு ஐந்து நிமிடம் கூட மனம் சாந்தமாக இருக்காது.

ஒரு குறிப்பிட்ட காலம் வரும்வரையில் நாம் எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. நாம் தியானம் செய்துதான் ஆகவேண்டும், வேறு வழியேயில்லை. ஆக இந்த ஜென்மத்தில் நீ எனக்கு கொடுத்தாலும் சரி அல்லது கெடுத்தாலும் சரி, எல்லாம் ஞானிகளின் திருவருள் சம்மதத்தால்தான் நடக்கும் என்பது இந்த துறையில் வருகின்ற மக்களுக்கு தெரியும்.

மகான் இராமலிங்க சுவாமிகளுக்கே சந்தேகம் வந்தது. வாசி வசப்பட்ட மக்களுக்கு சந்தேகம் வர வேண்டிய அவசியமில்லை. இதை மகான் திருமூலர் சொல்வார்

மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
- திருமந்திரம் - ஞாதுரு ஞானஞேயம் - கவி எண் 1611.

மோன நிலை என்பது வாசி வசப்படுதலாகும். மோனம் கைவந்தவர்களுக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் வாசி வசப்பட்டாலும் அந்தக் காற்று உள்ளே தங்கியிருக்க வேண்டும். "பூசிக்க பூசிக்க போட்ட குளிகை” என்பார். ஆகவே வாசிவசப்பட்ட மக்கள் எல்லா காரியங்களையும் நல்லபடியாக செய்வார்கள்.

மகான் புஜண்ட மகரிஷியாக இருந்தாலும் சரி, மகான் போகமகாரிஷியாக இருந்தாலும் சரி, இவன் பல ஜென்மங்களில் நல்லபடியாக ஞானிகளை பூஜை செய்து ஆசிபெற்றிருக்கிறான். இவன் எதை மேற்கொண்டாலும் சரி, அதை தடையில்லாமல் நிறைவு செய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் இவன் சோர்வடைவான், என்று சொல்லி இவனது விருப்பத்தையெல்லாம் எல்லா ஞானிகளும் கைகூடச் செய்வார்கள்.

சரி, நம் பிள்ளை எதை விரும்புகிறான் என்று ஆசான் கேட்டார்.
இவர்களுடைய விருப்பமெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்றுவதாகத்தான் இருக்குமே தவிர, வேறு விருப்பமே இருக்க முடியாது. மக்களுக்கு தொண்டு செய்வார்கள். பொழுதை நற்பொழுதாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் சுயநலமே இருக்க முடியாது.

இந்த துறையில் வருகின்ற மக்கள் திரவியத்தின் (பொருளின்) பயனை அடைய எண்ணவே மாட்டார்கள்.
கோடிக்கணக்கான பொருள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாது, அதில் புழங்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த பண்பை தலைவன் கொடுக்க வேண்டும்.

ஞானிகள் இவனுக்கு வேண்டிய பொருளை அள்ளித்தந்து, அன்பர் கூட்டத்தையும் உருவாக்கி தருவார்கள். எங்கே பார்த்தாலும் பண்புள்ள அன்பர்களையும், தொண்டர்களையும் உருவாக்கி, இவன் மனம்மகிழும்படி செய்வார்கள். இவனுக்கு கோடிக்கணக்கான பொருள் குவிந்தாலும் அதை இவன் விரும்ப மாட்டானென்று பிரம்ம முனிவர் சொன்னார்.
"திரவியத்தின் பயனை அடையவே எண்ண மாட்டான் " என்று சொன்னார் பிரும்ம முனிவர்.
ஆக ஒருவனுக்கு வாசி நடத்திக் கொடுக்கிறார் என்றாலே, அவன் பொருளாதாரத்தைக் கண்டு மயங்கமாட்டான். ஞானிகளின் பெயரைக் கெடுக்க மாட்டான்,

ஞானிகளின் பெருமையைப்பேசி தொண்டர்களையும், ஆன்மீகவாதிகளையும் ஒருமுனைப் படுத்துவான், தொண்டர்களை கைதூக்கி விடுவான். இத்தகைய பண்புகள் அவனிடம் இருப்பதால் அவனுக்கு வாசி நடத்திக் கொடுக்கலாம், பொருளை அள்ளிக் கொடுக்கலாம் என்று ஞானிகள் முடிவெடுத்து அருள் செய்வார்கள். இல்லையென்றால் ஞானிகள் "என் பிள்ளையென்று சொல்ல மாட்டார்கள் இதை மகான் புஜண்ட மகரிஷி சொல்வார்

அடங்குவார் உச்சியிலே அமர்வார்வந்து
அவர்பட்ட பாடதனைச் சொல்லிப்போவார்
முடங்குவார் பிரசோப துன்பம்போல
முனிகூட்டம் வந்திடுவார் உதவி செய்ய
கடங்கள்பார் சாவனுட துன்பம்போல
காணுமடா ஒளிகண்டாற் துன்பந்தீரும்
இடங்கண்டால் யெல்லோருந் தானாக வந்து
யென்குழந்தை யென்றுசொல்லித் துணைசெய்வாரே.
- காகபுஜண்டர் பெருங்காவியம் 1000 - கவி எண் 409.
என்று சொல்வார்.
"இடங்கண்டால் எல்லோரும் தாமே வந்து என் குழந்தையென்று சொல்லித் துணை செய்வாரே"
இடம் காணுதல் என்பது புருவமத்தியாகிய இரகசியத்தை காணுதல் என்று அர்த்தம்.

ஒருவன் புருவமத்தியாகிய இரகசியத்தை அறிந்தால் தான் ஞானிகளெல்லாம் என் பிள்ளை என்று சொல்வார்கள்.
அகத்திய மகரிஷியோ, போகமகாரிஷியோ , திருமூலதேவரோ, புஜண்ட மகரிஷியோ ஒருவனை என் பிள்ளையென்று சொன்னால், ஒன்பது கோடி பேரும் என் பிள்ளை என்று சொல்லுவார்கள்.
ஒருவனை பாவியென்று ஒரு மகான் முடிவெடுத்தால், அத்தனை ஞானிகளும் பாவியென்று முடிவெடுத்து, அவனை திரும்பியே பார்க்கமாட்டார்கள்.

ஆக பொருளாதாரத்தைக் கண்டு மயங்காத பண்பு, ஜாதிவெறி இல்லாத பண்பு, பகைமை கொள்ளாத பண்பு, குற்றத்தை மன்னிக்க கூடிய பண்பு, எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற பண்பு, தாய்மை குணம் உள்ள பண்பு, ஆக இத்தகைய குணப்பண்புகள் எல்லாவற்றையும் தலைவன் அருள்வார்.
இந்த காலக்கட்டத்தில் எங்கள் செயல்பாடுகள் எல்லாம் உலக நலனை மையமாக கொண்டிருக்கும். எங்களுக்கு வேறு சுயநலமே இருக்க முடியாது. இந்த பண்புகள் எல்லாம் தலைவன் கொடுத்தது.

எனவே இல்லறத்தார்கள் தலைவனிடம் என்ன கேட்க வேண்டும். "ஐயா, எனக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. நீங்கள்தான் உணர்த்த வேண்டும்'' என்று சொல்லிக் கேட்டால் ஞானிகள் அருள் செய்வார்கள். நானே பெரிய மனிதனென்று நினைத்தால், நீ பெரிய மனிதனாகவே இரு, என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அப்புறம் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.
எனவேதான் இல்லறத்தார்களை, தலைவனை பூஜை செய்ய சொல்கிறோம். இவன் பூஜை செய்யும்போது இவனுக்கு கடன் சுமை, உடல் நோய், மனைவிக்கு நோய், பிள்ளைக்கு நோய் என்றெல்லாம் இருக்கும்.

"இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், நீ தலைவன் திருவடியை விடாமல் பற்று , ஞானிகள் நாமத்தைச் சொல்லி ஆசி பெற்றுக்கொள், பெரியவர்கள் உன்னை கைவிட மாட்டார்கள்” என்று நாம் சொல்லுவோம்.

"அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேன் மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும், உன் நாமத்தைச் சொல்ல வாய்ப்பு தர வேண்டும், உன் திருவடியைப் பற்றுவதற்கு வாய்ப்பு தரவேண்டும்” இப்படித்தான் தலைவனிடம் தொண்டர்கள் கேட்க வேண்டும். மற்றவர்களை போல பொருளாதாரத்தைக் கேட்காதே என்று சொல்லித்தர வேண்டும். இதை மகான் மாணிக்கவாசகர்,

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு, அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உன்தன் விருப்பு அன்றே.
- திருவாசகம் - குழைத்த பத்து - கவி எண் 6.
என்பார்.

ஆக பெரியவர்களிடம் எதைக் கேட்டாலும் தருவார்கள். ஆனால் கேட்க வேண்டியதை மட்டும் கேட்க வேண்டும்.
இப்ப ஆசானிடம், "எனக்கு ஞானம் சித்திக்க வேண்டும்" என்று கேட்டால், அவன் உன்னை வறுமையில் விட்டு விடுவானா? ஞானிகள் எல்லாவற்றையும் செய்வார்கள்.

ஆக இல்லறத்தையும் நடத்தலாம், உடல் ஆரோக்கியமாக இருக்கும், ஞானம் சித்திக்கும், அதோடு மட்டுமல்லாமல் ஞானிகள் பேராசை, வஞ்சனை, பொறாமை போன்ற கொடுமையான குணக்கேடுகளை உடைத்து தூளாக்கி விடுவார்கள்.

அருட்பெருஞ்சோதியை சிறந்த பண்பாளர்களால்தான் காணமுடியும். அந்த ஜோதி நம்முள் இருந்தாலும், ஆசான் தான் நமக்கு அதை சொல்ல வேண்டும். அதற்கு ஆசான் மனம் இரங்கி அருள் செய்ய வேண்டும். இதை மகான் திருமூலர் சொல்வார்

உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார் இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.
- திருமூலர் - அன்பு செய்வாரை அறிவன் சிவன் - கவி எண் 284.

சித்தர்கள் என்றால் முயற்சிப்பவன் என்று அர்த்தம்.
ஆக நாம் காணுகின்ற ஜோதியெல்லாம் தலைவனால் கொடுக்கப்பட்டது என்றும், நம்மிடம் உள்ள தயைகுணம், அர்ப்பணித்தல், பிறருக்கு பசியாற்றுவித்தல் போன்ற உயர்ந்த இலட்சியங்களை எல்லாம் நமக்கு தலைவன் கொடுக்க வேண்டும்.
ஒருவனிடம் உள்ள குணக்கேடுகள் தீரவேண்டுமென்றால், குறைந்தது பத்து வருடமாவது பூஜை செய்ய வேண்டும்.

குணக்கேடுகள் நீங்குவதற்கு பத்து வருடமாகும் என்றால், ஜோதியை காண்பதற்கு மறுபடியும் பத்து வருடமாவது ஆகும். இந்த துறை இப்படித்தான் இருக்கிறது. அவரவர்கள் பிடித்து கரையேறிக் கொள்ள வேண்டும். வேறுவழி இல்லை. பெரியவர்கள் ஆசியிருந்தால்தான் எல்லாமே நடக்கும். அவரவர்கள் இரகசியமாக பூஜை செய்ய வேண்டும்.

நாங்கள் காலையிலும், மாலையிலும் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் பூஜை செய்தோம், நாமத்தை சொன்னோம். மனம் செம்மைப்பட்டதா அல்லது தடுமாற்றம் அடைந்ததா என்பதைப் பற்றி நாங்கள் ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்வோம்.

நடு ஜாமத்தில் ஒரு மணிக்கு எழுந்து பத்து நிமிடம் நாமத்தை சொல்கிறோம்.
ஆக தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும். எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொண்டுதான் பூஜை செய்ய வேண்டுமென நினைத்தால், இன்னும் நூறு ஜென்மம் எடுத்தாலும் கடைத்தேற முடியாது. இதுதான் எங்கள் அனுபவம்.


ஆக இந்த காலக்கட்டத்தில் உலக நலனுக்காகவும் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே என்னை ஞானிகள் அனுப்பியிருக்கிறார்கள்.

அதை நாம் செம்மையாக செய்து கொண்டிருக்கிறோம். நீங்களும் தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களையும் ஞானிகள் பார்க்கிறார்கள். ஓங்காரக்குடில் மிகப்பெரிய இடம் இந்த இடத்தை நீங்கள் சின்ன இடம் என்று நினைக்கக் கூடாது.

இந்த இடம் மிகப்பெரிய இடம். இந்த இடம் மிகப்பெரிய இடம். நான் தற்பெருமைக்காக பேசவில்லை. ஆனால் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் பார்ப்பதற்கு ரொம்ப எளிமையாக, உலகத்தவர் போல் இருப்போம். நாங்க தொட்டதெல்லாம் வெற்றி பெறும். எந்த காரியமும் தடைபடாது. எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி. சக்கரவர்த்திக்கே எடுத்த காரியம் தடைபடும். ஆனால் நாங்கள் நினைத்த எந்த காரியத்தையும் தடையில்லாமல் முடிப்பதால்தான், இது ரொம்ப உயர்ந்த இடமென்று சொல்கிறோம். யாராலும் நினைத்ததை முடிக்க முடியாது. நாம் முடிக்கலாம்.
வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு ஆயிரத்தெட்டு திருமணங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டுமென்று ஆசானிடம் கேட்டோம், நடக்கும் என்றார்.
அதில் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாதென்றோம், இருக்காது என்றார். நீங்கள் தான் பொருளுதவி செய்ய வேண்டுமென்றோம், செய்கிறோம் என்றார்.
ஆக தொண்டர்கள் நிலை உயர்வதற்கு எங்கள் அனுபவத்தை சொல்லியிருக்கிறோம்.
தினமும் தியானம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு தியானம் செய்கின்றோம் என்பது முக்கியமல்ல, எந்த குறிக்கோளுக்காக தியானம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
ஆக இனி பிறக்கக் கூடாது என்ற ஒரே இலட்சியத்திற்காக தியானம் செய்ய வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர்,

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்.
- திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 362.

ஒருவன் விரும்பினால் இனி பிறக்காமல் இருப்பதை விரும்ப வேண்டும். இதைத்தான் கேட்க வேண்டும் என்று நாங்கள் சொல்லித்தர வேண்டும்.

நாம் இப்படி சொல்லிக் கொடுத்தால்தான் மனிதன் கேட்பான். இல்லையென்றால் தலைவனிடம் தேவை இல்லாதவற்றை கேட்டுக் கொண்டிருப்பான். இல்லையென்றால் ஞானியரிடம் என்ன கேட்க வேண்டும்? என்று இவனுக்கு தெரியாது.

ஆக அடிப்படையில் ஒருவனுக்கு சொற்குரு ஆசியிருக்க வேண்டும். அதனால் தான் ஓங்காரக்குடிலை மிகப்பெரிய இடமென்று சொன்னோம். எங்களிடம் நெருங்கி "ஐயா நான் இந்தத் துறையில் முன்னேற விரும்புகிறேன். நீங்கள் தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டால் பாதையை வகுத்து தருவோம். எங்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

எனவே, அருட்பெருஞ்சோதியை காண்பதற்கு அலுப்பில்லாமல், சலிப்பில்லாமல், பழிப்பில்லாமல் விடாது முயற்சிக்க வேண்டும். நாங்கள் சொல்லுவதை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து செயல்படுத்தி கொண்டால் நல்லதுதான். விடாது முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சிப்பதன் தன்மையைப் பற்றி சொல்லும்போது கரையான் உலகை வலம் வந்தது போல் என்பார்.

கரையான் உலகை வலம் வருவதற்கு எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டமாக இருக்கும் இந்த துறை. அதற்காக நாம் பாடுபடாமல் இருக்க முடியுமா? பாடுபட்டுக் கொண்டே இருப்போம். எது ஆசானுக்கு தெரிகிறதோ அது நடக்கட்டும். அதே சமயத்தில் "எறும்பு ஊர கல் குழிந்தாற் போல” என்பார். இது அவ்வளவு பெரிய துறை. அவ்வளவு கஷ்டந்தான்.

இவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அவர்களெல்லாம் ஞானியாகாமல் இருந்தார்களா என்ன? கஷ்டப்பட்டு ஞானியானார்கள்.

நான் இன்றைக்கு பேசிய கருத்துக்களை ஒரு வரப்பிரசாதமாக நினைக்க வேண்டும். மற்றவர் குறையைப்பற்றி சிந்திக்க இங்கே நேரமில்லை. எவனோ எப்படியோ போகிறான். அவன் எப்படிப்போனா உனக்கென்ன நட்டம். நீ ஒன்னும் கடவுளில்லை. உன் வேலையைப் பாரென்று நமது மனது நமக்கு சொல்ல வேண்டும்.
ஆக எவனோ எப்படியோ போகிறான். நாம் என்ன கடவுளா? உன் வேலையைப் பாரென்று சொல்லும் அளவிற்கு நாம் வரவேண்டும்.

ஆக பெரியவங்க ஆசியிருந்தால்தான், தன்னையே கட்டுப்படுத்திக் கொள்கின்ற குணம் வரும். தன்னை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு பெரியவங்க ஆசி வேண்டும். இல்லையென்றால் இவன் படுத்து உறங்கும் வரையில் இவனை பாடாய்படுத்தும்.

நாங்கள் சொல்லிய கருத்துக்களில் எங்கள் அனுபவத்தை சொல்லியிருக்கிறோம். நாங்கள் ஒரு எல்லைக்கு வந்திருக்கிறோம். தொல்லையைக் கடந்து எல்லைக்கு வந்ததினால் இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்களுக்கும், ஆன்மீகத்தை விரும்புகின்ற மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்குமென்று நம்புகிறேன்.

நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நாம் நிலை உயரவேண்டும். மனம் அமைதி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு ஆசிபெற வேண்டும் என்றால், ஓம் அகத்தீசாய நம , ஓம் அகத்தீசாய நம , ஓம் அகத்தீசாய நம என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி முடிக்கிறேன்.

நன்றி வணக்கம்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 


No comments:

Post a Comment