ஞானத்திருவடி நூல்
சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல் ஞானத்திருவடி. ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் 37 ஆண்டுகளாக கடுந்தவம் இருந்து வருகிறார்கள். உலக மக்களுக்கு ஏற்படும் துன்பஙகளிலிருந்து விடுவித்து, ஞானிகளின் திருவடியைப் பூசிப்பதும், ஏழைகளின் பசியாற்றுவதுமே உண்மையான ஆன்மீகம் எனச் சொல்லி அவ்வழியில் நம்மை அழைத்துச் செல்கிறார். ஞானத்திருவடி நூல் ஞானிகளின் திருவடியாகும். இந்நூலில் ஞானிகள் பற்றிய பல அரிய தகவல்களும், ஓங்காரக்குடில் ஆசான் ஞானிகளின் பாடல்களுக்கு எளிய முறையில் அருளிய அருளுரைகளும் உள்ளது.சன்மார்க்க உண்மைப் பத்திரிகை
புண்ணியமான ஞானத்திருவடி நூலதனை
பார்த்தவர்கள் படித்தவர்கள் பல்லோர் அறிய
எண்ணியயவார் செய்திடவே வேண்டும் வேண்டும்
எடுத்துரைக்கும் அரங்கனின் உபதேசங்கள்
உபதேசங்கள் மானிடர்க்கு நல்வழி காட்டும்
உத்தமன் அரங்கன் உறவுதனை கொண்ட மக்கள்
எப்போதும் புண்ணியர்களாய் உலகில் வாழ்வார்
ஏற்றமுடன் நற்பண்பு குணம் அறிவும்
அறிவுபெற்று அகத்தியத்தை உணர்ந்துவிட்டால்
அண்டிடா பலதுயரம் விலகிவோடும்
குற்றமெனும் பகைதுன்பம் நோய்களோடு
காலனும் அஞ்சியே விலகி போவான்.
-மகான் அகத்தீசர் ஆசிநூல் ஓங்காரக்குடில் Ongarakudil


No comments:
Post a Comment