Saturday, May 16, 2020

ஞானத்திருவடி GNANATHIRUVADI Feb 2012 Part1

அகத்தியர் துணை
                    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஞானத்திருவடி

ஓங்காரக்குடில் ஆசான் அருளிய சன்மார்க்க உண்மைப் பத்திரிக்கை
கர மாசி (பிப்ரவரி - 2012) விலை: ரூ.10/-
நிறுவனர்,
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜதேசிக சுவாமிகள்

உள்ளடக்கம்

1. சித்தர்கள் போற்றித் தொகுப்பு ......................................... 3

2. சும்மா இரு என்னும் இரகசியம்
- குருநாதர் அருளுரை ......................................... 11

3. ஆத்திச்சூடி - குருநாதர் அருளுரை தொடர் ......................... 40

4. “ஓம் அகத்தீசாய நம” ..................................................... 50


ஓங்காரக்குடில் ஆசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளிடம்
ஆசிபெறும் நேரம்
தினசரி காலை 9.30 முதல் 11 மணி வரை மட்டுமே

கலசமுனி உன்னத ஞான நூலாம்
 கொண்டவர் வினை வென்று
ஞாலமதில் பெரும்பேறு எட்டிடும்
ஞானத்திருவடி நன்னூல் இதுவென்று

என்றுமே ஆசி வழி விளக்கம்
எடுத்துரைப்பேன் தொடர்ந்து உலகோர்க்கு
நன்றுபெற பிரம்மம் வருவதுபோல்
நம்பிக்கைகொள் நூலை தொடுமுன்

முன்பாக மும்மூர்த்தியுமாக
மூலவராக எந்தன் அவதார
துன்பமகற்றும் தவ ராசரை
துவக்கிவிடு எண்ணி மனதுள் செபம்
மகான் அகத்தியர் ஆசிநூல்.
அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்,

ஞானத்திருவடி நூலே ஞானிகள் திருவடியாகும்.

ஞானத்திருவடி என்னும் நூல் முற்றுப்பெற்ற மகான்களைப் பற்றி பேசுவதாகும்இந்நூலை வாங்குதல்படித்தல்மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்தல் ஆகிய அனைத்துமே ஜென்மத்தை கடைத்தேற்ற உதவும்எனவே இந்நூல் ஞானவாழ்வு விரும்புகிறவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்இந்நூல் வீட்டில் இருந்தால் நவகோடி சித்தர்களும்சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தீசரும்அவருக்கு ஆசானாகிய சுப்ரமணியரும் நமது வீட்டில் இருந்து அருள்செய்வதாக எண்ணவேண்டும்.

மேலும் ஓங்காரக்குடில் ஆசான் 35 ஆண்டுகாலம் ஓங்காரக்குடிலில் கடுந்தவம் இருந்து வருகிறார்கள்உலக மக்களை கடவுளின் பிள்ளைகளாக பார்த்துஅவர்களுக்கு வரும் துன்பங்களிலிருந்தும்துயரங்களிலிருந்தும் விடுவித்து ஞானியர்களின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஓங்காரக்குடில் ஆசான் சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்ஞானிகளின் பாடல்களில் தான் உணர்ந்த பல இரகசியங்களை நம்பால் கருணைக்கொண்டு எளிய முறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல்.

இந்த ஞானத்திருவடி நூலின் விற்பனை வருவாய்
அன்னதானப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அன்புடன் - இரா.மாதவன்.

துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம் : திருவடிப்பேறு : 1598

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல்,
சிவராஜயோகிபரமானந்த சதாசிவ சற்குரு
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
தொகுத்து வழங்கிய

சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஓம்
அகத்தியர்
திருவடிகள் போற்றி
ஓம்
அகப்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அசுவினித்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
அத்திரி மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
அநுமான்
திருவடிகள் போற்றி
ஓம்
அம்பிகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருணகிரிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
அருள்நந்திசிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
அல்லமாபிரபு
திருவடிகள் போற்றி
ஓம்
அழுகண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
10
ஓம்
இடைக்காடர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமலிங்கசுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
இராமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
உமாபதி சிவாச்சாரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
ஒளவையார்
திருவடிகள் போற்றி
ஓம்
கஞ்சமலைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடைப்பிள்ளைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கடுவெளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கண்ணானந்தர்
திருவடிகள் போற்றி
20
ஓம்
கண்ணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கணநாதர்    
திருவடிகள் போற்றி
ஓம்
கணபதிதாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
கதம்பமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
கபிலர்
திருவடிகள் போற்றி
ஓம்
கமலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கருவூர்தேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கல்லுளிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கலைக்கோட்டு முனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
கவுபாலச்சித்தர்
திருவடிகள் போற்றி
30
ஓம்
கனராமர்
திருவடிகள் போற்றி
ஓம்
காகபுஜண்டர்
திருவடிகள் போற்றி
ஓம்
காசிபர்
திருவடிகள் போற்றி
ஓம்
காலாங்கிநாதர்
திருவடிகள் போற்றி
ஓம்
குகைநமச்சிவாயர்
திருவடிகள் போற்றி
ஓம்
குதம்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
குமரகுருபரர்
திருவடிகள் போற்றி
ஓம்
குருதட்சணாமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
குருராஜர்
திருவடிகள் போற்றி
ஓம்
குறும்பைச்சித்தர்
திருவடிகள் போற்றி
40
ஓம்
கூர்மானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
கொங்கணேஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
கோரக்கர்   
திருவடிகள் போற்றி
ஓம்
கௌசிகர்
திருவடிகள் போற்றி
ஓம்
கௌதமர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கமுனிச் சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கர மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
சங்கிலிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சச்சிதானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சட்டநாதர்
திருவடிகள் போற்றி
50
ஓம்
சண்டிகேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
சத்யானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவயோகமாமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவவாக்கியர்
திருவடிகள் போற்றி
ஓம்
சிவானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுகப்பிரம்மர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
சுந்தரமூர்த்தி
திருவடிகள் போற்றி
ஓம்
சூதமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சூரியானந்தர்
திருவடிகள் போற்றி
60
ஓம்
சூலமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சேதுமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
சொரூபானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜம்பு மகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜமதக்னி
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனகர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனந்தனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனாதனர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜனக்குமாரர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஜெகநாதர்
திருவடிகள் போற்றி
70
ஓம்
ஜெயமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
ஞானச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
டமாரானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
தன்வந்திரி
திருவடிகள் போற்றி
ஓம்
தாயுமான சுவாமிகள்
திருவடிகள் போற்றி
ஓம்
தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திரிகோணச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருமாளிகைத் தேவர்
திருவடிகள் போற்றி
80
ஓம்
திருமூலதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
திருவள்ளுவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தூர்வாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
தேரையர்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தனார்
திருவடிகள் போற்றி
ஓம்
நந்தீஸ்வரர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
நாரதர்
திருவடிகள் போற்றி
ஓம்
நொண்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பட்டினத்தார்
திருவடிகள் போற்றி
90
ஓம்
பத்ரகிரியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பதஞ்சலியார்
திருவடிகள் போற்றி
ஓம்
பரத்துவாசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பரமானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பராசரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பாம்பாட்டிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிங்களமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிடிநாகீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
பிருகுமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
பிரும்மமுனிவர்
திருவடிகள் போற்றி
100
ஓம்
பீர்முகமது
திருவடிகள் போற்றி
ஓம்
புண்ணாக்கீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலத்தீசர்
திருவடிகள் போற்றி
ஓம்
புலிப்பாணிச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
பூனைக்கண்ணார்
திருவடிகள் போற்றி
ஓம்
போகமகாரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
மச்சமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மஸ்தான்
திருவடிகள் போற்றி
ஓம்
மயூரேசர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாணிக்கவாசகர்
திருவடிகள் போற்றி
110
ஓம்
மார்க்கண்டேயர்
திருவடிகள் போற்றி
ஓம்
மாலாங்கன்
திருவடிகள் போற்றி
ஓம்
மிருகண்டரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
முத்தானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
மெய்கண்டதேவர்
திருவடிகள் போற்றி
ஓம்
மௌனச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யாகோபு
திருவடிகள் போற்றி
ஓம்
யூகிமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
யோகானந்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
ரோமரிஷி
திருவடிகள் போற்றி
121
ஓம்
வசிஷ்டமகரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரதரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வரரிஷி
திருவடிகள் போற்றி
ஓம்
வராகிமிகி
திருவடிகள் போற்றி
ஓம்
வால்மீகி
திருவடிகள் போற்றி
ஓம்
விசுவாமித்திரர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாக்ரமர்
திருவடிகள் போற்றி
ஓம்
வியாசமுனிவர்
திருவடிகள் போற்றி
ஓம்
விளையாட்டுச்சித்தர்
திருவடிகள் போற்றி
ஓம்
வேதாந்தச்சித்தர்
திருவடிகள் போற்றி
131
ஓம்
எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றி போற்றி



நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
திருமந்திரம் 3047

                மேற்கண்ட 131 சித்தர்கள்மகான்களின் திருவடிகளை தினசரி காலையும் மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமைபுத்திர பாக்கியம்உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிமது அருந்துதல்புலால் உண்ணுதல்சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்மேலும்மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.

ஓங்காரக்குடில் ஆசான் ஆசி!
ஓங்காரக்குடிலில் நடைபெறும் அன்னதானம் மற்றும் அறப்பணிகளுக்காகதமிழகமெங்கும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக திருவாளர்கள் K.S.கைலாசம்பத்மநாபன்சுபாஸ்ராமமூர்த்திரெங்கநாதன்திருமுகம் மற்றும் திருவண்ணாமலைபாண்டிச்சேரிகோவைபொள்ளாச்சிசெங்கல்பட்டு,வேதாரண்யம்விருதுநகர்மண்ணச்சநல்லூர்திருச்சி அன்பர்கள் நமதுஞானத்திருவடி மாத இதழை தினசரி பொதுமக்களுக்கு வினியோகம்செய்கிறார்கள்.

ஞானத்திருவடி நூலை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அன்பர்களுக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல ஞானிகள் அருள் கிட்டி எல்லா நன்மைகளும் அடைவார்கள்மேலும் உடல் ஆரோக்கியமும்நீடிய ஆயுளும்எல்லா நலமும் வளமும் பெறுவார்கள்மேலும் ஞானமும் சித்திக்கும் என்று ஓங்காரக்குடில் ஆசான் ஆசி வழங்கியுள்ளார்கள்.

திருச்சி மாவட்டம்,
துறையூர் ஓங்காரக்குடிலாசான்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு,
தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள்
23.04.1997 அன்று ஆன்மீக அன்பர்கள் முன்னிலையில்
வழங்கிய அருளுரை

“சும்மா இரு என்னும் இரகசியம்!”

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நாம் தொடர்ந்து தினமும் பேசுகிறோம். ஒரே மையக்கருத்துதான். இருந்தாலும் `அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.

இங்கே இது பரிபாஷை. அதுபோல் தொடர்ந்து முயற்சிக்கணும். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பூஜை செய்யும் முறையை ஆரம்ப காலத்தில் சொன்னோம்.

ஒரு திருவிளக்கு ஏற்ற வேண்டும் அதன் முன் அமர்ந்து ஒரு சிறிய தட்டு, அதில் மூன்று முறை ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் செய்வதாக சொல்லி கையில் தண்ணீரை எடுத்து வலது கையில் தட்டில் ஊற்றி மானசீகமாக தட்டில் ஆசான் திருவடி இருப்பதாகவும், அவர் பாதத்தில் ஊற்றுவதாகவும் எண்ணி அர்ப்பணம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்து முடித்தவுடன் அந்த நீரை குடித்துவிட வேண்டும்.

   ஆரம்பத்தில் நானும் ஒரு திருவிளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து இப்படியெல்லாம் செய்தேன். பிறகு ஆசானே சொன்னார். இப்படி பூஜை செய்யும் வாய்ப்பு இருந்தால் செய்யலாம். இல்லையென்றால் எப்படியாவது எந்த நேரமாவது ஆசான் நாமத்தை சொல்லலாம். ஆக அதையும் விட்டு விட்டோம்.

   திருவிளக்கு ஏற்றி அதன்முன் அமர்ந்து, மூன்று முறை நாமத்தை சொல்லி, ஒரு சிறிய தட்டில் தண்ணீர் மூன்று முறை விட்டு, என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உனக்கே அர்ப்பணம் என்று சொல்லி, பூஜை செய்தோம். இந்த முறைகளை ஆரம்பத்தில் நான் கடைப்பிடித்தாலும், பிறகு என்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. சிறிய வீட்டில் வசிப்பவர்களுக்கு அங்கே குத்துவிளக்கில் தீபத்தை ஏற்றி, சூட தீபம் ஏற்றி, ஊதுபத்தி வைத்து, இதுமாதிரி தட்டு வைத்து செய்வதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாது போனது. அது வேண்டாமையா!

   அப்ப ஒரு சிலருக்குத்தான் வாய்ப்பிருக்கும். மலேசியாவில் உள்ள ஆண்களும் பெண்களும் இருவரும் பாடுபடுகிறார்கள்; வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை என்ற ஓர் ஏக்கம் இருந்தது. வேண்டாம்! எந்த நேரமாக இருந்தாலும் சரி, அந்த நேரத்திலேயே அப்படியே நாமத்தைச் சொல்லலாம்.

   பஸ்ஸில் போகும்போது சொல்லலாம். பத்து இருபது பேர் வேனில் போகும்போது, உட்கார்ந்து நாமத்தை ஒரு ஐந்து நிமிடம் சொல்லிவிட்டு ஆரம்பிக்கலாம். ஓம் அகத்தீசாய நம! ஓம் அகத்தீசாய நம என்று சொல்லி, ஒரு கிலோ மீட்டர் போகும்வரை நாமத்தை சொல்லலாம். அதுவும் பூஜை என்று ஆசான் ஏற்றுக் கொள்கிறார்.

   நாமத்தை சொன்னால் போதுமென்றோம். ஆக, நாமத்தை சொல்கிறோம், ஆசி பெறுகிறோம்.

   நம் செயல்பாடுகள் ரொம்ப தூய்மையாக இருக்கிறது. ஆசான் நாமத்தையும் சொல்கிறோம். நமது செயலும் நாட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

   நாமஜெபத்தை, இரவு நேரத்தில் கூட சொல்லலாம், குளித்துவிட்டுதான் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. உடம்பின் வெப்பத்தை தணிப்பதற்காகத்தான் குளிக்கிறோம். அப்ப குளித்துவிட்டு பூஜை செய்தால்தான் ஆசான் ஏற்றுக் கொள்வாரா என்றால் இல்லை. நாம் நாமஜெபம் சொல்லும்போது உடம்பில்கூட அழுக்கிருக்கும். இதை மகான் சிவவாக்கியர் சொல்வார்

அழுக்கறத்தி னங்குளித் தழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த தவ்விட மழுக்கிலாத தெவ்விடம்
அழுக்கிருந்த தவ்விடத் தழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோ டணுகிவாழ லாகுமே.
- மகான் சிவவாக்கியர் பாடல் - கவி எண் 215

   அழுக்கிருந்த அவ்விடத் அழுக்கறுக்க வல்லிரேல் - இதயத்தில் அழுக்கு இருக்கக் கூடாது. ஆக, இதயத்தில் இருக்கும் அழுக்கு நீங்கனும். அதைத்தான் அறுக்கணும் என்பார். நம் உடலில் இருக்கும் அழுக்கு தீரணும்.

   நாம் சேர்ந்த சேர்க்கையே அழுக்காகத்தான் இருக்கிறது. ஆக, எப்போதும்,எங்கேயும் நாமத்தைச் சொல்லலாம்.

   தலைவனை நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் என்பார். இப்படி சொல்வதற்கு, குளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே.
- கந்தரலங்காரம் - கவி எண் 26.

   நீலச்சிகண்டி என்பது ஆசான் சுப்பிரமணியரின் மயில் வாகனம். மயில் என்பது மூச்சுக்காற்றுக்கு மற்றொரு பெயர். மயில் ஐவண்ணத்தைத் தரும். இந்த மூச்சுக்காற்று வசப்பட்டவர்களுக்கு பஞ்சவர்ணங்கள் தெரியும். அந்த பஞ்சவர்ணத்திற்கு மயில் என்று பெயர்.

நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும், கோலக்குறத்தியுடன் வருவான் - இது முக்கியமான வார்த்தை. மயிலை வாகனமாகக் கொண்ட ஆதித்தலைவன் ஞானப்பண்டிதன். நாம் நினைக்கும்போது, இந்த நேரம், அந்த நேரம் என்றில்லை, காலைப்பொழுது, மாலைப்பொழுது என்றில்லை, எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான். கோலம் என்பது அழகு. அழகு குறத்தியோடு வருவான் என்பார் ஆசான் அருணகிரிநாதர். எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான்.

ஆசான் அருணகிரிநாதர், குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து என்பார். குருநாதன் சொன்ன சீலம் - சீலம் என்றால் சிறப்பு என்று அர்த்தம். என்னய்யா சொன்னீர்? என்று கேட்டான். ஒரே தன்மையானவர்களான ஆசான் சுப்ரமணியரையோ, அகத்தீசரையோ தினந்தினமும் ஆசானை பூஜை செய்தால், அவர் என்ன செய்வார்? இந்த நேரம் அந்த நேரம் என்று நினைக்காமல், நாம ஜெபம் செய்கிறானென்று கோலக்குறத்தியுடன் வருவார்.

.........................................................குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே.

குருநாதன் சொன்ன சீலத்தை மெல்லத் தெளிந்து - சீலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள பத்தாம் வாசலாகிய புருவமத்தியாகும்.

ஆக, நம்ம நோக்கம்... தினம் பூஜை செய்கிறோம், முடிந்ததை செய்கிறோம், நாமஜெபம் செய்கிறோம். அதே சமயத்தில் நாம் ஆசான் நாமத்தை சொல்கிறோம். அன்னதானத்திற்கு பொருளுதவியும் செய்கிறோம், மற்றவர்களிடமும் வாங்குகிறோம், கொடுக்கிறோம், அறப்பணி செய்துகொண்டே இருக்கிறோம். அதை ஆசான் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

குருநாதன் சொன்ன சீலம்-யார் தெரியுமா? முதுபெரும் தலைவன் ஞானபண்டிதன். அவர் சொல்கிறார், தொண்டர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வாசியை நிறுத்தி வை! என்றார். அந்த வாசியை நிறுத்தி வைத்தல் என்பது குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்து அறிவார் சிவயோகிகளே, காலத்தை வென்றிருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே என்றார்.

அப்ப என்ன சொல்கின்றார்நாம் பூஜை செய்கிறோம்பத்தாம் வாசல் நம்முள் இருக்குநாம் எங்கேயும் அலைய வேண்டியதில்லைபத்தாம் வாசல் என்று சொல்லப்பட்ட சுழிமுனைக்கதவுஅந்த இடத்தில் காற்று ஒடுங்க வேண்டும்அந்த இடத்தில் காற்று ஒடுங்கும் வரையில் ஆசானை நாம் விடக்கூடாது.

எந்த நேரமாக இருந்தாலும் சரிஆசான்எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான் என்றார்அப்ப ஆசானை நாம் அழைக்க அழைக்க அழைக்கநோக்கம் நல்ல நோக்கமாக இருக்க வேண்டும்என்னய்யா நோக்கம்என்று கேட்டான்குருநாதன்தான் சொல்ல வேண்டும்.

தலைவன்இனி உனக்கு மரணமில்லை என்றார்இது மிகப்பெரிய வார்த்தை. “இந்த வாசியை புருவமத்தியில் செலுத்திநிறுத்தி வை!” அதை சும்மா இரு” என்றார்அந்த சும்மா இரு என்று சொல்லப்பட்ட ரகசியம் குருநாதன் சொன்ன சீலமும் அதுதான்.

அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை அறிந்தவர்கள்அது ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரிஅவர்களுக்கு மரணமில்லைஅந்த “சும்மா இரு” என்ற ரகசியத்தை சொன்னதுதான் சீலம்.

அதனுடைய இயல்பு உடல் மாசை நீக்கும்புருவ மத்தியில் காற்றை செலுத்தி வைத்தால்பலகோடி ஜென்மங்களாக உடல் மாசு அல்லது அழுக்கு இருக்கிறதுஆண்பாலும்பெண்பாலும் சேர்கின்ற சேர்க்கையின் காரணமாக வந்த சுக்கில சுரோணிதம் இரண்டுமே அழுக்குதான்இது துர்நாற்றமுள்ள ஒரு கழிவுப்பொருள்.

அப்படி சேர்ந்ததனால் வந்தஇந்த உடம்பில் எப்போதும் கீழ்த்தரமான எண்ணம்தான் இருக்கும்அந்த கீழ்த்தரமான எண்ணம் மிக உயர்ந்த நிலையை அடையக்கூடிய மனிதனையும்கூட குப்பையில் தள்ளிவிடும்.

எல்லா சிறப்பும் இருக்கும்நல்ல அறிவாற்றல் இருக்கும்கடைசியில் அவன் அறிவுஆற்றல்திறமைகள் அத்தனையையும்குப்பையில் போட்டுவிடும்எதுதாய் தந்தையால் வந்த இந்த காம தேகம்.

இவனை அது சும்மா விடாதுநரகத்திற்கு இட்டுச் செல்லும்ஒரு பக்கம் நாமஜெபம் செய்கிறோம்ஒரு பக்கம் அன்னதானம் செய்கிறோம்ஒருபக்கம் என்னைக் காப்பாற்றுஎன்னைக் காப்பாற்றுஎன்னைக் கைவிடாதேஎன்னைக் காப்பாற்றுஎன்று கேட்கிறோம்ஆசான் மகிழும்படியாக கேட்கிறோம்சரி நமக்கு பக்குவம் வந்தபிற்பாடு என்ன செய்வான்ஆசான் வந்து இந்த ரகசியத்தை

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்அற என்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
கந்தரனுபூதி - கவி எண் 12.

ஆசான் அருணகிரிநாதர்செம்மான் மகளைத் திருடும் திருடன்பெம்மான் முருகன் பிறவான் இறவான்என்று ஆசான் ஞானபண்டிதனை அறிமுகப்படுத்துகிறார்.

ஆசான் அருணகிரிநாதர்சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருளொன்று அறிந்திலனேஎன்றார்அவருக்கு நிகரே இல்லைமுதுபெரும் தலைவன் அருணகிரிநாதர் இந்த இரு பாடலையும் சொல்கிறார்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்இது ஆசான் அருணகிரிநாதர் சொன்னதுஅருணகிரிநாதர் சொன்ன அந்த ஒரு பாடலைக் கேட்டால்அதனுடைய விளைவு எப்படி இருக்குமென்றால்அதற்கு நிகரே இல்லைமுதுபெரும் தலைவன் அருணகிரிநாதர் இந்த பாடலை சொல்கின்றார்அந்த பாடலும் சொன்னது ஆசான்இந்த பாடலும் சொன்னதும் ஆசான்இதைக் கேட்டு வைக்கிறோம்.

நம்மைப் பற்றியிருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமையைஆசான் சுப்ரமணியர், “மாறாத கசமல்லோ மனித வாழ்க்கை” என்றார்மாறாத கசம் அசுத்த கசம்இதை மகான் மஸ்தான்சாகிபு சொல்வார்,

நற்பூச்சந் தனவத்தர் பூசி - மிக
நன்றாக வைத்தாலும் நாற்றமே வீசி
எப்போதும் கொடுமைசெய் தோசி - என்றே
இவ்வுடல் வாழ்வுக ளியாவையும் வீசி
               - மகான் மஸ்தான் சாகிபு - ஆனந்தக்களிப்பு - கவி எண் 5.

அப்பேர்ப்பட்ட துர்நாற்றமுள்ள உடம்பு மிகக் கொடுமையே செய்யக் கூடியதுஎப்போதும் இந்த உடம்புநம்மை ஆட்டிப்படைக்கும்அப்படிப்பட்ட உடம்புக்குள்ளே அற்புதம் ஒன்று இருக்கிறதுஅந்த அற்புதத்தை அடைவதுதான் `சும்மா இரு’. வாசியை நிறுத்தி வைத்து சும்மா இருஇதை நாமே செய்யலாமா?
இல்லையில்லை இதை ஆசான் ஞானபண்டிதன்தான் செய்ய வேண்டும்.

அந்த ரகசியத்தை அடைய நாம் பாடுபடுகின்றோம்இதுநாள் வரை இந்த யோகக்கருத்தை சொல்லவில்லைஇதை கேட்கின்ற மக்கள் அத்தனைபேரும் ஞானியாவார்கள் என்பதற்காக சொல்கிறோம்.

காலத்தை வெல்லுகின்ற வல்லமை இதுதான்இதை ஆசான்தான் சொல்ல வேண்டும்இப்படி செய் என்று சொல்லி அவர் ஆசி வழங்கினால்அவன்தான் காலத்தை வென்று இருப்பான்இல்லையென்றால் யாராலும் முடியாது.

சும்மா இரு என்றால்எவ்வளவு அறிவாற்றல் இருக்க வேண்டும்ஒருவனுக்கு திறமை இருக்கும்சிறந்த பேச்சாற்றல் இருக்கும்தியாக சிந்தை இருக்கும்தன்னையே அர்ப்பணிப்பான்ஆனால் அவனால் காலத்தை வெல்ல முடியாது.

என்னய்யாஇவ்வளவு அறிவாற்றல் இருந்தும்இவ்வளவு பேச்சுத்திறன் இருந்தும் என்ன ஆச்சுஎன்றான்.

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன தலையுங் காலம்
மோசம் வரும்இதனாலே கற்றதுங்கேட் டதுந்தூர்ந்து முத்திக் கான
நேசமுநல் வாசமும்போய்ப்புலனாயிற் கொடுமைபற்றி நிற்ப ரந்தோ!
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமேநிராசையின்றேற் றெய்வ முண்டோ?
மகான் தாயுமானவர் பாடல் - ஆசையெனும் - கவி எண் 1

ஆக பெரும் காற்றோடு இலவம் பஞ்சு போல் நமது மனம் அலையும்என்னய்யா ஆச்சரியம்இவ்வளவு பூஜை செய்கிறோம்என்னென்னமோ செய்கிறோம்எந்தெந்த கோவிலுக்கோ போகிறோம்எங்கெங்கேயோ மூழ்குகிறோம்என்னென்னமோ செய்து பார்க்கிறோம்முடியவில்லை.

அதற்கு என்ன காரணம்நம்மை வஞ்சிப்பது மிகப்பெரிய இந்த காமதேகம்இதை ஏன் சொல்கிறேன் என்றால்உங்களை அச்சுறுத்துவதாகநினைக்க வேண்டாம்சிறந்த அறிவாற்றல் இருக்கும்ஆனால் அவனுடைய தேகம் என்ன செய்யும்மிகப்பெரிய அறிவுள்ளவனையும் தூக்கி குப்பையில் போட்டு விடுமேஇது சாதாரண விசயமல்ல!

நிராசை-ஆசை அற்ற தன்மைஇது என்ன சின்ன விசயமாஇதற்கு யார் ஆசி வேண்டும்ஆசையற்ற தேகத்தை எப்படி பெறுவதுமனைவியை விட்டு விடுவதாஅல்லது மனைவி கணவனை விட்டுவிடுவதாஇல்லை உலகத்தை விட்டு ஓடுவதாஎன்றான்முடியவே முடியாதுஎங்கே போனாலும் அது நம்மை பிச்சு தின்று கொண்டிருக்கும்இந்த காமதேகத்திற்குள்ளேயே ஒரு அற்புதம் இருக்கைய்யாஅதைத்தான் ஆசான் ஞானப்பண்டிதன் கண்டார்அதை `சும்மா இரு’ என்றார்.

அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை நாம் அறியும் வரையில் நாம் ஓயக்கூடாதுபூஜை செய்துகொண்டே இருக்கணும்மலேசிய மக்கள் ஆண்களும் பெண்களுமாக அன்னதானம் செய்ய வருகிறீர்கள்அன்னதானம் செய்ய இங்கே மக்கள் இருக்கிறார்கள்ஆயிரக்கணக்கான பேர் தொண்டு செய்யவும் பொருளுதவி செய்யவும் இருக்கிறார்கள்அதற்காகவா நீங்கள் வந்திருக்கிறீர்கள்அதற்கும் வந்திருக்கிறீர்கள்.

ஆனால் ஒரு லட்சியத்தை அடைய வந்திருக்கிறீர்கள்அந்த லட்சியம் என்னவென்று கேட்டான்முதுபெரும் தலைவன் அகத்தீசனையும்முதுபெரும் தலைவன் ஞானப்பண்டிதனையும் வணங்கிஇந்த வாய்ப்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்அருணகிரிநாதர் சொன்னாரல்லவா?

குரு நாதன்சொன்னசீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளேகாலத்தை வென்றிருப்பார் மரிப்பார்வெறுங் கர்மிகளே – ஆக காலத்தை வெல்லக் கூடிய மார்க்கத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்அந்த இடத்திற்கு வருவதற்குத்தான் இதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்இப்போது இது எவ்வளவு பெரிய ரகசியம்என்னால் இது முடியுமாஎன்று கேட்டான். `அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்’ என்றான்.

அம்மி அவ்வளவு பெரிதுஅடி மேல் அடி வைத்து என்பார்எந்த அடிஎன்றான்இடகலையும் பிங்கலையும் சேர்த்துஅவன் சொல்வான்மூச்சுக்காற்று இரண்டு பக்கமும் ஓடும்வலது பக்கம் வருகின்ற சுவாசத்தையும்இடது பக்கம் வருகின்ற சுவாசத்தையும் இரண்டையும் ஒன்று சேர்க்க வேண்டும்.

சேர்ப்பதுதான் இடை சமனாய் சேர்த்துக் கொண்டால்
சிவ சிவா சொல்லரிது செயலைத்தானே” என்பார் திருமூலர்
எனவே அடி மேல் அடி என்றால் இடகலையும் பிங்கலையும் சேர்க்கிறோம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே
-திருமந்திரம் - பிராணாயாமம் -கவி எண் - 571.

வந்துவிட்டதுஇப்போது யோகக் கருத்தே வருகிறதுதொடர்ந்து அதைத்தான் பேசிக்கொண்டு வருகிறோம்கேட்டு வைக்கலாமைய்யாஎன்ன நட்டம்இப்படித்தானே முன்னேற வேண்டும்வருங்காலம் ஞான சித்தர் காலம் அல்லவா? `பல மாந்தர் ஞானியாவார்’ என்று ஆசான் சொன்னார். `பல மனுக்கள் ஞானியாவார்’ என்று இருக்கிறதுகேட்டு வைப்போம்நாட்டு மக்கள் ஆற்றல் பெற வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்அப்ப என்ன செய்கிறான்இந்த இடகலையும் பிங்கலையும் சேர்த்துஇந்த காற்றை முறைப்படுத்தி கட்டத் தெரிந்தவன்நிச்சயமாக சாக மாட்டான்.

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குகூற்றை உதைக்கும் குறியதுவாமே - எமனை வெல்லுகின்ற வல்லமை என்று சொன்னான்ஆசான் ஆசியினால்தான் தன்னை அறியக்கூடிய வல்லமை கிட்டும்இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ளணும், “இந்த சும்மா இருக்கிற ரகசியத்தை”.

அப்ப சும்மா இருக்கக் கூடிய வாசியை நிறுத்தி வைத்தால்அதனுடைய விளைவுகள் என்ன ஆகும்நம்மைத் தொடர்ந்து பீடித்து வருகின்ற கொடிய காம நோய் அடிபட்டுப் போகும்.

காம நோய் அடிபடாமல் மனம் செம்மைப்படாதுகடைசி நேரத்திலும் அவனை வஞ்சித்துவிடும்பெரும் புகழுக்குரிய வாழ்வையெல்லாம் பாழ்படுத்திவிடும்இதைத்தான் மண்ணாசைபெண்ணாசைபொன்னாசை என்றான்காம தேகம் உள்ளவன்நிச்சயமாக தவறு செய்வான்ஒன்றும் செய்ய முடியாதுநிச்சயம் அது அவன் புகழை அது கெடுத்துவிடும்மிக்க காமதேகம் உள்ளவர்கள் எத்தனை ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சரிஅவர்கள் ஒரு துறையில் கண்டிப்பாக முன்னேற முடியாதுஅப்படி முன்னேற முயற்சிக்கும்போது அந்த காமதேகம் அவர்கள் காலைப்பிடித்து இழுக்கும்அப்படி காலைப்பிடித்து இழுக்கும்போது நிச்சயமாக அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடைய முடியாதுஆகஅதை வெல்லுவதற்குதான் ஆசான் சொன்னதைநீங்கள் அறியணும்

கிட்டுமோ ஞானயோகம் கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாக லிங்கம் ஏற்றுமோ தீப சோதி
தட்டுமோ பளிங்குமேடை தனையறி யார்க்கு நெஞ்சே.
-மகான் கணபதிதாசர் அருளிய நெஞ்சறி விளக்கம் - கவி எண். 21

ஆகதன்னை அறியக்கூடிய வாய்ப்பு வாசி வசப்பட்டால்தான் கிடைக்கும்இல்லையென்றால் முடியாது. “கட்டுமோ மூலவாசி காணுமோ கயிலை வீடு, “எட்டுமோ தீப லிங்கம்” என்றார்.


ஆக இந்த பாடலெல்லாம் மிகப் பெரிய பாடல்கள்சாதாரண பாடல்கள் அல்லஇதெல்லாம் கேட்டு வைத்தால் பயன்படும்ஆக மனித வர்க்கத்தை ஆட்டிப் படைப்பது மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்வதற்குகாரணமாய் இருப்பதே ஆசைதான் என்று ஞானிகள் சொல்வார்கள்நாம் ஆசைப்படாமல் இருக்கலாம்ஆனால் ஆசை நம்மை விட்டுவிடுமாபோட்டு கலக்கி எடுத்துவிடும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார்மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
திருக்குறள் - அவா அறுத்தல் - குறள் எண் 365

அற்றவர் என்பார் அவா அற்றார்என்றார் திருவள்ளுவர்ஆசை அற்றுப் போக வேண்டும்காமதேகத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாதுஉடம்பிலிருந்து காமதேகம் நீங்க வேண்டும்அதற்கு நாம் பாடுபட வேண்டும்அதை “அற்றவர் என்பார் அவா அற்றார்” என்றார்.

ஒளவையார் சொல்லும்போது கூட, “அற்றது பற்றெனின் உற்றது வீடு” என்றார்காமதேகம் நீங்க வேண்டும்நமது நோக்கமும்லட்சியமும் அதில் இருக்க வேண்டும்நாம் ஆண்களுக்கும்பெண்களுக்கும் சொல்வதன் நோக்கம் என்னஇருபது வயதுஇருபத்தைந்து வயதுமுப்பது வயதுள்ள பெண்கள் வந்திருப்பார்கள்இன்னும் இவர்கள் பத்து வருடம் தினமும் ஒரே லட்சியமாக ஆசானிடம் கேட்க வேண்டும்என்ன கேட்க வேண்டும்ஐயாஇதிலிருந்து நான் விடுபட வேண்டுமய்யாஎன்னால் முடியவில்லைஇதிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன்நீங்கள்தான் அருள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருஅட என்றாவது கொடுக்கட்டுமே

ஐயாஇன்றில்லாவிடில் என்றாவது கொடுக்கட்டுமேநாம் கேட்டு வைப்போமே!. இதை வள்ளுவபெருமான்,

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
திருக்குறள் - ஊக்கம் உடைமை - குறள் எண் 596.

என்று சொல்வார்கேட்டுப்பார்நினைப்பதையெல்லாம் உயர்வாக நினைத்துப்பார்அந்த எண்ணம் கைகூடாவிட்டாலும் நினைப்பதை மட்டும் விடாதேயாரொருவர்அது ஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரிஅவர்களுக்கு நோக்கம் ஒன்றே ஒன்றுதான், “இனி நான் பிறக்கக்கூடாதுநான் இனி பிறக்க விரும்பவில்லை.

அதற்கு உங்கள் ஆசி பெற விரும்புகிறேன்உங்களால்தான் முடியும்உங்கள் ஆசியைக்கொண்டு நான் பிறக்க விரும்பவில்லைமறுபடியும் நான் நரகத்திற்கு செல்ல விரும்பவில்லைஅதற்கு நீங்கள்தான் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்க வேண்டும்உங்களுக்கு தெளிந்த ஆசான் கிடைத்திருக்கிறேன்.

ஆசான்புருவமத்தியில் காற்றை செலுத்தி நிறுத்தி வைப்பதைசும்மா இருப்பது என்பார்இந்த ரகசியம் எங்களுக்கு தெரியும்இதை தாயுமான சுவாமிகள் சொல்வார்,

சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோபராபரமே!
மகான் தாயுமான சுவாமிகள் பாடல் - பராபரகண்ணி - கவி எண் 70.

இப்ப நாம்தாயுமான சுவாமிகள் பாடல்மகான் திருமூலர் அருளிய திருமந்திரம்மகான் அருணகிரிநாதர் அருளிய பாடல்களை சொல்லியிருக்கிறோம்ஏன் சொன்னோமென்றால்எத்தனையோ ஜென்மங்களில் அல்லற்பட்டு மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம்இப்படி எடுத்த பிறவிகளில்ஒரு பக்கம் கைகால்கள் வராமலும்வாய் ஊமையாகவும்செவிடாகவும்தொழுநோயாகவும்இதுபோல் கை கால் முடியாமல்இப்படி பல நோய்களில் அல்லற்பட்டு இறந்து பிறந்தது போதும்.

நாம் இப்போது நல்லபடியாக இருக்கிறோம்கருத்துக்களை கேட்கிறோம்இதற்கு முன் எடுத்த ஜென்மங்களில் கேட்கின்ற திறம் இருந்ததோமூளைக்கோளாறாக இருந்திருப்போமோவாய் பேசாது இருந்திருப்போமோசெவி கேளாது இருந்திருப்போமோகுருடாக இருந்திருப்போமோஅல்லற்பட்டிருப்போமோஅங்கஹீனமாக பிறந்திருப்போமோ?.

எத்தனை ஜென்மங்களில்தொழுநோய் வந்திருக்கும்கருவிலேயே இறந்திருக்கலாம்கரு கூடி இருபத்து நான்கு மணிநேரத்தில் இறந்திருக்கலாம்மூன்று மாதத்தில் இறந்திருக்கலாம்கருப்பையிலேயே ஆறு மாதத்தில் இறந்திருக்கலாம்!, நாம் பிறப்பதற்குள் தாய் இறந்திருக்கலாம் அல்லது பிறந்தவுடன் தாய் இறந்திருக்கலாம்பத்தாண்டுகள் வாழ்ந்தும் இறந்திருக்கலாம்வயோதிகத்திலும் இறந்திருக்கலாம்.

ஆகஇதே வேலையாக நாம் பிறந்து இறந்து பிறந்து இறந்திருக்கிறோம்எனவேஒன்றே ஒன்றுநான் பிறக்க விரும்பவில்லைநான் பிறக்க விரும்பவில்லைஅதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டுமென்று ஆசானை கேட்க வேண்டும்இதுபோல கேட்டுஎத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்.

ஆசான் தாயுமானசுவாமிகள்சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்றுஎம்மால் அறிதற்கு எளிதோ பராபரமேஎன்றார்அந்த சும்மா இருக்கக் கூடிய ரகசியத்தை ஞானிகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்அதை நானும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்ஏனென்றால் இதுவரை நான் பட்டது போதும்.

எத்தனையோ ஜென்மங்களில் இறந்து பிறந்து அல்லற்பட்டது போதும்இந்த ஜென்மத்தில் உன்னை நான் புரிந்துகொண்டேன்புரிந்து கொண்டு உன் திருவடியைப் பற்ற நான் விரும்புகிறேன்எத்தனையோ இடையூறுகள் என்னைத்தாக்கி என்னை பலகீனப்படுத்துகின்றதுஒரு பக்கம் முன் செய்த வினைகள் புலியாக இருந்து என்னை மிரட்டுகின்றதுபல்வேறு ஜென்மங்களில் செய்த பாவம் காமம் என்கிற கரடியாக இருந்து என்னை பிடித்து ஆட்டுகின்றதுநட்டுவாக்கிளிதேள்பாம்பாக இருந்து என்னை பதை பதைக்கச் செய்கிறதுநான் இதை விரும்பவில்லைநான் இனி பிறக்க விரும்பவில்லை!.

நான் அறிந்த அடைந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன்ஆசான் ஆசியால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதுபல ஜென்மங்களாக தாய்தந்தை காமத்தால் பிறந்துகாமத்தில் வாழ்ந்து காமத்தில் வீழ்ந்திருக்கிறேன்அறியாமையில் பிறந்துஅறியாமையில் வாழ்ந்து அறியாமையில் வீழ்ந்திருக்கிறேன்நரகத்தில் பிறந்துநரகத்தில் வாழ்ந்துநரகத்தில் வீழ்ந்திருக்கிறேன்.

இந்த ஜென்மம் கிடைத்திருக்கிறதுஆசான் அருணகிரிநாதரையும்திருமூலதேவரையும்மகான் பட்டினத்தாரையும் பூஜை செய்திருக்கிறேன்பல ஜென்மங்களில் பல ஞானிகளை பூஜை செய்ததால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதுஎன் அனுபவத்தை சொல்கிறேன்அந்த அனுபவத்தினுடைய சாரத்தை அறிந்தால்நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை புரிந்து கொள்வீர்கள்.

அப்படி புரிந்து கொண்டால்தன்னைப் பற்றி அறியக்கூடிய தகைமை உங்களுக்கு கிடைக்கும்எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சரிஎத்தனை துன்பங்கள் இருந்த போதிலும் சரிஒரு ஐந்து நிமிடமாவது நாம ஜெபம் செய்ய வேண்டும்அவ்வாறு நாமஜெபம் செய்வதற்கு திருவிளக்கு தேவையில்லைதட்டு தேவையில்லைதண்ணீர் தேவையில்லைஆசான் நாமத்தை மட்டும் சொல்ல வேண்டும்தொடர்ந்து திருமந்திரமோதிருஅருட்பாவோ படிக்க வேண்டும்நான்கு கவியாவது எடுத்து படித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதையே, “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்பார்இடகலையும் பின்கலையும் சேர்த்து வைத்தால் அம்மியாகிய எது நகரும்அடி மேல் அடி வைத்தால்அம்மி என்று சொல்லப்பட்ட நமது உடம்புநம்முடைய கனமான வினைகள்காமதேகம் தூள் பட்டு போகும்.


நான் அறிந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும்ஆன்மீகவாதிகள் இதைக் கேட்டுஅறியக்கூடிய அந்த ஆன்மலாபத்தை அறிந்து கொள்ள வேண்டும்பெறக்கூடிய பெரும் பேறாகிய பேராற்றலையும்மரணமிலாப் பெருவாழ்வையும் அடைய வேண்டும்அதற்கு நான் வகுத்துப் பேச வேண்டும்அதற்காகவே ஞானிகள் பாடல் உங்கள் காதில் விழ வேண்டும்இந்த பாடல்களை பாடியவர்கள் சாதாரணமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்அவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள்ஆசான் அருணகிரிநாதர்மகான் தாயுமானசுவாமிகள்ஆசான் திருமூலதேவர்ஆசான் கணபதிதாசர் போன்ற ஞானிகள் பாடிய பாடல்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன்இவர்கள் பாடல்களை நீங்கள் கேட்பதே நல்லதுதான்அதற்காகத்தான் அந்த பாடல்களை உங்களுக்கு சொன்னேன்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
திருக்குறள் - இனியவை கூறல் - குறள் எண் 96.

ஆசான் திருவள்ளுவர்அல்லவை தேய அறம் பெருகும் என்றார்அதென்னய்யாஅல்லவைபாவம் தேய்ந்து புண்ணியம் பெருகும் என்றார்இது மர்மமான வார்த்தையோகிகளுக்குத்தான் புரியும்பாவமாகிய புற உடம்பு தேய்ந்து அறமாகிய அக உடம்பு ஆக்கம் பெறும் என்றார்.

நான் இப்பொழுது உங்களுக்கு சொல்கிறேன்நான் இனி பிறக்க விரும்பவில்லைநான் இனி பிறக்க விரும்பவில்லைநான் இனி பிறக்க விரும்பவில்லைநான் இனி பிறக்க விரும்பவில்லைஅதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்.

எத்தனையோ பாவிகள் உன் ஆசி பெற்றிருக்கிறார்கள்இந்த வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள்நான் உன் ஆசியைப் பெற வேண்டும்நான் இனி பிறக்க விரும்பவில்லைஎன்று இதையே திரும்பதிரும்ப கேட்க வேண்டும்.

ஆசான் நாமத்தைச் சொல்ல வேண்டும்வாய்விட்டும் சொல்லலாம் அல்லது மனதிற்குள்ளும் சொல்லலாம்கை கூப்பியும் சொல்லலாம்வீழ்ந்து வணங்கியும் சொல்லலாம்எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்நோக்கம் ஒன்றேஇனி நான் பிறக்க விரும்பவில்லை.

நாம் சொல்கின்ற உண்மைகளை கேட்கிறார்கள்என்னதான் ஓதினாலும் அவர்கள் அதை கேட்டாலும் மனதில் பதியவில்லைஆணாக இருந்தாலும் சரிபெண்ணாக இருந்தாலும் சரிஒரு சிலருக்கு அறிவு வேலைசெய்யவில்லை.

நாம் சொல்வதை கேட்டால் அது பசு மரத்து ஆணி போல் பதியவேண்டும்பதியவில்லைஅதற்கு என்ன காரணம்சிறிது நேரம் கூட அந்த அறிவுரை மனதில் நிற்கவில்லைசிலருக்கு பசுமரத்து ஆணி போல் பதிகிறதுசிலருக்கு மனதில் பதியவில்லைஎன்ன செய்வதுஞானிகளுடைய ஆசியில்லாமல் முடியாது.

நான் நூல்களை படிக்கிறேன்கேட்கிறேன்உணருகிறேன்ஆனால் என் இதயத்தில் தங்கவில்லைஎன்ன கொடுமையோ தெரியவில்லைசிலர் ஞானிகள் படித்ததையும் படிக்கிறார்கள்கேட்கிறார்கள்மனதில் பதிகின்றதுஜென்மத்தைக் கடைத்தேற்றி வெற்றி பெறுகிறார்கள்நானோகேட்கிறேன்படிக்கிறேன்உணருகிறேன்என்னால் உன் திருவடியைப் பற்ற முடியவில்லைஅதற்காக வருந்துகிறேன்.

இது போன்ற பலகீனங்கள் உள்ளனஒன்றைக் கற்றுஅதைக் கேட்டால் அதை பின்பற்ற முடியாத பலகீனங்கள்தான் பாவத்தின் சின்னம்அந்த பாவத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்அல்லவை தேய - பாவம் நீங்க வேண்டும்புண்ணியம் பெருக வேண்டும்.

எப்போது புண்ணியம் பெருகும்புண்ணியவான்களாகிய ஞானிகளை வணங்கினால்தான் புண்ணியம் பெருகும்நாமெல்லாம் பாவிகள்தான்என்ன காரணம்ஒன்றைஒன்று சேர்க்க கற்றுக் கொள்ளாதவர்கள்.

நாமெல்லாம் இடகலையும்பின்கலையும் சேர்க்க கற்றுக் கொள்ளாத பாவிகள்தான்ஆசான் என்ன செய்வார்அவர் இடகலையும்பிங்கலையும் சேர்த்து வைப்பார்இடகலையையும் பிங்கலையையும் சேர்த்து வைத்தாலன்றி நம் பாவம் தீராதுசிந்தனையில் தெளிவு இருக்காதுசெயல்பாடுகளில் தெளிவு இருக்காதுபேராசைவஞ்சனைபொய்புரட்டு போன்ற எல்லா வகையான ஜாலங்களையும் மனம் செய்து கொண்டிருக்கும்அது நமக்கு துணையாகவே இருக்காதுஇப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும்அப்படி விடுபடா விட்டால் நீ என்ன செய்து என்ன பயன்ஆகமுடிவில் ஏமாற்றப்படுவாய்.

புண்ணியம் பெருகப் பெருகத்தான் அறிவு வேலை செய்யும்பாவம் தேய்ந்து புண்ணியம் பெருக வேண்டும்.

பாவம் என்கிற உடம்பு தேய்கிறதுஉடம்பு கெட்டுப் போகாதுஉள்ளம் தெளிவடையும்உள்ளம் தெளிவடைந்து ஒரு மனிதன் கடவுளை அடைய வேண்டுமென்று சொன்னால்அவனுடைய அறிவு சிறப்பறிவாக இருக்க வேண்டும்எதைப்பற்றியும் ஆழ்ந்து சிந்தித்துஅச்சம் இல்லாமல் வாழ வேண்டும்நாளை என்ன ஏற்படுமோஎது வருமோஎன்று நினைக்க அவசியமே இருக்காதுஅச்சமே இருக்காதுஇப்படிப்பட்ட வாழ்க்கைதான் அல்லலில்லாத வாழ்க்கை.

எப்போது பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகளில் அல்லற்பட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வதுஅங்கே பாவம் இருக்கிறதுபாவம் இருக்கும் இடத்தில்தான் தடுமாற்றங்கள்போட்டிபொறாமைபேராசைஅவன் நம்மை இடையூறு செய்வானோஇவன் நமக்கு இடையூறு செய்வானோபோன்றவை இருக்கும்.

தலைவன் ஆசியிருந்தால்இதுபோன்ற பிரச்சனைகளால் நமக்கு ஒன்றும் ஆகாது.

தலைவன் இல்லையாவேற்படை உள்ளவன்எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவார்எந்த தடுமாற்றங்களும் நமக்கு இருக்க முடியாதுஇருக்கக் கூடாதுஅச்சமே இருக்கக் கூடாதுஎன்ன காரணம் தலைவனின் ஆசி.

திருவருளை சிந்திக்க சிந்திக்க அச்சம் இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க நோய் இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க பகைமை இருக்காது.
திருவருளை சிந்திக்க சிந்திக்க தெளிவு இருக்கும்.
       
மற்றவர்கள் எல்லாம் `’ என்று அலைவார்கள்பல லட்சத்திற்கு அதிபதியாக இருப்பான்இரவு நேரத்தில் மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் வரும்நம் அன்பர்கள் நிம்மதியாக தூங்குவார்கள்என்ன காரணம்தன்னை தலைவனின் திருவடிகளுக்கு ஒப்பிக்கிறான்.

பலவற்றையும் சிந்தித்துப் பார்ப்பான்அது அவனுக்குத் தெரியாதுகடைசி வரையிலும் அவன் செத்தவன்தான்என்னய்யாநடமாடிக்கிட்டு இருக்கிறான்பெரிய கம்பெனி வைத்திருக்கிறான்அவனது பேங்க் கணக்கில் பல லட்சங்கள் புரண்டு கொண்டிருக்கிறதுஏனய்யா அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறான்அவன் செத்தவன்டாஅவன் இவ்வளவு வசதி வாய்ப்புள்ளவனாக இருந்தும்அல்லற்படுகின்றான்நாம் அல்லற்படுகின்றோமாநமக்கு அல்லலில்லைநிம்மதியாக இருக்கிறோம்என்ன காரணம்திருவருள் துணையிருக்கிறது!

நம்மை ஆசானிடம் ஒப்பிக்கிறோம்ஐயாஇது என் அறிவுக்கு எட்டவில்லைநீ பார்த்து செய் என்கிறோம்உடனே ஆசான் இறங்குகிறார்உலக மக்கள் யார் அழைத்தாலும்எந்த தேசத்தில் இருந்தாலும்எந்த மொழியில் பேசினாலும் நான் இரட்சித்து அருள் செய்கிறேனப்பா என்று ஆசான் சொல்வார். ­நீ எங்களிடம் சொல்ல வேண்டும்இதுதான் எங்களுக்கு வேலை என்பார் ஆசான்.

இதையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சொல்லணும்தலைவன் பெருமையை பேசணும்இதைக் கேட்டு மக்கள் அச்சமில்லாத வாழ்க்கையில் இருக்கணும்அச்சம்வறுமை இருக்காதுவறுமை இருந்தால்தானே அச்சம்நோய் இருக்காதுஇருந்தால்தானே அச்சம்பகை இருக்காதுஇருந்தால்தானே அச்சம்பகை இல்லைநோய் இல்லைவறுமை இல்லைமனது அமைதியா இருக்கைய்யாஇரவில் எங்களுக்கு தூக்க மாத்திரை போட வேண்டிய அவசியமில்லை.

தலைவனிடத்தில் நம்பிக்கை வந்து விட்டதுஇந்த நம்பிக்கை ஒரு நாளில் வந்து விடுமோவரவே வராதுஒரு நாளில் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது.

குடிலுக்கு வந்துஞானிகளைப் பற்றி தினம்தினம் பேசவும்அவர்களுடைய நூல்களைப் படிக்கவும் வேண்டும்இப்படி இருந்தால்தான் அருள் கிடைக்கும்அருள் கிடைப்பவனுக்கு இருள் இருக்காது.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
திருக்குறள் - மெய் உணர்தல் - குறள் எண் 352

சமுதாயத்தில் இருக்கும் பாவம் தேய்ந்து புண்ணியம் பெருக வேண்டும்இருள் எப்படி இருக்கும்வெளிச்சம் இல்லாத இடத்தை இருள் என்பார்இருட்டை விரட்ட விளக்கை ஏற்றினால் போதுமாஇது இருள் இல்லையப்பா.

ஒன்றைப்பற்றி அறியக்கூடிய அறிவு நமக்கு இல்லையென்றால்அது இருள்தான். இன்றைக்கு மிகப்பெரும் கருணைக் கொண்டு பேசுகிறோம்நான் இனி பிறக்க விரும்பவில்லைஇப்படி கேட்க யாரும் சொல்லித்தர மாட்டார்கள்இது சின்ன விசயமில்லை.

நான் இனி பிறக்க விரும்பவில்லைநீர் எனக்கு அருள் செய்ய வேண்டும்இப்படி யாரை பார்த்து கேட்க வேண்டும்ஆசான் முதுபெரும் தலைவனைப் பார்த்து கேட்கவேண்டும்.

இனி நான் பிறக்க விரும்பவில்லையப்பாநீர்தான் எனக்கு அருள் செய்ய வேண்டும்இப்படித்தான் ஆசானிடம் கேட்க வேண்டும்இப்படி கேட்காமல் இருள் நீங்காதுஇப்படி கேட்பதற்கு நாம் சொல்லித்தரணும்நல்ல வெளிச்சத்தில்தான் இருக்கிறோம்ஆனால் ஆசான்இருட்டில் இருக்கிறான் என்பார்நல்ல வெளிச்சம்ஆனால் இருள் என்றார்.

இருள் நீங்கி இன்பம் பயக்கும் யாருக்குஅறியாமை நீங்கி இன்பம் பயக்கும்எது அறியாமையை உண்டு பண்ணுவதுஎது நம்மைத் தொடர்ந்து வஞ்சிக்கிறதுநம்மை வஞ்சிப்பது உடம்பாகிய இருள்காமதேகம் நீங்காமல் அறிவு வேலை செய்யாதுவெளிச்சம் வராது.

மருள் என்பது அறியாமைதடுமாற்றம்குற்றமுள்ள உடம்புகுற்றமற்ற தேகத்தைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறீர்கள்வேறு எந்த நோக்கமும் இல்லைநீங்கள் தொடர்ந்து இங்கே தொண்டு செய்கிறீர்கள்வருகின்ற மக்களுக்கு சாப்பாடு போடுகிறீர்கள்காலையிலும்மாலையிலும் இடத்தை சுத்தம் செய்கிறீர்கள்பிறகு அறிவுரைகளை கேட்கிறீர்கள்.

இதெல்லாம் எதற்கைய்யாஇங்கு வந்த நோக்கம் என்ன?
ஐயாநான் இருள் நீங்கி இன்பம் பெற வேண்டும்.
இருள் என்றால் அறியாமைஅறியாமையை உண்டு பண்ணுகின்ற காமத்தை நாம் உடைத்தெறிய வேண்டும்.
அப்ப மனைவி மக்களோடு இருக்கலாமா?
ஒன்றும் தடையில்லை.

கணவனுக்கு மனைவி துணைமனைவிக்கு கணவன் துணைஆக இருவரும் தெளிவான இடத்திற்கு வரும் வரையில் ஒருவரின் துணை ஒருவருக்கு இருக்க வேண்டும்ஆண்களாக இருந்தாலும் சரிஅது பெண்களாக இருந்தாலும் சரிஅவர்கள் ஒரு இடத்தை அடையும் வரையில் அவசியம் துணை இருக்க வேண்டும்அதற்கே பதினைந்து இருபது வருடங்கள் ஆகும்.

இந்த லட்சியத்தை அடைய இருபது வருடம் ஆகுமைய்யாஇந்த லட்சியத்தை அடைய கணவனுக்கு மனைவி தடையோமனைவிக்கு கணவன் தடையோபிள்ளைக்குத் தாய் தடையோதாய்க்குப் பிள்ளை தடையோஅல்லது உத்தியோகம்தான் தடையாக இருக்குமாஇருக்காது.

நாம் வேலைக்கு போகலாம்மனைவி மக்களோடு இருக்கலாம்அன்போடு குடும்பம் நடத்தலாம்நமது லட்சியம்ஒன்றே ஒன்று இருளை நீக்க வேண்டும்நம் உடம்பாகிய மாய்கையைகாமத்தை நீக்க வேண்டும்.

அப்ப இல்லறம் சிறக்காதாஎன்றான்இல்லறம் நல்லபடிதான் இருக்கும் ஒன்றும் நட்டமில்லைஇல்லறத்தை புரிந்து கொண்டவன்ஆசான் ஆசியை பெற்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறான்ஆனால் ஆசான் ஆசி பெறாதவன்வாழ்க்கையை புரியாமல் நடத்திக் கொண்டிருப்பான்.

இந்த தேகந்தான் அறியாமையை உண்டு பண்ணும்இதுவே காமதேகம். இதுவே இருள்ஆசான் ஆசி பெற்றவன் என்ன செய்வான்கணவன் துணை கொண்டு மனைவி வாழ வேண்டும்மனைவி துணை கொண்டு கணவன் வாழ வேண்டும்அப்படியே அதன் போக்கிலேயே போக வேண்டும்தெளிந்த அறிவு வரும்இதற்கு சுமார் 15, 20 ஆண்டுகள் ஆகும்பிறகு ஆசான் வந்து அருள் செய்வார்.

நல்ல பக்தி மேலோங்கியிருக்கிறதுபக்தி மேலோங்க மேலோங்க தன்னைப் பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்தன்னைப்பற்றி அறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தால்தன்னைப் பற்றிய பலகீனங்களை தெரிந்து கொள்வான்அப்படி தெரிந்து கொண்டால் வெல்லுகின்ற இடத்திற்கு வருவான்.

அப்ப மருள் நீங்கினால் போதுமா?
இந்த இடத்தில் இன்னொரு மர்மம் இருக்கிறது.
எதற்கு இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று சொன்னீர்கள்?
அறியாமை நீங்க வேண்டும் என்பதற்காக சொன்னேன்.

அறியாமையை உண்டு பண்ணுவது காம தேகம்காமதேகம் நீங்கினால் மட்டும் போதுமாசுத்தமான தேகம் வெளிப்பட வேண்டும்காமதேகம் தூக்கி எறியப்பட வேண்டும்பிறகுமருள் நீங்கி மாசறு காட்சியவர் என்றார்.

இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்னஇப்பொழுதே துவங்கினால் என்னஇருபது வயதில் ஆரம்பிக்கிறாய்நாற்பது வயதில் முடியட்டுமேமனைவி மக்களுடன் நாற்பது வயது வரை வாழ்ந்தால் போதாதாஐம்பது வயதிற்கு பிறகு என்ன செய்வாய்?

பிறந்தால்பிறந்ததின் நோக்கத்தை அடையக்கூடிய எண்ணம் இருக்க வேண்டும்மறுபடியும் மறுபடியும் இதிலேயே விழுந்து சாக வேண்டுமென்று நினைக்கின்றாயாநாம் இதுநாள் வரையிலும் குடும்பத்தைப் பற்றி இப்படி பேசவில்லைகுடும்பம் ஒன்றும் தடையாக இருக்க முடியாதல்லவாஅதற்குதான் சொன்னேன்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
திருக்குறள் - இல்வாழ்க்கை - குறள் எண் 47.

வாழ்க்கையின் இயல்பு அறிந்தவர்கள் என்ன செய்வார்கள்அதன் போக்கிலேயே சென்று வெற்றி பெறுவார்கள்மீண்டும் மீண்டும் இறந்து பிறக்க வேண்டுமாநாம் வந்த நோக்கமென்னநல்ல ஆசான் கிடைத்திருக்கிறார்அவரால் அறியக்கூடியவற்றை அறிந்து கொள்ளலாம்தெளிவான அறிவு பெறலாம்.

இப்படி இருப்பதற்கு பந்த பாசத்தை நீக்க வேண்டிய அவசியமில்லைஉலக நடையில் இருந்து கொண்டே இதை செய்து கொள்ளலாம்அது ஒரு அரிய வாய்ப்பு.

மாத்தானவத்தையும் மாயாபுரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோநித்தம் அன்பு கொண்டு
வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று
பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே.
மகான் பட்டினத்தார் பாடல் - பொது - கவி எண் 19

இல்லறத்திலிருப்பான்அதே நேரத்தில் ஞானியாகிக் கொண்டும் இருப்பான்என்ன காரணம்தலைவனை புரிந்து கொண்டான்தலைவன்தான் ஆசி வழங்குவார் என்பதையும் புரிந்து கொண்டான்.

மனைவி மக்களோடு இருக்கிறான்உலக நடையில் இருந்து கொண்டே இருக்கிறான்ஆனால் அவன்இல்லற ஞானியாக இருக்கிறான்நீ இல்லற ஞானியாக இருந்து இனி பிறவாமைக்குரிய மார்க்கத்தை கடைப்பிடிக்கின்றாயாஅல்லது மீண்டும் மீண்டும் இதிலேயே வீழ்ந்து நரகத்தில் மூழ்குகின்றாயாநீ வந்த நோக்கமென்னஇதைத்தான் நாம் கேட்கின்றோம்.

நான் இந்த சிந்தனையை உங்களிடம் தட்டி எழுப்புகின்றேன்நீங்கள் வந்த நோக்கம் என்னஎதற்காக நீ பிறந்தாய்பிறந்த நோக்கம் என்னஇதிலேயே உழன்று கிடப்பதாஅல்லது விட்டு விடுபட்டு தூக்கி எறிவதாஇதிலேயே உழன்று கிடப்பதற்குத்தான் நீ வந்தாயாஅல்லது இதை விட்டுவிட்டுப் போக வந்தாயாதேவையில்லைவிடவும் வேண்டாம்நன்றாகவும் வாழலாம்!

வாழ்க்கையின் இயல்பறிந்தவர்கள்அதன் போக்கிலேயே சென்றுஒவ்வொரு நாளும் தவறாது பூஜை செய்ய வேண்டும்பூஜை செய்தால்தான் சிறப்பறிவு வரும்இல்லையென்றால் உங்களால் ஒன்றும் முடியாது.

இங்கே வருகிறீர்கள்அன்னதானம் செய்கிறீர்கள்பொருளுதவி செய்கிறீர்கள்பொதுமக்களிடம் அன்னதானத்திற்கு பொருள் பெற்று அனுப்புகிறீர்கள்இதெல்லாம் உண்மைதான்.

இப்படி நான் பேசுவதற்கும்அதை நீங்கள் கேட்பதற்கும் புண்ணியம் செய்திருக்கின்றீர்கள்இல்லையென்றால் இந்த அளவுக்கு உங்கள் மீது கருணை கொண்டு பேசமாட்டோம்.

மலேசியாவில் ஆறேழு ஆண்டுகளாக ஆண்களும் பெண்களுமாக தன்னால் முடிந்த தொண்டு செய்கிறீர்கள்மேலும் பொது மக்களிடம் சென்றுஇந்தியாவில் ஏழை எளிய மக்கள் இருக்கின்றார்கள்அவர்கள் பசியாற பொருளுதவி செய்யுங்களென்று பொதுமக்களிடம் கேட்கிறீர்கள்அப்போது உங்களை பலர் இகழ்ந்து பேசுவதை சகித்துக் கொண்டுபொருளைத்திரட்டி தொண்டு செய்கிறீர்கள்.

ஆசான் இராமலிங்க சுவாமிகள்உம்மால் முடிந்ததைக் கொடுஇல்லையென்றால் யாரிடமாவது வாங்கியாவது கொடு என்பார். ஆகஅவர் சொல்லியபடிதன்னால் இயன்ற பொருளுதவி செய்தும்வாரந்தோறும் பொதுமக்களிடம் சென்று அன்னதானத்திற்கு பொருள் திரட்டி அனுப்புகிறீர்கள்.

நல்ல ஆசான் இருக்கிறார்அவரிடம் பொருள் கொடுத்தால்அதை முறைப்படுத்திஅன்பர்களின் துணை கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பசியாற்றுவிப்பார்கள்சுத்த ஆன்மீகம் பரவுவதற்காக கட்டிடங்கள் கட்டியிருக்கின்றோம்சும்மா ஆரவாரத்திற்காக இல்லைகட்டிடம் அமைத்த நோக்கம் நல்ல நோக்கம்.

இங்கே கட்டிடங்கள் இருப்பதால்தான்நான் அமர்ந்து பேசவும்நீங்கள் கேட்கவும் வாய்ப்பாக இருக்கின்றதுஇந்த கட்டிடங்கள்ஆன்மீகவாதிகள் தங்கி ஓய்வெடுக்கவும்பசியாறவும் பயன்படுகிறது.

இப்ப இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்றார்இது ஒன்றும் சாதாரண விஷயமல்லஇந்த இரகசியத்தை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது.

இருள் நீங்கி இன்பம் பயக்கும் - ஜீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றுபட்டதுஇடகலையும் பின்கலையும் ஒன்றுபட்டதுநல்வினையும் தீவினையும் ஒன்று பட்டதுமருளும்இருளும் ஒன்றுபட்டதுபாவ புண்ணியம் ஒன்றுபட்டது.

ஆசானும் சீடனும் ஒன்றுபட்டார்கள்ஆசானும் சீடனும் ஒன்றுபட்டால் என்னாகும்ஆணவம்கன்மம்மாயை என்கிற மும்மலமும் விலகிப் போகும்இந்த வாய்ப்பை நாம் பெறணும்.

நான் இத்தனை ஆண்டுகள் ஏன் இதை சொல்லவில்லைஇப்போது புண்ணியம் மிகுதியாக உங்களிடம் இருக்கிறதுஎனவே இதை சொல்லி வைக்கிறோம்நீங்களும் கேட்டு வைப்பதே நல்லதுநான் பிறக்க விரும்பவில்லைநான் பிறக்க விரும்பவில்லைஇது யார்

ஆசியால் முடியும்ஆசான் அகத்தீசன் ஆசியாலும்ஆசான் ஞானபண்டிதன் ஆசியாலும்தான் முடியும்ஆக இப்படிப்பட்ட பற்றற்ற தன்மைநமக்கு வருவது அவ்வளவு இலகு என்று நினைத்துவிடாதீர்கள்இதைக் கேட்டவுடனே மனைவி மக்களிடமிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள்.

இது கறையான் உலகை வலம் வந்தது போன்றதுஅது உலகை வலம் வந்தது போல் ஞான மார்க்கம் என்றான்நாம்நாக்கு தழும்பேறும் வரை பூஜையில் ஆசானை கேட்கவேண்டும்என்ன கேட்க வேண்டும்அடியேனுக்கு ஞானம் சித்திக்கணும்அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்எனக்கு ஞானம் சித்திக்க வேண்டுமப்பாஅதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்இப்படி எப்பொழுதும்

எந்த நேரத்திலும் இதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்எந்த நேரத்திலும்அகத்தீ°வராஅகத்தீ°வராஎன்றும்திருமூலதேவாதிருமூலதேவா என்றும் எப்பொழுதும் சொல்கிறோம்இவர்களெல்லாம் முதுபெரும் ஞானிகள்ஒரே தன்மையுள்ளவர்கள்ஆககறையான் உலகை வலம் வந்தது போல இந்த ஞான மார்க்கம் உள்ளது.

மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ ஞானத்தை அடைய முடியுமென்று நினைக்காதீர்கள்அப்படி நினைத்தால் ஏமாந்து போவீர்கள்இது எறும்பு ஊர கல் குழிந்தாற் போல என்பார்பாறையில் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து சென்று அப்பாறையில் குழி விழுவதற்கு எவ்வளவு காலம் ஆகுமோஅவ்வளவு நாளாகும் ஒருவன் இந்த துறையில் முன்னேறுவதற்கு.

ஞானத்தை அடைய மற்ற இடங்களில் என்ன சொல்வான்இந்த உண்மையை சொல்ல மாட்டான்உடனே மயக்குவான்மூச்சை இப்படி இழு என்பான்.யோகாப்பியாசம் இப்படி செய்யணும்அப்படி செய்யணும் என்று சொல்வான்.

நாம் யோகாப்பியாசம் உனக்கு வேண்டாமென்று சொல்வோம்யோகாப்பியாசம் என்பது ஆசான்தான் நடத்தித் தர வேண்டும்ஆனால் இதைப்பற்றியெல்லாம் தெரியாமல்அவன் யோகாப்பியாசத்தை பற்றி பேசுவான்.

ஆசான்யோகாப்பியாசம் பற்றி அறிந்துகொள்வதற்கேபத்துபதினைந்து வருடம் ஆகும் என்பார்ஆனால் இவனோஆறு மாதத்தில் ஞானியாகலாம் என்பான்இதுபோன்ற மயக்க வார்த்தை சொல்லிதன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றிவிடுவான்இதை மகான் தாயுமான சுவாமிகள் சொல்வார்.

கற்கண்டா லோடுகின்ற காக்கைபோற் பொய்மாயச்
சொற்கண்டா லோடுமன்பர் தோய்வறிவ தெந்நாளோ?
மகான் தாயுமான சுவாமிகள் பாடல் - அன்பர் நெறி - கவி எண் 5.

ஆகஇவர்களெல்லாம் உண்மை தெரியாதவர்கள் என்பார்.

ஆசான் கிருபையால்தான் வாசி வசப்படுமென்று நாங்கள் சொல்கிறோம்அதைத்தான் இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்று ஆசான் திருவள்ளுவர் சொன்னார்.

ஆனால்ஏமாற்றுபவன் அதெல்லாம் சொல்ல மாட்டான்இப்படி மூச்சைக் கட்டு என்பான்முன் உண்ட உணவு வயிற்றில் இருக்கும்பொழுதே மூச்சைக் கட்டுவான்அதைத்தான் மகான் சட்டமுனிவர் சொல்வார்.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூ°திரம் 21 - கவி எண் 17

பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே யடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீஷரைச் செய்துப தேசம்
கூத்திது வாகுங் கூடாது முத்தியே.
மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூத்திரம் 21 - கவி எண் 18


ஆகஅற்பமாம் மூடர் அறியாமல் யோகம் செய்வார்என்பார் ஆசான் சட்டமுனிவர்நாங்கள் இப்படி சொல்ல மாட்டோம்இது ஒன்றும் சின்ன விசயமில்லைஉடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்இதுதான் மீண்டும் மீண்டும் பிறவாமைக்குரிய மார்க்கம்உடம்பைக் காப்பாற்றாவிட்டால் செத்துப் போவான்கண்டபடி பிராணாயாமம் செய்பவனெல்லாம் செத்தே போவான்பிராணாயாமம் சொல்லிக் கொடுப்பவனும்வயிறு வீங்கிகால் வீங்கி சாவான்.

அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்

அற்பாம் மூடர் - மூடர்கள்அற்பர்கள்அற்பன்னா சின்ன புத்தியுள்ளவனென்று அர்த்தம்.

யோகத்தை சும்மா இலகு என்று நினைத்துக் கொண்டான்இப்படி இப்படி செய்தால் ஞானம் வந்துவிடும் என்று நினைத்தான்அவன் செய்தது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் போதிக்க ஆரம்பித்தான்.

சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்
கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம்

யோகநெறியில் வருகின்ற மக்களுக்கு சில பழங்களை உண்ண வேண்டுமென்று ஞானிகள் சொல்வார்கள்அதற்கு தலைவன் ஆசி வரும்யோகம் செய்யும் போதுஇந்த உடம்பில் அனல் ஏறும்அப்படி அனல் ஏறும்போதுஆசான் வகுத்துக்கொடுத்த பாசிப்பயறுபச்சரிசிபால்பழங்கள்இன்னும் சில மூலிகைகள் போன்றவற்றை சாப்பிட்டு உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம் - இந்த உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்எந்தெந்த உணவு தந்தால் உடம்பில் அதிக உஷ்ணம் ஏறாதுஎன்பதை தெரிந்து கொள்ளணும்இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது இது பயன்படுமல்லவா?

நாம் சாப்பிடுகின்ற உணவெல்லாம் கற்பதேகத்திற்கு ஆக்கம் தரும்ஏனய்யா உடம்பைக் காப்பாற்றுகிறாய்சோப்பு போட்டு கழுவுகிறாய்நன்றாக தூங்குகிறாய்அடிக்கடி டீ காபி குடிக்கிறாய்எதற்கைய்யா இந்த உடம்பைக் காப்பாற்றுகிறாய்நான் மனைவி மக்களோடு வாழ்வதற்கு என்பான்அதுதான் எல்லோரும் வாழ்ந்து சாகிறானேநீ என்னடா வாழ்கிறதுகால்நடைகூட வாழ்கிறதுகால்நடையும்தான் சாப்பிடுதுஇனப்பெருக்கம் செய்கிறதுதூங்குதுஉட்காருதுகடைசியில் இறக்கிறது.

தலைவன்நீ எதற்கு வந்தாய்என்பார்அங்கே மாடு படுத்திருப்பதை பார்த்தாயாஅதுவும் சாப்பிடுகிறதுகன்று போடுதுபால் கொடுக்கிறதுஅதுபோன்று வாழ்வதற்கு நாம் இங்கே பிறக்கவில்லைநாம் வந்ததின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உடம்பைக் காப்பாற்றுகின்ற கற்பத்தை நாம் அறிய வேண்டும்நாம் சாப்பிடுகின்ற உணவு உடம்பை வளர்க்கிறதுஅந்த உடம்பை வளர்ப்பது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகஉயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாப்பிடும்போதுஅந்த உணவு நீடிய ஆயுள் தரக்கூடியதாக இருக்க வேண்டும்உடல் வெப்பத்தைக் குறைப்பதாக இருக்க வேண்டும்இதைத்தான் ஆசான் சட்டமுனிவர் சொல்வார்.

கற்பமில்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செய் யோகம் அழிம்பிது பாரே.

உலக நடையில் உள்ள மக்கள்என்ன செய்கிறார்கள்அவரவர்கள் மனதில் பட்டதெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்நாங்கள் அப்படி பேச மாட்டோம்காரணம்ஞானத்துறையில்மனித வர்க்கம் அடையக்கூடிய மோட்சலாபத்தைப் பற்றி பேசுகிறோம்ஞானமார்க்கத்திற்கும் மோட்சலாபத்திற்கும் தலைவன் குருநாதன் முருகப்பெருமான் ஆசி இருக்க வேண்டும்இதைத்தான் ஆசான் அருணகிரிநாதர் “குருநாதன் சொன்ன சீலத்தை மெல்ல தெளிந்து அறிவார் சிவயோகிகளே காலத்தை வென்று இருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளேஎன்பார்.

எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்

ஞானத்திருவடி நூல் / GNANATHIRUVADI
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.

புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்

உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்

அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல்




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil

Posted by Nathan Surya 



No comments:

Post a Comment